எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியம்

எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியம், சபீதா ஜோசப், நக்கீரன் வெளியீடு, விலை 80ரூ. 136 திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர். பிறகு தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக தொடர்ந்து 11 ஆண்டுகள் பதவி வகித்து சாதனை படைத்தார். திரைப்படத்துறையில், அரசியலிலும் அவர் புரிந்த சாதனைகள் பற்றிய சுவைபட எழுதியுள்ளார் சபீதா ஜோசப். எம்.ஜி.ஆர். பற்றிய சிறந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 28/2/2018.

Read more

நான் உங்கள் ரசிகன்

நான் உங்கள் ரசிகன், மனோபாலா, சூரியன் பதிப்பகம், விலை 180ரூ. ‘குங்குமம்’ வார இதழில் வெளிவந்த இந்த சூப்பர் ஹிட் தொடர், திரையுலகில் கால் பதிக்க முற்படும் / பாடுபடும் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக விளங்கும் நூல். நன்றி: குங்குமம், 12/1/2018.

Read more

உலக நாயகன் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன், தினத்தந்தி பதிப்பகம், விலை 280ரூ. ‘தினத்தந்தி’யில் வரலாற்றுச் சுவடுகள் நெடுந்தொடர் வெளியானபோது, நடிகர் கமல்ஹாசன் வரலாறு 70 வாரங்களாக வெளிவந்தது அது இப்போது தினத்தந்தி பதிப்பகத்தால் ‘உலக நாயகன் கமல்ஹாசன்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 352 பக்கங்கள். முழுவதும் கண்ணைக் கவரும் வண்ணத்தில். 6 வயதில் ‘களத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது. சினிமாவுக்காக பரத நாட்டியம் கற்றுக் கொண்டு ‘டான்ஸ் மாஸ்டர்’ ஆனது. 27 வயதில் நூறு படங்களில் நடித்து சாதனை புரிந்தது. தமிழ், மலையாளம், […]

Read more

கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை

கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை, திரைக்கலைஞர்கள்  அந்திமழை, அந்தி மழை, பக்.316, விலை ரூ.300. அந்திமழை இதழில் வெளிவந்த திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், மக்கள் தொடர்புத்துறையினர் என திரைப்படத்துறை சார்ந்த அனைத்து கலைஞர்களின் நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். கமல்ஹாசன், நாசர், பாண்டியராஜன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள், கஸ்தூரி, கெளதமி, நதியா, வரலட்சுமி உள்ளிட்ட நடிகைகள், இளையராஜா, கங்கை அமரன், டி.இமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள், கே.பாலசந்தர், பாலுமகேந்திரா, ஆர்.ரவிக்குமார், எஸ்.பி. ஜனநாதன் உள்ளிட்ட இயக்குநர்கள் என 58 திரைப்படத்துறை […]

Read more

திரையுலகின் தவப்புதல்வன்

திரையுலகின் தவப்புதல்வன்,  தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம்,  பக்: 248. விலை ரூ.175. சினிமாவை எப்படி ரசிக்க வேண்டும் என அறிவுறுத்தும் திரையியல் ஆய்வு நூல் என்றே இந்நூலைக் கூறலாம். காரணம், சிவாஜியின் நடிப்பைப் பற்றி மட்டுமின்றி, சினிமாவின் தரம், இசை, பாடல்கள், தற்கால சினிமாவின் தரக்கேடு உள்ளிட்ட பல அம்சங்களும் இந்நூலில் அலசப்பட்டிருக்கின்றன. தெய்வப்பிறவி, முதல் தேதி, ரங்கூன் ராதா ஆகிய படங்களில் சிவாஜியின் நடிப்புத் திறனை நூலாசிரியர் வர்ணித்திருக்கும் விதம், அப்படங்களைத் தேடிப்பிடித்து மீண்டும் நம்மை பார்க்கத் தூண்டுகிறது. பழநி ஒரு தோல்விப்படம்தான்; […]

Read more

உலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை

உலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை, நவீனா அலெக்சாண்டர், அந்தாழை, பக். 142. ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தி வந்த உலகத் திரைப்படங்களையே இன்னமும் நாம் பார்த்துக் கொண்டிருந்தால், தற்காலத்தில் உலக சினிமா அரங்கில் நடந்து கொண்டிருக்கும் சோதனை முயற்சிகளையும், முன்னேற்றங்களையும் எப்போது தெரிந்து கொள்வது? அதை இட்டு நிரப்புவது தான் இந்தப் புத்தகம்! கடந்த, ௨௦௦௦க்குப் பின் வந்த உலகின் அனைத்து சிறந்த திரைப்படங்களின் தொழில்நுட்ப (திரைக்கதை உத்தி, கேமரா டெக்னிக் மற்றும் எடிட்டிங்) விஷயங்களை உள்ளடக்கிய புத்தகம். மேலும், திரைக்கதையின் மூன்று விதமான அணிகள் […]

Read more

நடிகையர் திலகம் சாவித்திரி நிழலும் நிஜமும்

நடிகையர் திலகம் சாவித்திரி  நிழலும் நிஜமும், இருகூர் இளவரசன், தோழமை வெளியீடு, விலை 225ரூ. துயர நாயகி சாவித்திரி எவ்வளவு உயரத்தில் சினிமா ஒருவரைத் தூக்கி நிறுத்துகிறதோ அதைவிடப் பல மடங்கு கீழே தூக்கியும் எறிந்துவிடும். இதற்கு உதாரணம் சாவித்திரியின் வாழ்க்கை. திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்புத் திறமையால் நடிகையர் திலகமாக வாழ்ந்த சாவித்திரியை மக்களுக்குத் தெரியும். ஆனால், படத் தயாரிப்பாளராக, இயக்குநராக, நெருக்கடியான நேரத்தில் நடிகர் சுருளிராஜனுக்கு ரூ.30 ஆயிரம் கொடுத்து உதவியவராக, குழந்தைத்தனம் மிக்கவராக சாவித்திரியின் பன்முகங்களைக் காட்டியுள்ளார் ஆசிரியர். அன்றைய […]

Read more

தமிழுக்கு ஆஸ்கார்

தமிழுக்கு ஆஸ்கார், வெ.மு.ஷாஜகான் கனி, மீனாட்சி புத்தக நிலையம், பக்.160, விலை ரூ.110. உலக அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருது, ஆஸ்கார் விருது. 1929 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலப் படங்களுக்குத்தான் ஆஸ்கார் விருது கொடுக்கப்பட்டது. 1947 முதல் ஆங்கிலம் அல்லாத அயல்மொழிப் படங்களுக்கு ஆஸ்கார் விருது கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை ஒரு தமிழ் திரைப்படம் கூட , ஓர் இந்திய மொழிப்படம் கூட ஆஸ்கார் விருது பெறவில்லை. இந்தியப் படங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்றாலும், ஐந்து இந்தியர்கள் ஆஸ்கார் விருது […]

Read more

திரைப்பட ரசனையின் வரலாறு

திரைப்பட ரசனையின் வரலாறு, இண்டியாஸ் ஃபிலிம் சொசைட்டி மூவ்மெண்ட், த ஜர்னி அண்ட் இட்ஸ் இம்பாக்ட், வி.கெ.செரியன், சேஜ் பப்ளிகேஷன்ஸ், விலை 895ரூ. திரைப்படங்கள் குறித்த ரசனையை மக்களிடையே பரப்ப முனைந்த திரைப்படக் கழகங்களே இந்தியாவில் மாற்றுத் திரைப்பட இயக்கம் தோன்றுவதற்கான அடித்தளமாக இருந்தன. பாம்பே(1940), கல்கத்தா (1947), மதராஸ்(1957), திருவனந்தபுரம்(1965) ஆகிய முன்னோடி திரைப்படக் கழகங்கள் உலகத்தின் சிறந்த திரைப்படங்களை இந்திய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியதோடு, சத்யஜித் ரே, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற உலகம் போற்றிய திரைப்பட இயக்குநர்களையும் உருவாக்கித் தந்தன. இந்தியாவில் சர்வதேச […]

Read more

நிழல் படம் நிஜப் படம்

நிழல் படம் நிஜப் படம்,  யுகன்,  நற்றிணை பதிப்பகம், பக். 167, விலை ரூ. 300. திரைப்பட ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட அரசியல் படங்களில் (கட்சி அரசியல் அல்ல) இருபத்தேழு படங்களைத் தேர்ந்தெடுத்து அவை பற்றி விரிவாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இத்தொகுப்பில் பெரும்பாலும் ஆங்கிலப் படங்களும், சில இந்திப் படங்களும், மிகக் குறைவான மலையாளப் படங்களும் இடம்பெற்றுள்ளன. (தமிழில் ஒன்றுகூடவா இல்லை?) தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மக்களுக்காகப் போராடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்த நெல்சன் மண்டேலாவைப் பற்றிய ‘மண்டேலா – லாங் […]

Read more
1 7 8 9 10 11 30