பெரியார் ஈ.வே.ரா. வாழ்க்கை வரலாறு

பெரியார் ஈ.வே.ரா. வாழ்க்கை வரலாறு, சாமி.சிதம்பரனார், வைகுந்த் பதிப்பகம், விலை 115ரூ. தந்தை ஈ.வே.ரா. பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரைத் தூற்றியவர்கள் கூட இப்போது போற்றுகிறார்கள் என்ற உன்னத நிலையைப் பெரியார் அடைந்தது எவ்வாறு என்பதைத் தற்கால சமுதாயத்தினர் தெரிந்து கொள்ள உதவும் வகையில் அவரது விரிவான வாழ்க்கை வரலாற்று நூலாக இது அமைந்து இருக்கிறது. அவர் மதப் புரட்சிக்காரராகவும், அரசியல் புரட்சிக்காரராகவும் இருக் கவேண்டிய அவசியம் ஏற்பட்டது எதனால் என்ற வரலாற்றுத் தகவல் இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. பெரியார் வாழ்வில் நடைபெற்ற […]

Read more

இந்தியா அழைக்கிறது

இந்தியா அழைக்கிறது, ஆனந்த் கிரிதரதாஸ், தமிழில்: அவைநாயகன், அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக்.360, விலை ரூ.300. 1970 – களில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா நாட்டில் கிளீவ்லாந்தின் ஓஹியோ புறநகர்ப் பகுதிக்கு குடி பெயர்ந்த இந்தியப் பெற்றோருக்குப் பிறந்தவர் நூலாசிரியரான ஆனந்த் கிரிதரதாஸ். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவாக இருந்தாலும், அவருள்ளே இந்திய மண்ணின் மீதான தாகம் எப்போதும்நிறைந்திருந்ததால், அமெரிக்காவில் இருந்த மெக்கின்சி நிறுவனத்தின் இந்தியக் கிளைக்கு வேலைக்கு விண்ணப்பித்து இந்தியா வந்து சேர்ந்தார். வேலை தொடர்பாகவும், தன் ஆர்வத்தின் காரணமாகவும் இந்தியாவின் பல […]

Read more

கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு

கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு,  மிகையீல் நைமி, மலையாளத்தில் எம்.ஏ.அஸ்கர், தமிழில்: சிற்பி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்,  பக். 160,  விலை ரூ.150. கலீல் ஜிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். அவருடைய இளம் வயதில் அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு அவர் குடும்பம் இடம் பெயர்கிறது. மிகுந்த வறுமையில் வாடிக் கொண்டிருந்த சிறுவனான கலீல் ஜிப்ரான், ஓவியம் வரைவதில் ஆர்வம் உடையவராக இருக்கிறார். ஓவியக் கண்காட்சி நடத்துகிறார். எனினும் ஓவியம் வரைவதற்கான அதே மனநிலை அவரைக் கவிதை எழுதவும் வைக்கிறது. சிறந்த சிறுகதைகளையும் எழுதுகிறார். […]

Read more

சங்கீத நினைவலைகள்

சங்கீத நினைவலைகள், வாதூலன், ஜெனரல் பப்ளிஷர்ஸ், பக். 224, விலை 140ரூ. இசை… பெயருக்கு ஏற்ப எல்லோருக்கும் இசைந்து செல்வது, அனைவரையும் இசையச் செய்வது. ஸ்வர, தாள, பாவங்களோடு கர்நாடக சங்கீதமாக உருவெடுக்கும் அதனை ராகமாக அடையாளம் காண்பது எப்படி? என்பதில் தொடங்கிய தனது சங்கீத வேட்(கை)டையில் படிப்படியாக உயர்ந்து, கச்சேரிகளை விமர்சனம் செய்யும் அளவுக்கு முன்னேறியுது? செம்மங்குடி முதல் ஜேசுதாஸ் வரையானவர்களைப் பற்றிய தமது நினைவலைகள் என்று அனைத்தையும் சுவைபடப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் வாதூலன். வாசிக்க வாசிக்க வயலின் இசையாய் வசீகரிக்கிறது. நன்றி: […]

Read more

பி.எஸ்.நடராஜ பிள்ளையும் திருவிதாங்கூர் அரசியலும்

பி.எஸ்.நடராஜ பிள்ளையும் திருவிதாங்கூர் அரசியலும், எஸ்.மோதிலால், சைவப் பிரகாச சபை, விலை 450ரூ. நீராரும் கடல் உடுத்த.. என்ற தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலைத் தந்த மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் ஒரே மகனான பி.எஸ்.நடராஜபிள்ளை பற்றிய அரிய பல தகவல்களை இந்த நூல் கொண்டு இருக்கிறது. கேரள தலைவர்களில் ஒருவரான பட்டம் தாணுப்பிள்ளையுடன் இணைந்து திருவிதாங்கூர் அரசியலில் பி.எஸ்.நடராஜபிள்ளை எவ்வாறு பெரும் ஆளுமையாக விளங்கினார் என்பதும், அவரது சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பணிகள் தொடர்பான தகவல்களும் சிறந்த முறையில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. பி.எஸ்.நடராஜபிள்ளை […]

Read more

இயேசு அந்தாதி

இயேசு அந்தாதி, மா.அய்யாத்துரை, டாக்டர் மா. அய்யாத்துரை செல்லத்தாய் அறக்கட்டளை, விலை 90ரூ. தமிழ் மொழியில் அந்தாதி இலக்கியங்கள் 270 இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில் முதன் முறையாக இயேசுநாதர் மீது அந்தாதிப் பாடல்களைப் பாடும் இலக்கியமாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. இயேசுநாதரின் வாழ்க்கை வரலாறு 100 பாடல்களில் தரப்பட்டு இருக்கிறது. இந்த பாடல்கள் அனைத்திலும் எளிய சொற்களையே பயன்படுத்தி இருந்தாலும், ஒவ்வொரு பாடலுக்கும் கீழே அதன் விளக்கமும் கொடுக்கப்பட்டு இருப்பதால் சுலபமாகப் படிக்க முடிகிறது. கவிதை இலக்கியத்துக்கு உரிய எதுகை, மோனை, இயைபு, […]

Read more

கோவை மு. கண்ணப்பன் வாழ்வும் பணியும்

கோவை மு. கண்ணப்பன் வாழ்வும் பணியும், ஒ.சுந்தரம், சிவகாமி பதிப்பகம், விலை 200ரூ. தி.மு.க. ஆட்சியின்போது அமைச்சராகவும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் உள்பட பல்வேறு பதவிகளும் வகித்துப் பணியாற்றிய கோவை மு. கண்ணப்பனின் வாழ்க்கை வரலாறு இந்த நூலில் விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது, தமிழில் அர்ச்சனை, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக சட்ட முன்வடிவு கொண்டு வந்தது போன்ற இவரது பல பணிகள் இந்த நூலில் சிறப்பாகத் தொகுத்து வழங்கப்பட்டு இருக்கின்றன. சில முக்கிய வரலாற்றுச் சம்பவங்களை பெட்டிச் செய்திகளாகவும், […]

Read more

கோவை மு.கண்ணப்பன் வாழ்வும் பணியும்

கோவை மு.கண்ணப்பன் வாழ்வும் பணியும், ஒ.சுந்தரம், சிவகாமி பதிப்பகம், பக்.336, விலை ரூ.200. உள்ளாட்சி அமைப்பின் தலைவர் முதல் மத்திய, மாநில அரசுகளின் அமைச்சர் பொறுப்பு வரை வகித்தவர் மு.கண்ணப்பன். அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் இது. மு.கண்ணப்பன் தனது 17 -ஆவது வயதிலேயே திருமணம் செய்து கொண்டது, விலைவாசி உயர்வை எதிர்த்து 1962 இல் நடந்த மறியல் போராட்டத்தில் தந்தை கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கும்போது கலந்து கொண்டு சிறை சென்றது, 23 ஆவது வயதில் ஆலாம்பாளையம், அனுப்பர்பாளையம் கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சிமன்றத் தலைவரானது, 1965 இல் […]

Read more

மகாத்மா காந்தியடிகள்

மகாத்மா காந்தியடிகள், தொகுப்பு ஆசிரியர் பி.எம்.சரவணன், பி.எம்.சரவணன் வெளியீடு, விலை 25ரூ. மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் பல வெளிவந்துள்ளன என்றாலும், இந்த நூலில், மகாத்மா காந்தியின் வாழ்வில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் தனித்தனி தலைப்புகளில் கொடுக்கப்பட்டு இருப்பதால் படிக்க எளிமையாக இருக்கிறது. காந்தியின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சம்பவங்கள் அனைத்தும் சுருக்கமாகவும் தெளிவாகவும் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 24/7/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

பிரமிளும் விசிறி சாமியாரும்

பிரமிளும் விசிறி சாமியாரும், அழகிய சிங்கர், விருட்சம், பக். 109, விலை 90ரூ. இலங்கையில் தன் குடும்பத்தை விட்டு வந்து தமிழகத்தில் தங்கி வறுமை வசப்பட்டு இறுதி வரை உடலாலும், மனதாலும் நொந்து பொன எழுத்தாளர், கவிஞர் பிரமிள். அவருடன் விசிறி சாமியாரைச் சந்திக்கப்போன நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டுள்ள விருட்சம் ஆசிரியரான நுாலாசிரியர், எனக்கு மூன்று விதமான பிரமிளைத் தெரியும். 1. நான் நேரிடையாக அறிந்த பிரமிள் 2. பத்திரிகை / புத்தகம் மூலம் அறிந்த பிரமிள் 3. பிறர் மூலம் நான் அறிந்த […]

Read more
1 5 6 7 8 9 46