சாதி அடையாள சினிமா

சாதி அடையாள சினிமா, தொகுப்பாசிரியர் நீலன், பேசாமொழி வெளியீடு, விலை 220ரூ. தமிழில் வெளிவந்த, சின்ன கவுண்டர், பெரிய கவுண்டர் பொண்ணு, நாட்டாமை, தேவர் மகன் உள்ளிட்ட, சாதி அடையாள சினிமாக்களையும், அது கட்டமைக்கும் பிம்பத்தையும், வெளிக்கொண்டு வந்திருக்கிறது இந்த நூல். இதில், சாதி அடையாள சினிமாக்களையும், சாதியத்தை வேரறுக்கும், அதன் சுயபெருமையை பகடி செய்யும் படங்களையும் ஆராய்ந்து வெளிக்கொண்டு வந்திருக்கிறது, சாதி அடையாள சினிமா. நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

நின்று ஒளிரும் சுடர்கள்

நின்று ஒளிரும் சுடர்கள், உஷாதீபன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 184, விலை 130ரூ. “தமிழ்த் திரையுலகில் நின்று ஒளிவீசிய தனிச்சுடர் எஸ்.வி.ரங்காராவ்; “ஏழை படும் பாடு‘’ படத்தில் கதாநாயகனாக, “கப்பலோட்டிய தமிழன்’‘ படத்தில் சிவாஜியின் தந்தையாக, மற்றும் பல படங்களில் குணச்சித்திர நடிகராக மிளிர்ந்த சித்தூர் வி.நாகையா; நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் என எல்லா வேடத்திலும் புத்தொளி பாய்ச்சிய டி.எஸ்.பாலையா; 18வயதிலேயே 60வயது முதியவராக நடித்துப் புகழ்பெற்ற வி.கே.ராமசாமி; பாரதியார் வேடத்தில் நடித்த எஸ்.வி.சுப்பையா; வாய்ஸ் மாடுலேஷனில் வாத்தியாராகத் திகழ்ந்த எம்.ஆர்.ராதா; இயல்பான நடிப்பில் […]

Read more

கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்

கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள், ஜமாலன், நிழல் பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. தமிழ் சமூக அழகியல், கலை, சமூக உணர்வை கட்டமைக்க தேவையான ஊடகம் சினிமா. அதற்கான அத்தனை கதவுகளையும் திறப்பதாக உள்ளது, தென் கொரிய சினிமா இயக்குனர், கிம் கி-டுக்கின் சினிமாக்களை முன் வைத்து எழுதப்பட்டுள்ளது இந்த நூல். நன்றி: தினமலர், 8/1/2017.

Read more

அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா

அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா, ஆர்.சி.சம்பத்,கவிதா பப்ளிகேஷன், விலை 100ரூ. திராவிட இயக்க முன்னோடிக் கலைஞன், புரையோடிப்போன மூட நம்பிக்கைகளைச் சாடி, அறிவுக்கண் திறக்கச் செய்த கலையுலக ஆசான்/ நடிகனைப்போல சமூகப் புரட்சியாளன், புரட்சியாளனைப் போன்ற தலைசிறந்த நடிகன், இத்துனைக்கும் மேலே, திரைப்படங்களால் வில்லனாக மக்களிடையே சித்தரிக்கப்பட்ட அவர், தனி மனித வாழ்க்கையில் எப்படி ஒரு உன்னத மனிதனாக இருந்தார் என்கிற ரகசியத்தையும் இந்த நூல் மூலம் அறிய வைக்கிறார் நூலாசிரியர் ஆர்.சி.சம்பத். நன்றி: தினத்தந்தி, 28/12/2016.

Read more

பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன்

பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன், யமுனா ராஜேந்திரன், பிரக்ஞை பதிப்பகம், பக்.168, விலை 130ரூ. உலக அளவில் வெளியான குழந்தைகள் பற்றிய திரைப்படங்களைப் பற்றிப் பேசும் நூல். வெறுமனே திரைப்படங்கள் குறித்தும், கதைச்சுருக்கம், நடிகர், நடிகையர் பற்றியும் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்காமல், படம் உருவானதன் பின்னணி, கேமரா கோணங்களின் சிறப்பு, காட்சிகளின் முக்கியத்துவம் என்று பலவகையிலும் சிறப்பான திரைப்படங்களைப் பலமுறை பார்த்து, ஆராய்ந்து விரிவாக எழுதியிருப்பது இந்நூலின் சிறப்பு. நெதர்லாந்து திரைப்படமான “பேசுவதை நிறுத்திக் கொண்ட சிறுவன்’‘ (1996) படத்தில், சொந்த மண்ணைப் பிரிவதனால் சமூகத்தின் மீது […]

Read more

திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள்

திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள், ஆர்.சி. சம்பத், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. திரை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதர், நடிக மன்னன் பி.யு.சின்னப்பா, குணசித்ர நடிகர் டி.எஸ். பாலையா ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் கொண்ட புத்தகம். ஆர்.சி. சம்பத், முப்பெரும் நடிகர்கள் பற்றி சிறப்பாக எழுதியுள்ளார். சில பிழைகளையும் எடுத்துக்காட்ட வேண்டும். “சந்திரகாந்தா படத்தில், சுண்டூர் இளவரசன் வேடத்தில் கதாநாயகனாக பி.யு. சின்னப்பா நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றி கண்டது. சின்னப்பா ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார்” என்று […]

Read more

தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்

தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம், ஸ்டாலின் ராஜாங்கம், பிரக்ஞை, பக். 176, விலை 145ரூ. மிழ் சினிமாவைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளி வந்திருக்கின்றன. இந்த நூல் குறிப்பிட்ட சில திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகளிலும், பேசப்படும் வசனங்களிலும் உள்ள “உண்மைத்தன்மை‘’யை மிகையின்றிப் பதிவு செய்திருக்கிறது. இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடிவேலுவின் கிராமத்தான், போலீஸ், ரவுடி போன்ற வெற்றிகரமான பாத்திரங்களைப் பற்றிய ஆய்வும், இசையமைப்பாளர் இளையராஜாவின் திறமை பற்றிய பதிவும் இரண்டாவது பகுதியில் அடங்கியிருக்கிறது.‘ பல விதங்களில் வித்தியாசமான படமாக இருந்தாலும் வன்முறைப் […]

Read more

ஜமுனாராணி திரையிசைப் பாடல்கள்

ஜமுனாராணி திரையிசைப் பாடல்கள், ஆர். ரங்கராஜன், மணிவாசகர் பதிப்பகம், விலை 200ரூ. திரைப்படங்களில் இனிமையான பாடல்களைப் பாடி, ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்தவர் ஜமுனாராணி. அவர் சினிமாவுக்காகப் பாடிய முதல் பாடலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய பாடல்தான், “குளிர் தாமரை மலர்ப் பொய்கை கண்டேன்” என்று தொடங்கும் அந்தப் பாடல் இடம் பெற்ற படம் “வளையாபதி” (1952). சுமார் 40 ஆண்டு காலம் தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் பாடிய ஜமுனா ராணி கடைசியாகப் பாடிய பாடல் 1992-ல் வெளிவந்த “அண்ணன் என்னடா […]

Read more

ராமச்சந்திர ரகசியம்

ராமச்சந்திர ரகசியம், குமரவேல்,முல்லை பதிப்பகம், விலை 150ரூ. எம்.ஜி.ஆரின் சித்தாந்த சிறப்பை, பண்பாற்றைல பலர் சொல்ல மறந்த நுட்பங்களை எடுத்துக்காட்டியிருக்கிறார் நூலாசிரியர் வே. குமரவேல். நன்றி: தினத்தந்தி, 17/8/2016.   —-   நின்று ஒளிரும் சுடர்கள், உஷா தீபன், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 130ரூ. சிவாஜி கணேசன், எஸ்.வி. ரங்காராவ், எஸ்.எஸ். ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா, நாகேஷ் உள்பட 11 நடிகர்களின் சிறப்பை வர்ணிக்கும் நூல். எம்.ஜி.ஆர். பற்றியும் எழுதி இருக்கலாமே. நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Read more

நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், ஏ.சி. திருலோகசந்தர், வசந்தா பிரசுரம், பக். 352, விலை 220ரூ. கதாசிரியர், திரைப்பட இயக்குநர் என்ற புகழுக்கு உரியவரான கலைமாமணி ஏ.சி. திருலோகசந்தர் தன் சமகாலத்து சினிமா அனுபவங்களை இந்நூலில் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். திரு. ஏவி.எம். சரவணன் நட்பு தொடங்கி, அவரது பிறப்பின் பிரமிப்பில் ஆரம்பித்து, கல்லூரி வாழ்க்கை, முதல்பட வாய்ப்பு, எம்.ஜி.ஆர். சிவாஜி உள்ளிட்டோரை இயக்கியது, ‘அன்பே வா’ உள்ளிட்ட மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய அனுபவம், ஜனாதிபதி பரிசு பெற்றது. ஜெயலலிதா நடித்த ‘எங்கிருந்தோ வந்தாள்’, […]

Read more
1 10 11 12 13 14 30