தலைவணங்காத் தமிழ்த்தேசியப் போராளி அ.வடமலை

தலைவணங்காத் தமிழ்த்தேசியப் போராளி அ.வடமலை, இயக்குனர் வ.கவுதமன், பன்மை வெளியீடு, விலை 250ரூ. தமிழ் தேசியத்துக்காக வாழ்நாள் முழுவதும் அடக்கு முறைகளை சந்தித்து உண்மை தொண்டராக இருந்தவர் வடமலை. தலைவணங்காத் தமிழ்தேசியப் போராளியாக இருந்த, அவருடைய வரலாறு இன்றைய இளைய சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். அவர் பற்றி சான்றோர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அனைவரும் இதனை வாங்கி படிப்பதன் மூலம் வடமலை தமிழ்த்தேசியத்துக்காக ஆற்றிய பணிகளை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். அதனை நாமும் பின்பற்ற உதவிகரமாக இருக்கும். நன்றி: […]

Read more

என் வாழ்வில் சந்தித்ததும் சாதித்ததும்

என் வாழ்வில் சந்தித்ததும் சாதித்ததும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ப. சங்கர், பாவை பிரிண்ட்ர்ஸ், விலை 460ரூ. தெய்வ பக்தியுடன், ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து, ஒழுக்கத்தோடும் நற்குணங்களோடும் வளர்ந்து பல பெரியோர்களின் ஆசியாலும், ஆதரவாலும் கல்வி பயின்று, அரசின் மிக உயர்ந்த பதவிகளில் நேர்மையும், மனிதநேயமும் சிறக்கப் பணியாற்றி நிறை வாழ்க்கை வாழ்ந்து மறைந்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ப.சங்கரன். இவருடைய வாழ்க்கை வரலாறே இந்த நூல். குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை அடைய […]

Read more

மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்.

மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்., பொம்மை சாரதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. இது எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக் குறிப்பு புத்தகம் அல்ல என்று முதலிலேயே சொல்லப்பட்டு இருக்கிறது என்றாலும் இந்தப் புத்தகம் எம்.ஜி.ஆர். பற்றிய அனைத்து விவரங்களையும் கொண்ட தகவல் பெட்டகமாக அமைந்து இருக்கிறது. 1949-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அளித்த முதல் பேட்டி, எம்.ஜி.ஆரின் வம்சாவளி என்ன என்பது பற்றிய வரலாற்று தொடர்பான ஆய்வு, எம்.ஜி,ஆரை ஜெயலலிதா கண்ட பேட்டியின் முழுவிவரம், எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மைக்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள், எம்.ஜி.ஆரின் ஆன்மிக கருத்து […]

Read more

அருந்தவச் செல்வர் அரிராம் சேட்  சின்னராசு

அருந்தவச் செல்வர் அரிராம் சேட்  சின்னராசு, முத்தப்பா, யூகே மேக்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.272,  விலை  ரூ.200. த.பி.சொக்கலால் ராம்சேட் பீடி நிறுவனத்தை நடத்திய த.பி.சொக்கலால் ராம்சேட்டின் வரலாறு இந்நூலின் முதல் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு அவருடைய மகன் அரிராம் சேட்டின் வரலாறு நூல் முழுக்க மிகச் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளது. அரிராம் சேட் சிறுவயதிலேயே கார்களின் மீது அளவுக்கதிகமான காதல் கொண்டிருந்தது, இளைஞனாக ஆன பிறகு பல மாடல்களில் பல நவீனமான கார்களை வாங்கிப் பயன்படுத்தியது, தன்னிடம் வேலை செய்பவர்கள், தன்னுடைய உறவினர்களுக்கு மட்டுமல்லாமல், எல்லாருக்கும் […]

Read more

பாரதியின் செல்லம்மாள்

பாரதியின் செல்லம்மாள்,சி.வெய்கை முத்து, கற்பகம் புத்தகாலயம், பக்.176, விலை ரூ.150. செல்லம்மாள் பிறந்த கடையத்தில் ஆசிரியராகப் பணியாற்றியபோது கிடைத்த அனுபவம், அங்குள்ள சான்றோர்களிடம் கேட்டறிந்த தகவல் மூலம் இந்தப் படைப்பைத் தந்துள்ளார் நூலாசிரியர். மகாகவியின் வாழ்க்கையில் ஆதார சுருதியாக இருந்தவர் செல்லம்மாள். ஏறத்தாழ 24 ஆண்டுகளே அவர்களுடைய மணவாழ்க்கை. அதிலும் அவர்கள் சில சூழ்நிலை காரணமாக அவ்வப்போது பிரிந்திருந்தார்கள். அவர்கள் சேர்ந்திருந்த காலத்தின் செம்மை பற்றியும், பாரதியின் வாழ்வில் செல்லம்மாள் ஆற்றிய முக்கியமான பங்கை பற்றியும் நூலாசிரியர் அழகாக எடுத்துரைக்கிறார். பாரதியின் ஒரு பழக்கம் எப்படி […]

Read more

மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்.

மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்., பொம்மை சாரதி,  கவிதா பப்ளிகேஷன், பக்.280, விலை ரூ.200. எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகிய இதழாசிரியரான பொம்மை' சாரதி எழுதியிருக்கும் இந்நூலில், 1949 -இல் பேசும் படம்  இதழுக்காக எம்.ஜி.ஆர். அளித்த முதல் பேட்டி இடம் பெற்றிருக்கிறது. நடிகன் குரல்இதழில் பல்வேறு வாசகர்களின் கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில்கள், ஜெயலலிதா – எம்.ஜி.ஆர் நேர்காணல், கல்லூரி மாணவி மீராவுக்கு எம்.ஜி.ஆர். அளித்த விரிவான பேட்டி கல்கண்டு இதழில் தமிழ்வாணன் எம்.ஜி.ஆர்.குறித்து எழுதிய கேள்வி – பதில்கள் எனப் பலவற்றையும் தொகுத்து, கேள்வி […]

Read more

மிர்ஸா காலிப்

மிர்ஸா காலிப் (மொழிபெயர்ப்பில்) – துயரின் இதழ்களில் விரியும் புன்னகை, பாரஸீகத்திலிருந்து ஆங்கிலத்தில் மூஸா ராஜா, ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன், கவிதா பப்ளிகேஷன், பக்.264, விலை ரூ.275. புகழ்பெற்ற உருது, பாரசீக மொழி கவிஞரான மிர்ஸா காலிப்பின் பாரசீக கவிதை நூலை மூஸா ராஜா ஆங்கிலத்தில் THE SMILE ON SORROW என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். அந்த ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து பல கவிதைகளை மொழிபெயர்ப்புத்துறையில் நிபுணத்துவம் பெற்ற லதா ராமகிருஷ்ணன் தமிழில் தந்திருக்கிறார். கவிஞர் மிர்ஸா அஸாதுல்லா கான் காலிப் 1797 – […]

Read more

ஸ்டீவ் ஜாப்ஸ் – ஆப்பிள் பசி

ஸ்டீவ் ஜாப்ஸ் – ஆப்பிள் பசி,  பட்டுக்கோட்டை ராஜா, சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம்,  பக்.376. விலை ரூ.333. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் இம்மண்ணில் பிறக்கிறார்கள். ஆனால், அவர்களில் வெகு சிலர் மட்டுமே தங்களது அடையாளத்தை அழியாத் தடமாக இங்கு பதித்து விட்டுச் செல்கிறார்கள். அவர்களே சாதனையாளர்களாகவும் கொண்டாடப்படுகிறார்கள். அத்தகைய வெற்றியாளர்கள் வரிசையில் ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற மனிதருக்கு தனியிடம் உண்டு. அவரைப் பற்றிய சரிதங்களும், வாழ்க்கை நிகழ்வுகளும் பல்வேறு புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அதன் நீட்சியாக இப்புத்தகத்தை நூலாசிரியர் படைத்திருக்கிறார். பொதுவாகவே, சரிதங்களை […]

Read more

இரண்டாம் சுற்று

இரண்டாம் சுற்று, ஆர். பாலகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம், விலை 240ரூ. எண்ண அலைகளை ஈர்க்கும் இரண்டாம் சுற்று இந்திய ஆட்சிப் பணித் தேர்வு முழுவதும் தமிழில் எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று ஆட்சிப் பணியில் நுழைந்தவர் ஆர்.பாலகிருஷ்ணன். சிந்துவெளிப் பண்பாடு செழித்த ‘கொற்கை, வஞ்சி, தொண்டி’ வளாகத்தை ஆய்வுலகின் கவனத்துக்குக் கொண்டுவந்தவர். அவருடைய சமீபத்திய ‘இரண்டாம் சுற்று’ நூலில், தான் பயணித்த இடங்கள், சந்தித்த மனிதர்கள், சம்பவங்கள் என இரண்டாம் முறையாக எதிர்கொண்டதை நுட்பமாகப் பதிவுசெய்துள்ளார். தமிழே பாதையும் பயணமுமாய் இலக்காகவும் இருக்கும் தமிழ் […]

Read more

ராணுவ நாயகி நிர்மலா சீதாராமன் வாழ்க்கை வரலாறு,

ராணுவ நாயகி நிர்மலா சீதாராமன் வாழ்க்கை வரலாறு, டாக்டர் மனோஸ், ஹலோ பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ. மதுரையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் மிக உயர்ந்த பொறுப்புகளில் ஒன்றான ராணுவ மந்திரி என்ற அந்தஸ்துக்கு உயர்ந்த நிர்மலா சீதாராமன் பற்றிய விவரங்கள் விலாவாரியாகத் தரப்பட்டுள்ளன.2014 முதல் 2018 வரையிலான அவரது டைரிக் குறிப்பு, ரபேல் போர் விமான விவகாரம் தொடர்பான கருத்துக்கள் ஆகியவையும் இதில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more
1 7 8 9 10 11 46