திரை இசைத் திலகங்கள்

திரை இசைத் திலகங்கள், வி.ராமமூர்த்தி, சந்தியா பதிப்பகம், பக்.224. விலை ரூ.180. இசையமைப்பாளர்கள் ஜி.ராமநாதன் முதல் இளையராஜா வரையிலான ஐம்பத்திரண்டு இசைக்கலைஞர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர்களின் பங்களிப்புகள்; அனுபவங்கள் குறித்து விவரிக்கும் நூல். இசையமைப்பாளர்கள் தவிர, பாடி நடித்த நடிகர்- நடிகைகள் மற்றும் பிரபல பின்னணி பாடகர்கள் டி.எம்.எஸ்., பி.சுசீலா, என்.சி.வசந்தகோகிலம், எம்.எல்.வசந்தகுமாரி, பி.ஜெயச்சந்திரன் முதலானவர்கள் குறித்த தகவல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சி.ஆர் சுப்பராமனின் திடீர் மறைவுக்குப் பின் அவரின் உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி தனித்து இசையமைக்கத் தொடங்கியது, எம்.ஜி.ஆர். படத்துக்கு […]

Read more

தமிழ் திரைப்பட நூற்றாண்டு – 2018

தமிழ் திரைப்பட நூற்றாண்டு – 2018, பெ. வேல்முருகன், ஒளிக்கற்றை வெளியீடு, பக். 104, விலை 100ரூ. தமிழ்த் திரைப்படங்களின் வரலாற்றை முறையாக ஆவணப்படுத்தாமல் விட்டுவிட்டதன் விளைவாக, தமிழ்த் திரைப்படங்களின் நூற்றாண்டு எந்த ஆண்டாக இருக்க முடியும் என்ற விவாதங்கள் உருவாகியுள்ளன. அந்தக் குறையை இந்நூல் தீர்த்து வைக்கிறது. 2018 ஆம் நூற்றாண்டுதான் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு என்பதை உறுதி செய்கிறது இந்நூல். தமிழ்த் திரைப்படங்கள் குறித்த ஆய்விற்கு வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம், 29/3/2017.

Read more

மாடர்ன் தியேட்டர்ஸ்

மாடர்ன் தியேட்டர்ஸ், விஜயா பப்ளிகேஷன்ஸ், விலை 120ரூ- திரைப்படத் தயாரிப்பில் ஜெமினி, ஏவி.எம்., பட்சிராஜா, ஜுபிடர் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலக் கட்டத்தில், அவர்களுடன் முன்னணியில் இருந்த நிறுவனம் “மாடர்ன் தியேட்டர்ஸ்.” இதன் அதிபரான டி.ஆர். சுந்தரம், 97 படங்களைத் தயாரித்து வெளியிட்டார். அவர் மறைவுக்குப் பின் நிர்வாகத்தை ஏற்ற அவர் மகன் ராமசுந்தரம், படங்களின் தயாரிப்பு எண்ணிக்கையை 118 ஆக உயர்த்தினார். தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படமான “அலிபாபாவும் 40 திருடர்களும்” படத்தைத் தயாரித்தவர் டி.ஆர். சுந்தரம்தான். மாடர்ன் தியேட்டர்சில் பணியாற்றிய கலைஞர் மு. […]

Read more

சத்யஜித்ரே வாழ்வும் வழியும்

சத்யஜித்ரே வாழ்வும் வழியும், விகடன் பிரசுரம், விலை 160ரூ. இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் புகழ் தேடித்தந்தவர் சத்யஜித் ரே. 1954-ல் அவருடைய முதல் படமான “பாதேர் பாஞ்சாலி” வெளிவந்தது. சர்வதேச பட விழாக்களில் பல பரிசுகளை வாங்கிக் குவித்தது. வாழ்நாள் சாதனைக்காக சிறப்பு ஆஸ்கார் பரிசு இவருக்குக் கிடைத்தது. உடல் நலம் இல்லாத காரணத்தால், ஆஸ்கார் குழுவினரே கல்கத்தாவில் உள்ள அவர் வீட்டக்கு நேரில் சென்று பரிசை வழங்கினர். “திரைப்பட உலகின் மகத்தானவர் சத்யஜித் ரேதான்” என்று உலகப்புகழ் பெற்ற ஜப்பானிய டைரக்டர் […]

Read more

எம்.ஜி.ஆர். நடித்த 133 படங்கள்

எம்.ஜி.ஆர். நடித்த 133 படங்கள், மணிவாசகர் பதிப்பகம், விலை 350ரூ. எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் “சதிலீலாவதி”. இது 1936-ம் ஆண்டு வெளிவந்தது. அறிவிருந்து பல படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அவருடைய 15-வது படமான ‘‘ராஜகுமாரி” , அவரை கதாநாயகனாக உயர்த்திய படம். அது முதல் ஏறுமுகம்தான். 1977-ல் சட்டசபை தேர்தலில் அவருடைய அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது. முதல் – அமைச்சராகப் பதவி ஏற்பதற்கு முன் அவர் நடித்து முடித்து படம் “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” (1978). இது […]

Read more

சத்யஜித்ரே வாழ்வும் வழியும்

சத்யஜித்ரே வாழ்வும் வழியும், வீ.பா. கணேசன், விகடன் பிரசுரம், பக். 216, விலை 160ரூ. இந்திய சினிமாவின் துருவ நட்சத்திரமாக விளங்கும் இயக்குநர் சத்யஜித்ரேயின் வாழ்க்கைப் பயணத்தையும், கலைப் பயணத்தையும் விரிவாக அறிந்து கொள்ள உதவும் நூல். கொல்கத்தா நகரவாசியாக இருந்த ரே, கிராமிய சூழலில் இருந்த சாந்தி நிகேதனில் சேருவதற்குக் காட்டிய தயக்கம், பின்னர், நுண்கலை பயில அங்கே சேருதல், 20 வயதான ரே, 80 வயது தாகூரை நான்குமுறை சந்தித்தும் இயல்பாகப் பேச முடியாமல் போனது, தாகூர் மறைவுக்குப்பின் படிப்பை பாதியில் […]

Read more

மார்டன் தியேட்டர்ஸ்

மார்டன் தியேட்டர்ஸ், ரா. வேங்கடசாமி. விஜயா பப்ளிகேஷன்ஸ், விலை 120ரூ. திரைப்படத் தயாரிப்பில் ஜெமினி, ஏவி.எம்., பட்சிராஜா, ஜுபிடர் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலக்கட்டத்தில், அவர்களுடன முன்னணியில் இருந்த நிறுவனம் “மார்டன் தியேட்டர்ஸ்” இதன் அதிபரான டி.ஆர்.சுந்தரம், 97 படங்களைத் தயாரித்து வெளியிட்டார். அவர் மறைவுக்குப்பின் நிர்வாகத்தை ஏற்ற அவர் மகன் ராமசுந்தரம், படங்களின் தயாரிப்பு எண்ணிக்கையை 118 ஆக உயர்த்தினார். தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படமான “அலிபாபாவும் 40 திருடர்களும்” படத்தைத் தயாரித்தவர் டி.ஆர். சுந்தரம்தான். மாடர்ன் தியேட்டர்சில் பணியாற்றிய கலைஞர் மு. கருணாநிதி, […]

Read more

திரைத்தொண்டர்

திரைத்தொண்டர், பஞ்சு அருணாசலம், விகடன் பிரசுரம், பக். 288, விலை 185ரூ. அறுபது ஆண்டுகால தமிழ்த் திரையுலக வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கிற பஞ்சு அருணாசலத்தின் சுயசரிதை இந்நூல். பஞ்சு அருணாசலத்தின் தந்தை அந்தக் காலத்திலேயே பி.ஏ. படித்திருந்தும், சம்பளத்துக்கு வேலை செய்வதை அவமானமாகக் கருதி, வேலைக்குப் போகாமல் இருந்ததால், அம்மாவின் நகைகள் அத்தனையையும் இழக்க நேரிடுகிறது. அந்தக் கோபத்தில் முதன் முதலாக அப்பாவை எதிர்த்துப் பேசிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி, பணம் சம்பாதிக்க பஞ்சு அருணாசலம் சென்னைக்கு ரயில் ஏறியது, நெஞ்சை நெகிழச் செய்கின்றது. […]

Read more

திரைக்கதை

திரைக்கதை (விரிவாக்கப் பதிப்பு), தர்மா, ரம்யா பதிப்பகம், பக். 320, விலை 200ரூ. கன்னடத் திரையுலகில் நீண்டகால அனுபவம் உள்ள ஒரு தயாரிப்பாளரால் தமிழில் எழுதப்பட்டு வெளிவந்திருக்கிறது இந்த நூல். “நம்மவள்’‘ என்ற கதையை எழுதி, அதை முழுத் திரைக்கதையாக்கித் தந்திருக்கும் முயற்சி புதியது; பாராட்டுக்குரியது. இன்று செல்லிடப்பேசி கேமராவில் குறும்படம் எடுத்தே பலரும் திரைக்கலையைக் கற்றுக் கொள்கிறார்கள். தனியார் திரைப்படக் கல்லூரிகளும் ஏராளம் உள்ளன. திரைக்கதை எழுதுவது எப்படி என்பதை அனுபவப்பூர்வமாக விவரிக்கும் இந்த நூல், மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் பயன்படும். ஒரு […]

Read more

வினாடிக்கு 24 பொய்கள்

வினாடிக்கு 24 பொய்கள், இயக்குனர் மிஷ்கின், எஸ். தினேஷ், பேசாமொழி வெளியீடு, பக். 102, விலை 100ரூ. சினிமா பார்த்து சினிமாவை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஆனால், அது சார்ந்த புத்தகங்களை படித்து தான், சினிமாவை புரிந்து கொள்ள முடியும். சினிமா என்பது, இயக்குனரின் ஒரு பார்வை மட்டுமே. புத்தகங்கள் தான், சினிமா சார்ந்த இரண்டாயிரம் பார்வைகளை கொடுக்க வல்லது’ என்பது, எஸ்.தினேஷின் ஒரு கேள்விக்கு, மிஷ்கின் அளித்த பதிலின், ஒரு பகுதியாக வருகிறது. இவ்வாறு, சினிமா பற்றிய மிஷ்கினின் பார்வையை வாசகர் முன் […]

Read more
1 9 10 11 12 13 30