நாங்கூழ்

நாங்கூழ், மின்ஹா, கருப்புப்பிரதிகள் வெளியீடு, விலை: ரூ.70. கவிதைகள் பெரும்பாலும் நிரந்தர அர்த்தம் உடையவை அல்ல. அவை காலந்தோறும், நிலந்தோறும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அவரவருக்குத் தக்கவாறு தனித்துவமான நுகர்ச்சியை வழங்கக்கூடியவை. இவற்றைக் கடந்து கவிதைகளுக்குச் சில பொதுவான பண்புகள் உண்டு என்பதும் மறுக்க இயலாது. படைப்பிலக்கிய வகைமைகளில் மற்ற எல்லாவற்றையும்விடக் கவிதைகளின் பங்கே இவ்வுலகில் கணிசமானது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இயற்கையோடு இணைந்து வாழும் விருப்பமுடைய மனித மனம் ஏராளமான ரகசியங்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. ரகசியங்களில்தான் கடவுளும் படைப்பும் […]

Read more

100 கவிஞர்கள் 100 கவிதைகள்

100 கவிஞர்கள் 100 கவிதைகள், தொகுப்பாசிரியர் தங்கம் மூர்த்தி, அகநி வெளியீடு, விலை 130ரூ. சுரங்கத்தைத் தோண்டி தங்கம் வைரம் போன்றவற்றை எடுத்துக் கொடுப்பதுபோல, இலக்கியத் தரம் வாய்ந்த ஏராளமான கவிதைகளில், மனதைக் கவர்ந்த 100 கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த நூலில் தரப்பட்டுள்ளன. அப்துல் ரகுமான், வைரமுத்து, மு.மேத்தா, நா. காமராசன், ஈரோடு தமிழன்பன், நா. முத்துக்குமார், இன்குலாப், மனுஷ்ய புத்திரன், யுகபாரதி, ஆண்டாள் பிரியதர்ஷினி, தமிழச்சி தங்கபாண்டியன், அ.வெண்ணிலா, சல்மா உள்ளிட்ட 100 கவிஞர்களின் படைப்புகளை ஒருசேர இந்த நூலில் காணமுடிகிறது. பின் […]

Read more

குட்டி ரேவதி கவிதைகள்

குட்டி ரேவதி கவிதைகள், இரு தொகுதிகள், எழுத்துப் பிரசுரம், விலை: ரூ.1,149 (இரண்டு தொகுதிகளும் சேர்த்து) குட்டி ரேவதி கவிதைகள்: ஆதிக்கத்தின் வேரறுக்கும் எழுத்து பெண்களின் உலகத்தை ஆண் வரைவது என்பது கண்ணைக் கட்டிக்கொண்டு யானையைத் தடவி கருத்துச் சொல்லும் கதை. பெண்களால் எழுதப்படும் பெண்ணுலகம் அலங்காரங்களற்றது. அவற்றில் சில ஆண்களால் பின்னப்பட்ட வலைகளுக்கு வலுசேர்ப்பதாக அமைந்துவிடுகிறபோதும், புதுப் புனலெனப் பீறிட்டு எழுகிறவை பெண் விடுதலையை மையமாகக் கொண்டவை. பெண்களின் மனத்தையும் உடலையும் அவற்றின் மீது செலுத்தப்படும் ஆதிக்கத்தையும் சுரண்டலையும் வன்முறையையும் சமரசம் ஏதுமின்றி […]

Read more

தூண்டிலில் சிக்கிய கிளிஞ்சல்கள்

தூண்டிலில் சிக்கிய கிளிஞ்சல்கள், தொகுப்பு ஆசிரியர் மு.முருகேஷ், இனிய நந்தவனம் பதிப்பகம், விலை 100ரூ. கவிக்கோ பிறந்த நாளையொட்டி நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்ட 100 கவிஞர்கள் எழுதிய 500 ஹைக்கூ கவிதைகள் இந்த நூலில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நூலின் தொகுப்பு ஆசிரியர் மு.முருகேஷ், 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜப்பானிய மக்களின் வாழ்வில் ஏற்பட்ட மறுமலர்ச்சியால் உருவான ஹைக்கூ கவிதைகள், பின்னர் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை ஆய்வு நோக்கில் விரிவாகச் சொல்லி இருக்கிறார். அனைத்து ஹைக்கூ கவிதைகளும், கருத்தை அழகாகச் சொல்வதால், […]

Read more

தடையின் தடத்தில்

தடையின் தடத்தில், துரை.நந்தகுமார், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், விலை: ரூ.80. நோய்மைக் கால கவிதை ஆவணம் கரோனா பெருந்தொற்றுக் காலம் பல மனிதர்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டுவிட்டது. திசையெங்கும் அச்சத்தின் நிழலாட்டம். உயிரைப் பற்றிய நமுத்துப்போன உரையாடல்கள். பிள்ளைகளின் கல்வி நிலைகளில் விழுந்தன கறுப்புக் கோடுகள். பொருளாதார பலவீனங்களால் கனக்கும் குடும்பச் சுமைகள். நோய்மையின் இத்தகைய சுவடுகள் மறைய எவ்வளவு காலம் ஆகுமென்று எவராலும் சொல்ல முடியவில்லை. ‘விரல்விட்டு விரலுக்கு/ பூசப்படுகிறது மருதாணி’, ‘யாருமற்ற பள்ளிக்கூடம்/ அழிக்காத கரும்பலகையில்/ இருப்பது 40’. இதுபோன்று தனது கவிதைக்குள் […]

Read more

நீர்ச்சுழி

நீர்ச்சுழி, முத்துராசா குமார், சால்ட் வெளியீடு, விலை: ரூ.150. கைவிடப்பட்டவர்களின் குரல்கள் மயானக்கொள்ளையின்போது வலம்வரும் புகையிலைக்காரி, வில்லிசைப் பாட்டுக்காரி என்று கைவிடப்பட்ட அல்லது நமது நினைவுகளிலிருந்து மறைந்துபோன, அதிகம் பேசப்படாத மனிதர்களின் குரலைத் துல்லியமாகத் தனது ‘நீர்ச்சுழி’ கவிதைத் தொகுப்பில் பதிவுசெய்திருக்கிறார் முத்துராசா குமார். அவருடைய சிறுகதைகளிலும் இதே மனிதர்கள் தங்களின் வாழ்க்கைப் பாடுகளை விரிவாகப் பேசுகிறார்கள். ஆனால், கவிதையில் வெளிப்படும் சின்னச் சின்னத் தருணங்கள் அவர்களின் வாழ்க்கையை, அதன் மகத்துவத்தை மிளிரச் செய்கின்றன. உதாரணமாக, வில்லிசைக்காரி கவிதையை வாசிக்கையில் அவளுடைய இசையைவிட, அவள் […]

Read more

கல்லாப் பிழை

கல்லாப் பிழை, க.மோகனரங்கன், தமிழினி வெளியீடு, விலை: ரூ.90. க.மோகனரங்கன். இந்தப் பெயர் ஒரு மந்திரச் சொல். நினைவில் சட்டென நிதானத்தைக் கொண்டுவரும் தன்மை கொண்ட எழுத்துக்காரர். தூரிகைகளும் வர்ணங்களும் இல்லாது நம்முள் சித்திரங்களை வரைந்துசெல்லும் கவிமொழிக்காரர். தற்பெருமையும் தளும்புதலும் இல்லாது மொழிக்கு வளமை சேர்த்தபடியே இருப்பவர். நான்கு கவிதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரை நூல்கள், ஒரு கதைத் தொகுப்பு, இரு மொழிபெயர்ப்பு நூல்கள் என இவரின் பங்களிப்புகள் காத்திரமானவை. ‘வாசனை’ கவிதை வரைந்த பூக்கட்டும் பெண் தொடங்கி ‘கிளிப்பெண்’ணோடு கூடடைந்தது நல்ல அனுபவம். […]

Read more

நாங்கூழ்

நாங்கூழ், மின்ஹா, கருப்புப்பிரதிகள் வெளியீடு, விலை: ரூ.70. கவிதைகள் பெரும்பாலும் நிரந்தர அர்த்தம் உடையவை அல்ல. அவை காலந்தோறும், நிலந்தோறும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அவரவருக்குத் தக்கவாறு தனித்துவமான நுகர்ச்சியை வழங்கக்கூடியவை. இவற்றைக் கடந்து கவிதைகளுக்குச் சில பொதுவான பண்புகள் உண்டு என்பதும் மறுக்க இயலாது. படைப்பிலக்கிய வகைமைகளில் மற்ற எல்லாவற்றையும்விடக் கவிதைகளின் பங்கே இவ்வுலகில் கணிசமானது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இயற்கையோடு இணைந்து வாழும் விருப்பமுடைய மனித மனம் ஏராளமான ரகசியங்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. ரகசியங்களில்தான் கடவுளும் படைப்பும் […]

Read more

முறிந்த வானவில்

முறிந்த வானவில், கோ.வசந்தகுமாரன், தமிழ் அலை வெளியீடு, விலை: ரூ.100 முறிந்தாலும் வானவில்தான் ‘கவிதை என்பது ரொட்டி மாதிரி; படித்தவர்களும் பாமரர்களும் மகத்தான மானுடக் குடும்பத்தினர் அனைவரும் அப்படைப்பைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என பாப்லோ நெரூதாவின் கருத்தை முன் பக்கத்தில் பதிவிட்டு, அதைத் தொடர்ந்த பக்கங்களில் தொடரும் வசந்தகுமாரனின் கவிதைகள் அந்தக் கூற்றுக்கு சான்று பகிர்கின்றன. ‘ஒரு பறவையை வரைவதற்கு முன்  ஒரு கூட்டை வரைந்துவிடு பாவம் எங்கு போய் அவை தங்கும்’ என்பன போன்ற கவிதைகள் கருணையின் கோப்பையில் தேநீர் அருந்துகின்றன. ‘என்னை […]

Read more

நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்

நினைவின் ஆழியில் அலையும் கயல்கள், ரவிசுப்பிரமணியன், போதிவனம் பதிப்பகம், விலை: ரூ.150. இசை எனும் நீர் நல்லவற்றை அடையாளம் காணுதல் ஒரு கலை. தனக்கானதைக் கண்டடைந்து, அதைத் தன்னுணர்வாக மாற்றி பாடுபொருளின் பன்முகத்தன்மையை நம் பயணிப்புக்கு ஏதுவாக மாற்றம்கொள்ளவும் செய்திடுகிறார் கவிஞர் ரவிசுப்பிரமணியன். அன்றாடங்களில் நிகழும் சம்பவங்களில் கவிதைக்கான விதையைத் தேர்வுசெய்தல், திறம்பட மொழியில் பிணைத்தல், இசை எனும் நீரால் ஈரப்படுத்துதல் எனும் தொடர் செயல்பாடுகளால் தன் படைப்புகளுக்கு முழுமை தருகிறார் ரவிசுப்பிரமணியன். இயல்பில் அவர் பாடகராக இருப்பது அவரின் கவிதைகளுக்குக் கூடுதல் பலமாக […]

Read more
1 2 3 4 5 57