சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு

சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு, கவிதா பதிப்பகம், 8 மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை 17, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-809-4.html ஊமைப்பட காலத்திலேயே உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தவர், சார்லி சாப்ளின், அவருடைய நகைச்சுவையில் சிந்தனையும் கலந்திருக்கும். இளமைபில் சாப்ளின் வறுமையில் வாடினார். தாங்க முடியாத துன்பங்களை அனுபவித்தார். வேறொருவராக இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று சொல்லக்கூடிய விதத்தில் இருந்தது அவருடைய குடும்ப வாழ்க்கை. சாப்ளின் பற்றி பல […]

Read more

விக்ரமாதித்யனின் அவன் எப்போது தாத்தாவானான்

அவன் எப்போது தாத்தாவானான், விக்ரமாதித்யன், நற்றிணை பதிப்பகம், 243A, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 5, பக்கங்கள் 128, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-799-7.html கவிதையின் ஆழம் தெரிந்தவர்களுக்கு விக்ரமாதித்யனின் குரல் கேட்காமல் போனதில்லை. ‘அவன் எப்போது தாத்தாவானான்’-இல் கேட்பதெல்லாம் தன்னுணர்ச்சிக் குரல்கள்தான். ஆனால் அத்தனையும் தனித்துவம் மிக்கவை. வாசிப்போர் யாவரையும் வசப்படுத்திவிடக்கூடிய கவிதைக்குரல் அது. கவிஞனும் / சிந்தனைப் போலத்தான் / என்ன இவன் வார்த்தைகள் வரிகள் என / இருக்கிறான் / […]

Read more

கொண்டலாத்தி

கொண்டலாத்தி, எழுதியவர்: ஆசை, பக்கம் 62, க்ரியா, சென்னை. விலை ரூ. 180 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-722-7.html புள்ளினங்கள் பற்றி நாற்பத்திரெண்டு எழிலான கவிதைகள், அவைகளில் வெளிப்படும் பறவைகளின் தீவிர ஈடுபாடு, கண்ணையும் மனதையும் கவரும் துல்லியமான புகைப்படங்கள், உள்ளடக்கத்திற்கேற்ற நூல் உருவாக்கம். சுகமான வாசிப்பனுபவம் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தாலே மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்நூலின் ஆசிரியர், ஆசை என்று கையெழுத்திட்டிருக்கும் ஆசைத்தம்பி, முன்னர் ‘சித்து’ என்ற கவிதைத்தொகுப்பின் மூலம் தமிழ் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தமிழுக்கு எவ்வளவு நீண்ட கவிதை மரபு […]

Read more

சொற்கள்

சொற்கள், ழாக் ப்ரெவெர், க்ரியா பதிப்பகம், புதிய எண் 2, பழைய எண் 25, முதல்தளம், 17வது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை – 41. விலை ரூ. 110 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-722-5.html கவிஞர்களின் கவிஞர்கள் இருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தின் கவிதை மொழியையே மாற்றி அமைக்கும் கவிஞர்கள் இருக்கிறார்கள். பிரெஞ்சு கவிஞரான ழாக் ப்ரெவெர் அப்படிப்பட்ட ஒரு கவிஞர்தான். தமிழில் ழாக் ப்ரெவெரின் கவிதைகள் வெளிவந்தபோது இளம் கவிஞர்களிடையே அது ஒரு பெரிய அலையை […]

Read more

ஒலிக்காத இளவேனில்

ஒலிக்காத இளவேனில், தொகுப்பு : தான்யா, பிரதீபா கனகா – தில்லைநாதன், வெளியீடு: வடலி, 10வது குறுக்குத் தெரு, ட்ரஸ்ட்புரம் ரோடு, கோடம்பாக்கம், சென்னை – 600024. விலை ரூ. 135/- ஈழத்து இலக்கியம் பல்வேறு குரல்களோடும் முகங்களோடும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் வெளிவந்திருக்கும் இன்னொரு முக்கியமான தொகுப்பு ‘ஒலிக்காத இளவேனில்’. புலம்பெயர்ந்த இலங்கைப் பெண்கள் எழுதிய கவிதைகள் என்ற பொது அடையாளத்தின்கீழ் தொகுக்கப்பட்டுள்ள இந்தக் கவிதைகள், தமிழில் பெண் கவிதை மொழிக்குப் புதிய சாரத்தை வழங்குகின்றன. ஈழத்துப் பெண்கள் ஆணாதிக்க […]

Read more

வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்)

மலைப்பாதையில் நடந்த வெளிச்சம், பத்மஜா நாராயணன், டிஸ்கவரி புக் பேலஸ் (பி)லிட், விலை 70 ரூ கவிஞர் பத்மஜா நாராயணனின் கவிதைத் தொகுப்பைப் படிக்கும்போது, ஒவ்வொரு கவிதையும் அவரவர் தம் சுய அனுபவங்களோடு ஒத்துப் போகிற பாதிப்பை ஏற்படுத்துகிறது. ‘உனக்கும் எனக்கும் நடுவே அலைகின்றன, நமக்கான வார்த்தைகள்’ என்கிற வரிகள், வாழ்வின் ஏதாவது ஓர் இடத்தில் தவிர்க்க முடியாததுதானே… ‘எல்லாப் பொறிகளிலும் இலகுவாய் போய் சிக்கிக் கொள்கிற சுயம். எந்தப் பொறிக்கும் வேண்டப்படாத வஸ்துவாய் பொறியிலிருந்து இடதுகையால் தூக்கி எறியப்படும் நானானது மற்றொரு பொறியில்தான் […]

Read more

இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி

  இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி, ஜெயம் கொண்டான், ஸ்ரீ கள்ளழகர் பதிப்பகம், 41, காமராசர் சாலை, அசோக்நகர், சென்னை – 600083, விலை 60 ரூ. தம்முடைய பள்ளிப் பருவ காலத்தில் தோன்றிய சினேகித சினேகிதங்கள் நட்பின் இலக்கணச் சுருதிகளை அவர்களிடம் இருந்து கண்டதையும் கேட்டதையும் பார்த்ததையும் கற்றதையும் இந்நூலில் அழகாக மீட்டியுள்ளார் கவிஞர் ஜெயம் கொண்டான். கவிதையே மௌனமாக இருந்து என்னைப் பேச வைத்தாய்… நான் பேச ஆரம்பித்ததும் நீ மௌனமாகிவிட்டாய். இதுபோன்ற எளிய யதார்த்த புனைவு இந்தக் கவிதை நூல். […]

Read more

இரவைப் பருகும் பறவை

இரவைப் பருகும் பறவை ஆசிரியர் – லாவண்யா சுந்தரராஜன் காலச்சுவடு பதிப்பகம் 667, கே. பி. சாலை நாகர்கோவில் மு. ப. நவ. 2011 பக்கங்கள் 80 விலை 70ரூ. பிரியத்தால் நிரப்பிய குவலை மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரியும் லாவண்யா சுந்தரராஜன் எழுதியிருக்கும் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இரவைப் பருகும் பறவை. தமிழ்ச்சூழலில் பெண் கவிதைகளுக்கென ஒரு சிலந்தி வலை பிண்ணப்பட்டுள்ளது. அந்த வலைக்குள் அகப்படாத கவிஞர் லாவண்யா. தனக்கென ஒரு கவிதை மொழியை உருவாக்கிக்கொண்டு அதன் அடுத்த கட்டத் தேடலாகத்தான் இவரது கவிதைகள் […]

Read more

கால வரிசையில் பாரதி பாடல்கள்

கால வரிசையில் பாரதி பாடல்கள், பதிப்பாசிரியர் – சீனி. விசுவநாதன், விலை 650ரூ., வெளியீடு – சீனி. விசுவநாதன், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை 35. மகாகவி பாரதி மீது தீராத பக்தி பூண்டு, பாரதியின் படைப்புகள் அனைத்தையும் தேடிப் பிடித்து ஒருங்கிணைக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் இந்நூலின் படைப்பாசிரியர். இவரது கடின உழைப்பை பாரதியின் உடன்பிறந்த தம்பி சி.விசுவநாதனும், கவிஞர் கண்ணாதசனுமே வியந்து பாராட்டியுள்ளனர். அதன்படி பாரதியின் படைப்புகள் அனைத்தையும் காலவரிசையில் தனித் தனியாகத் தொகுத்து, அவற்றை […]

Read more
1 55 56 57