கருவறைத் தேசம்

கருவறைத் தேசம், முனைவர் இரா.சந்திரசேகரன், நண்பர்கள் தோட்டம், விலைரூ.180 கவிதை ஒரு சுரங்கம். தோண்டத் தோண்டச் சுரக்கும் நீரூற்று. வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் அமுதம். அழகிய கவிதைகளுக்கு உயிரூட்டியுள்ளார் இக்கவிஞர். பூமியைத் தாயாக்கி, அத்தாயின் கருவறையில் உயிருள்ள மனித இனம் மட்டுமன்றி, பல்வேறு உயிரினங்களும் தோன்றியதை, உயிர்கள் கூட்டம் பல உருவாய் அபயம் கொண்டன! என்று வண்ணம் சேர்க்கிறார். வாழும் இக்கருவறை – பூமித்தாய். அவள் அன்பும், கருணையும் மிக்கவள். இத்தாயின் அற்புதங்களை உணர்ந்திருப்பினும், அவை ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டும் ‘எளிய கற்பனை கலந்த கவிதை வரிகள்’ […]

Read more

அந்த விளக்கின் ஒளி பரவாதது

அந்த விளக்கின் ஒளி பரவாதது, அகச்சேரன், புது எழுத்து, விலை: ரூ.50 குறைவாகவே எழுதினாலும் அதில் ஒரு திருப்தி காண்பவர் அகச்சேரன். அவருடைய ‘அன்பின் நடுநரம்பு’ கவிதைத் தொகுப்பு வெளியாகி 7 ஆண்டுகள் கழித்து இந்த நூல் வெளியாகியிருக்கிறது. மொத்தம் 29 கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. ‘சிறியதே அழகு’ என்பதற்கொப்ப தொகுப்பும் சிறியது, கவிதைகளும் சிறியவை. காலத்துக்கேற்ப கவிதைகளில் பல்வேறு போக்குகள் ஏற்பட்டாலும் சில விஷயங்கள் மட்டும் கவிதைகளுக்கு என்றும் மாறாதவை. அவற்றுள் இருத்தலின் பதைபதைப்பும் ஒன்று. நவீன மனிதனுக்கு ஒவ்வொரு பொழுதின் […]

Read more

மகரந்தம் தூவும் மலர்கள்

மகரந்தம் தூவும் மலர்கள், அன்புச்செல்வி சுப்புராஜு, நிவேதிதா பதிப்பகம், விலை 130ரூ. தம்மை முழுமையாக ஈடுபடுத்தி எழுதுவதை முதன்மையாகக் கொண்டவை தன்முனைக் கவிதைகள் எனப்படுகின்றன. கவிதை உலகில் விருதுகள் பெற்ற பிரபல பெண் கவிஞர்கள் 26பேர்களின் தன்முனைக் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த நூலில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. வாழ்வியல் யதார்த்தம், தத்துவம், காதல் போன்ற பண்புகளை இந்தக் கவிதைகளில் காணமுடிகிறது. நன்றி: தினதந்தி, 17/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்

பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும், இளங்கோ கிருஷ்ணன், புது எழுத்து வெளியீடு, விலை: ரூ.80 பிரக்ஞையும் தன்மிதப்பும் இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதத் தொடங்கிய இளங்கோ கிருஷ்ணன், காத்திரமான கவிஞராகவும் விமர்சகராகவும் விளங்குபவர். கவிதை வாசகர்களிடையே பேசப்பட்ட தொகுதிகளான ‘காயசண்டிகை’, ‘பட்சியன் சரிதம்’ நூல்களை அடுத்து ‘பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்’ தொகுதியில் கவிதை வெளியீடு சார்ந்த சரளத்தை இளங்கோ கிருஷ்ணன் அநாயசமாக எட்டியுள்ளார். சத்தமான உரையாடலின் தொனியைக் கொண்ட இந்தக் கவிதைகளில் இளங்கோவின் குரல் கேட்கிறது. நகல் குரல்களும் போலிக் குரல்களும் பெருகியுள்ள நவீனக் […]

Read more

இசை எனும் நீர்

இசை எனும் நீர், நினைவின் ஆழியில் அலையும் கயல்கள், ரவிசுப்பிரமணியன், போதிவனம் பதிப்பகம், விலை: ரூ.150 நல்லவற்றை அடையாளம் காணுதல் ஒரு கலை. தனக்கானதைக் கண்டடைந்து, அதைத் தன்னுணர்வாக மாற்றி பாடுபொருளின் பன்முகத்தன்மையை நம் பயணிப்புக்கு ஏதுவாக மாற்றம்கொள்ளவும் செய்திடுகிறார் கவிஞர் ரவிசுப்பிரமணியன். அன்றாடங்களில் நிகழும் சம்பவங்களில் கவிதைக்கான விதையைத் தேர்வுசெய்தல், திறம்பட மொழியில் பிணைத்தல், இசை எனும் நீரால் ஈரப்படுத்துதல் எனும் தொடர் செயல்பாடுகளால் தன் படைப்புகளுக்கு முழுமை தருகிறார் ரவிசுப்பிரமணியன். இயல்பில் அவர் பாடகராக இருப்பது அவரின் கவிதைகளுக்குக் கூடுதல் பலமாக […]

Read more

வல்லபி

வல்லபி, தேன்மொழி தாஸ், எழுத்துப் பிரசுரம் வெளியீடு, விலை: ரூ.200 தேன்மொழி தாஸின் கவிதைகளைப் படிக்கும்போது சமவெளியிலிருந்து வந்து தன்னை நேசித்துவிட்டுப் பிரிந்துசென்ற ஒருத்தனுக்காக ஒரு மலை தேவதை நெடிய காத்திருப்பில் இருப்பதுபோன்ற பிம்பம் உருவாகும். குறிஞ்சி நிலத்தில் பிறந்த தேன்மொழி தாஸின் பெரும்பாலான கவிதைகளுக்கான உரிப்பொருள் முல்லைத் திணைக்கான காத்திருத்தலும், பாலைத் திணைக்கான பிரிவும்தான். திணை மயக்கம் சங்கக் கவிதைகளிலேயே காணப்படும் ஒரு விஷயம்தான் என்பதால் நவீன கவிதை அந்தக் கட்டுப்பாட்டையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லைதான். இந்தத் திணை மயக்கம்தான் தேன்மொழி தாஸின் கவிதைகளுக்கு ஒருங்கே அழகும் துயரமும் […]

Read more

ஆயுதங்களின் நடுவே எழுந்த ஆத்மராகம்

ஆயுதங்களின் நடுவே எழுந்த ஆத்மராகம், நெல்லை கிருஷ்ணன், ராஜமரகம் வெளியீடு, விலை 400ரூ. மகாபாரத போர்க் களத்தில் ஆயுதம் ஏந்த தயங்கி நின்ற அர்ச்சுனனுக்கு பகவான் கிருஷ்ணர் உபதேசித்த பகவத்கீதை கவி நாடக வடிவில் தரப்பட்டு இருக்கிறத. பகவத் கீதையை மட்டும் சொல்லாமல், போர்க்களம் தொடர்பான அத்தனை நிகழ்வுகளையும் நாடகமாக ஆக்கி இருக்கிறார் ஆசிரியர். திருதராஷ்டிரனுக்கும் சஞ்சயனுக்கும் இடையே நடைபெறும் விவாதம் தொடங்கி, பகவத் கீதை உபதேசம் உள்பட அத்தனை சம்பவங்களும் திறம்பட காட்சி ரூபம் ஆக்கப்பட்டு, எளியநடையிலான மரபுக் கவிதைகளாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. […]

Read more

உயர்திணைப் பறவை

உயர்திணைப் பறவை, கதிர்பாரதி, இன்சொல் வெளியீடு, விலை: ரூ.260 கச்சிதங்களின் அழகு உபகரணங்கள் எளிதில் கிட்டுவதால், எல்லோருக்கும் எல்லாவற்றையும் செய்யும் சாத்தியம் உண்டு. எல்லோராலும் செய்யப்படுவதால் அது மலினமானதும் அல்ல. அவரவர்களின் மனநிறைவே அவர்களின் படைப்பின் தன்மையாக இருக்கும். அதேபோல, அடையாளப்படுத்துதல், உணரச்செய்தல் என்ற இரு நிலைகளை எடுத்துக்கொண்டால் உணரச்செய்யும் படைப்புகளே மனதில் நிற்பதாகத் தோன்றுவதுண்டு. சூரியனையும் நிலவையும் வரைவது எளிது. ஆனால், நிலவின் குளிர்ச்சியையும், சூரியனின் தகிப்பையும் நமக்குள் கடத்தப்படுதல் வேண்டும். தான் நம்பும் கலை மீது அதீதப் பிரியம் கொண்டவர்களால் மட்டுமே […]

Read more

கனவும் விடியும்

கனவும் விடியும், அ.வெண்ணிலா, சாகித்ய அகாடமி, பக்.224, விலை 200ரூ. இந்நுாலில், முதன்முறையாய் பெண்ணே தன் உடலைப் பற்றி எழுத்தாணியால் எழுத முயன்று, ஆழக் கடலில் முத்தெடுத்துள்ளாள். ‘ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும், சிசு கண்ட அதிர்வில் குருதியின் பாலையும் சாறெடுக்கின்றன. ஒரு நிறைவேறாத காதலின் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்த் துளியாய்த் தேங்கித் தளும்புகின்றன!’ என்ற கவிதை வரிகள், ‘தாய்மையின் ஊற்றுக் கண்ணாய் போற்றப்படும் முலைகள்’ பெண்ணுக்குத் தோன்றும் விதம் ஆச்சர்யமூட்டும். நவீன அடையாளம் கொண்ட பெண்கவிகளின் கவிதைகள் தொகுக்கப்பட்ட நுால் எனலாம். இருபதாம் […]

Read more

மணல் உரையாடல்

மணல் உரையாடல், கவிதைகள், இசாக், தமிழ் அலை, விலை 150ரூ. பொருளின் பொருள்பார்த்த முகமெல்லாம் வேற்று முகமாக இருக்கும் வெளிநாட்டுப் பணியில்… தயக்கங்களுடன் போராடிய நினைவுகளின் தொகுப்பாக மணல் உரையாடல் கவிதைகளை எழுதியிருக்கிறார் கவிஞர் இசாக். நாடு அந்நியமாதல், மொழி அந்நியமாதல், உறவுகள் அந்நியமாதல், ஊர் அந்நியமாதல் என்பதெல்லாம் மானுட வாழ்வின் பெரிய துயரங்கள்தான் என்றாலும், ஒருவருக்கு தன் சொந்தவீடே அந்நியமாகிப் போகும் கொடிய துயரம் போன்ற பிரிதல்களில் ஏற்பட்டு விடுவதை எளிய சொற்களால் “கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக் காணப் போகிற மகிழ்ச்சிஎனக்குள்ரசித்து […]

Read more
1 3 4 5 6 7 57