தொட்டிலோசை

தொட்டிலோசை, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், விலைரூ.150. தாய்மையை நெகிழ்ந்து போற்றி எழுதப்பட்டுள்ள புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால். கவிஞர் வைரமுத்துவின் முன்னுரையுடன் உள்ளது. முதலில், ‘அம்மா இது நீ உறங்க நான் இசைக்கும் தாலாட்டல்ல; உன்னை வணங்க நான் வடிக்கும் பாராட்டு’ என துவங்குகிறது. தொடர்ந்து தாய்மையின் தன்னிகரற்ற பண்புகளை, தியாகத்தை கூர்மையான வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறது. இடையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் கவிஞர்கள் வாலி, சிற்பி, மு.மேத்தா என பிரபலங்கள், தங்கள் தாய் குறித்து எழுதியுள்ள கவிதைகள் இடம் பெற்றுள்ளன. தாய்மையை எண்ணி […]

Read more

அறுபது கவிதைகள்

அறுபது கவிதைகள், அய்யாறு.ச.புகழேந்தி, பாரதி பித்தன் பதிப்பகம்,விலை: ரூ.60. ‘தி இந்து’ குழுமத்தின் ‘காமதேனு’ வார இதழ், ‘ஆனந்த விகடன்’, ‘குங்குமம், ‘ராணி முத்து’ ஆகிய வெகுஜன இதழ்கள், ‘தாமரை’, ‘கணையாழி’ உள்ளிட்ட சிற்றிதழ்களில் வெளியான புகழேந்தியின் கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. நன்றி: தமிழ் இந்து, 22/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

மொழிபெயர்ப்புக் கவிதைகள், தமிழில்: ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ், ஷேக்ஸ்பியர்ஸ் டெஸ்க், விலை: ரூ.120. அமெரிக்கப் பெண் கவிஞர் எமிலி டிக்கின்சன், இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞருமான டி.எச்.லாரன்ஸ் ஆகியோரின் கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கூடவே, அவர்கள் இருவரின் வாழ்க்கைக் குறிப்புகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நன்றி: தமிழ் இந்து, 29/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சிறகுகள் விரித்திடு

சிறகுகள் விரித்திடு (கவிதையும் கதையும்), அ.அமல்ராஜ், விஜயா பதிப்பகம், பக்.248, விலை ரூ.200. ஒருவரின் ஆளுமை, அறிவாற்றலை மேம்படுத்துவதில் கதைகளின் பங்களிப்பு இன்றியமையாதது. அதேபோன்று சமூகப் பொறுப்பு மிக்க கவிதைகள் படிப்பவரின் மனதில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் எளிமையாகப் புனையப்பட்ட நூறு இனிய கதைகளையும், அதைச் சார்ந்த அர்த்தமுள்ள நூறு கதைகளையும் சுமந்து வந்திருக்கிறது “சிறகுகள் விரித்திடு’ நூல். இதில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கதைகளும் மற்றும் கவிதைகளும் நம்மை புதிய பயணத்துக்கு அழைத்துச் செல்கின்றன. குறிப்பாக, “முடியும் என்றால் முடியும்’, […]

Read more

தேனீர் என்று பெயரிட்டு கொண்டவன்

தேனீர் என்று பெயரிட்டு கொண்டவன், ஆளி சந்திரன், சித்ரகலா பதிப்பகம், விலை 100. மனதில் தோன்றிய பல விதமான எண்ணங்களை அழகிய புதுக்கவிதைகளாக ஆக்கித் தந்திருக்கிறார் ஆசிரியர். அவரது எண்ண ஓட்டத்தில் பிறந்த இந்த கவிதைகள் அனைத்திலும் ஆழமான பொருள் புதைந்து இருப்பதை தெரிந்து கொள்ளலாம். நன்றி: தினத்தந்தி, 28/11/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பீ கேர் ஃபுல்

பீ கேர் ஃபுல், மதுரை சத்யா, செங்கனி பப்ளிகேஷன்ஸ், விலைரூ.100. அனுபவங்களால் கற்றுக் கொண்டதை கவிதை போல் வெளிப்படுத்தும் முயற்சி. சொற்குவியலின் தொகுப்பு நுால். சிறிய கவிதை வடிவில் நடப்புகள் சொல்லப்பட்டுள்ளன. முதல் கவிதை, ‘அன்பின் கண்ணாடியை கழற்றிய பின்பே நம்மால் விரும்பப்பட்ட செயல்களை எல்லாம் குருட்டுத்தனம் என்கிறோம்’ என உள்ளது. இது போல் நேரடியாக கருத்துக்களை சொல்லும் கவிதைகள் அடங்கிய புத்தகம். ஒன்றை சொல்லும் முன் ஆயிரம் முறையும், எழுதும் முன் பல்லாயிரம் முறையும் யோசிக்க வேண்டும் என்ற முன்னுரையுடன் வெளிவந்துள்ள நுால். […]

Read more

மூன்றடிகளில் மலர்ந்த புறநானுாறு

மூன்றடிகளில் மலர்ந்த புறநானுாறு, கா.ந.கல்யாணசுந்தரம், கவிஓவியா பதிப்பகம், விலைரூ.150 புறநானுாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பாடல்களுக்கு எளிய தமிழில் மூன்று அடி கவிதைகளாக வழங்கியுள்ள நுால். தேவைக்கேற்ப ஓவியங்களை அமைத்தும் சிறப்புற விளங்குகிறது. திணை, துறை விளக்கங்கள், புறநானுாற்று செய்யுள்களில் பாடப்பட்ட பெருஞ்சேரல் இரும்பொறை, கிள்ளி வளவன், அதியமான், குமணன், திருமுடிக்காரி, பேகன், வேள்பாரி, அறிவுடைநம்பி, ஓரி, கோப்பெருநள்ளி, ஆய், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கரிகால் பெருவளத்தான், பள்ளி துஞ்சிய நன்மாறன், முதுகுடுமிப் பெருவழுதி, சேரல் இரும்பொறை போன்ற மன்னர்களின் வரலாறு சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. – முனைவர் […]

Read more

ஆகாயக் கதவு

ஆகாயக் கதவு, ஏ.இளமதி, குறி வெளியீடு, விலை 100ரூ. நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி எழுதிய 32 கவிதைகள் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. அனைத்தையும் அந்த சிறுமியின் கையெழுத்திலேயே கொடுத்து இருப்பதுடன், அதற்குத் தக்க அந்தச் சிறுமி வரைந்த ஓவியங்களையும் இடம்பெறச் செய்து இருப்பது பாராட்டுக்குரியது. நன்றி: தினத்தந்தி, 5/12/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நெடுமரங்களாய் வாழ்தல்

நெடுமரங்களாய் வாழ்தல், ஆழியாள், அணங்கு பெண்ணியப் பதிப்பகம், விலை: ரூ.70. ஆறாத பெருவலி இந்தியப் பெருங்கடலில் முலைப்பால் துளியாய்ச் சொட்டி நிற்கும் சின்னஞ்சிறிய இலங்கைத் தீவில் போரால் பாதிக்கப்பட்டு, பசிபிக் சமுத்திரத்தில் முதிய ஆமைபோல் மிதக்கும் ஆஸ்ரேலியப் பெருந்தீவுக்குத் தன்னைக் கடத்திக் கொண்டவர்களின் ஆறாத பெருவலியைச் சொல்கிறது ஆழியாளின் இந்தத் தொகுப்பு. இதிலிருக்கும் கவிதைகள் ஒரு தலைமுறையின் நெடுந்துயரை, வாழ்வின் இருண்மைகளை, கனவின் அதீதத்தைக் காட்சிப்படுத்துகின்றன. எளிய சொற்களின் ஒளிர்தலில் உயிர்ப்பைக் கண்டடைதலும் இனப்பேரழிவின் எச்சத்தில் மூச்செடுக்கும் மொழியுடலும்தான் ஆழியாளின் கவிதைகள். நன்றி: தமிழ் […]

Read more

கேள்விகளின் புத்தகம்

கேள்விகளின் புத்தகம், பாப்லோ நெரூதா, தமிழில்: பிரம்மராஜன், சொற்கள் வெளியீடு, விலை: ரூ.425 பாப்லோ நெரூதா எழுதிய நூற்றுக்கணக்கான கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்து பிரம்மராஜன் மொழிபெயர்த்திருக்கும் பெருந்தொகுப்பு இது. இயற்கை, உலகில் இருக்கும் வெவ்வேறு பொருட்கள் தொடர்பில் கவிஞனுக்கே உரிய விந்தையுடன் எழுப்பப்பட்ட கேள்விகளாக நெரூதா எழுதிய ‘கேள்விகளின் புத்தகம்’ கவிதைகள் இந்தத் தொகுப்பின் முதல் பகுதி. அரசியல் கவிஞராகத் தமிழில் அறிமுகமாகியிருக்கும் நெரூதாவின் வேறு பரிமாணத்தை வெளிப்படுத்தும் கவிதைகள் இன்னொரு பகுதி. நெரூதாவை அறிந்துகொள்வதற்கான சிறந்த கட்டுரையும் குறிப்புகளும் இந்நூலில் உண்டு. கவிதைகளுக்கேற்ற ஓவியங்களும் […]

Read more
1 2 3 4 57