ஒரு சாமானியனின் சாதனை

ஒரு சாமானியனின் சாதனை, எஸ்.கே. இளங்கோவன், மணிமேகலைப் பிரசுரம், விலை 65ரூ. ‘அரவணைப்பு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் சமுதாய தொண்டாற்றி வரும் இந்த நூலின் ஆசிரியர், தான் அடிமட்ட நிலையில் இருந்து படிப்படியாக முன்னேறி உன்னதமான இடத்துக்கு வந்தது எப்படி என்பதை அழகாக பதிவு செய்து இருக்கிறார். வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த நூல் நல்ல உந்துசக்தியாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 27/2/19.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

கோடிக்கணக்கான ரூபாயை ஆழ்மனதை இயக்கி அடைவது எப்படி?

கோடிக்கணக்கான ரூபாயை ஆழ்மனதை இயக்கி அடைவது எப்படி?, ஏ.எல்.சூர்யா, பி பாசிட்டிவ் புரொடக்ஷன்ஸ், பக்.304. விலை ரூ.300. பணம் சம்பாதிப்பதற்கு தொழில், வேலை மட்டும் இருந்தால் போதாது, மனமும் வேண்டும். கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிப்பேன் என்ற நம்பிக்கையை ஒவ்வொருவரும் தனது ஆழ்மனதில் பதித்துக் கொண்டு செயல்பட்டால், நிச்சயம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் நூல். நம்பிக்கை எவ்வாறு மனிதனை மாற்றுகிறது என்பதை விளக்குகிறது. அந்த நம்பிக்கை நம்மை இயங்கச் செய்ய தேவையற்ற சிந்தனைகள், பேச்சுகள், செயல்களை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்றும் இந்நூல் […]

Read more

வாழ்க்கை ஜெயிப்பதற்கே..!

வாழ்க்கை ஜெயிப்பதற்கே..!, ஞானசேகர்; யூனிக் மீடியா, பக்.198, விலை ரூ.160. வாழ்க்கை சவால் நிறைந்தது. அதை எதிர்கொள்வதற்கு பல எளிய வழிகள் உள்ளன என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் உள்ள ஆற்றலை அறிந்து முன்னேற வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்த கட்டுரையாளர் மிக நேர்த்தியாக பல கருத்துள்ள உண்மை சம்பவங்களையும், கதைகளையும் மிகச் சுருக்கமாக எடுத்துரைத்துள்ளார். இந்நூலில் உள்ள 36 கட்டுரைகளும் தூதன் மாத இதழில் 3 ஆண்டுகள் வெளிவந்ததன் தொகுப்பாகும். இளைய சமுதாயத்தினரை சிந்திக்க வைக்கவும், தோல்விகளைக் […]

Read more

இரக்கம் கொள்வோம் விட்டுக்கொடுப்போம்

இரக்கம் கொள்வோம் விட்டுக்கொடுப்போம், மா.ராமச்சந்திரன், மணிமேகலைப் பிரசுரம், விலை 130ரூ. வாழ்க்கையில் உச்சம் தொட நினைக்கும் இளைஞர்கள் உள்பட அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் படிக்கட்டுகளாக 48 அருமையான கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் உளவியல் அடிப்படையில் அமைக்கப்பட்டவை என்றாலும், அவை சுவையுடன் தரப்பட்டுள்ளதால் அலுப்புத் தட்டாமல் படிக்க முடிகிறது. எதிர்மறைச் சிந்தனைக்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற அவரது கருத்து அனைத்து கட்டுரை தலைப்புகளிலும் அப்படியே இடம் பிடித்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 24/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

தலைமைப் பொறுப்பேற்கலாம்

தலைமைப் பொறுப்பேற்கலாம், சந்திரிகா சுப்ரமணியன், சந்திரோதயம் பதிப்பகம், பக். 64. இந்நுாலில், தயங்காது வாருங்கள் தலைமைப் பொறுப்பேற்க… எது தலைமைத்துவம்? அதன் வகைகள், தலைமையேற்க வயது ஒரு தடையல்ல, மேலாண்மையும் தலைமைத்துவமும், நீங்கள் சிறந்த தலைமைத்துவம் உள்ளவரா? தலைமைத்துவமும் உடல் மொழியும், சோம்பேறிகளை நிர்வகித்தல், பத்து விடயங்களை மறுப்பதற்கு தவறவேண்டாம், நெல்சன் மண்டேலா கற்றுத் தந்த தலைமைத்துவம் உள்ளிட்ட கட்டுரைகள், நுாலாசிரியர் தான் கற்ற, பெற்ற அனுபவங்களின் வெளிப்பாடு எனலாம். நன்றி: தினமலர், 30/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

உச்சியிலிருந்து தொடங்கு

உச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி), வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 175ரூ. வாழ்க்கை என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். வெற்றியும் தோல்வியும், மகிழ்ச்சியும் துன்பமும், வரவும் இழப்பும் கொண்டதுதான் மனித வாழ்க்கை. ஏற்ற இறக்கம் நிறைந்த மனித வாழ்க்கையில் பிரச்சினைகளுக்கு பயந்து தற்கொலை எண்ணத்தை தேடிச் செல்வோரை நல்வழிப்படுத்தும் கருத்துக்கள் நிறைந்த நூல் இது. தற்கொலை எண்ணம் ஏன் வருகிறது? அதற்கு உளவியல், குடும்ப, சமூக காரணங்கள் என்ன?, அதில் இருந்து முண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? […]

Read more

அன்புள்ள மாணவனே

அன்புள்ள மாணவனே, வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை135ரூ. சோதனைகளைக் கடந்து சாதனைகளைச் செய்ய விரும்பும் மாணவர்களுக்கு மகத்தான வழிகாட்டல். அறிவுரைகளாக இல்லாமல் அறவுரைகளாகவும், கடிந்து சொல்லாமல் கடிதங்களாகவும் எழுதியிருக்கும் விதம் அற்புதம். அனுபவத்தைப் பாடமாகத் தந்திருப்பதைப் படிக்கும் மாணவர் யாராயினும் ஏதேனும் ஒருவகையிலாவது சாதனை படைப்பார் என்பது நிச்சயம். நன்றி: குமுதம்,17/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026633.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

உச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி)

உச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி), வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 175ரூ. விதியால் இறப்பவர்களைவிட விரக்தியால் தற்கொலை செய்து கொள்பவர்களால் ஏற்படும் இழப்புகள் கொடுமையானது. ஒற்றை விநாடியில் முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்வதற்கு பதில் சில நிமிடங்கள் நிதானித்து மனம் விட்டுப் பேசினால் எத்தகைய பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். உயிரை பாதிக்கும் வழியில் இருந்து சாதிக்கும் பாதைக்கு மனதைத் திருப்பும் முறையினை எளிமையான நடையில் அருமையாகச் சொல்லியிருக்கிறார் இறையன்பு. படித்து முடித்ததும் மனதில் தளர்ச்சி நீங்கி தன்னம்பிக்கை பரவுவது நிச்சயம். நன்றி: […]

Read more

நேரம் வெற்றிக்கு விதை

நேரம் வெற்றிக்கு விதை, பேராசிரியை கோ.கலாவதி, ஜோதி பதிப்பகம், பக். 56, விலை 50ரூ. காலம் கருதினால் ஞாலமும் கைகூடும்’ என்பது வள்ளுவர் வாக்கு. காலம் கருதி வாழ்ந்தவர்கள் தான், காலம் கடந்தும் வாழ்கின்றனர் என்பதை புது மொழியாகக் கருதலாம். இந்நுால் சிறிதாயினும், நேரத்தின் அருமையையும், அதை மேலாண்மை செய்யும் வழி வகைகளையும், அதனால் அடையப் பெறும் வெற்றியையும், சிறந்த உதாரணங்களுடன் கூறுகிறது. நன்றி: தினமலர், 16/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

வெற்றி தரும் மேலாண்மை பண்புகள்

வெற்றி தரும் மேலாண்மை பண்புகள், முனைவர் அ.அமல்ராஜ் இ.கா.ப., விஜயா பதிப்பகம், பக். 352, விலை 290ரூ. புத்தகத்தை பார்த்தவுடன், படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். நுாலாசிரியரின் சீருடையுடன் கூடிய படமும், பக்கத்தில் முத்தான வாசகம், ‘முயற்சிகள் தோற்கலாம்; முயற்சிப்பவர் தோற்பதில்லை’ என்ற வாசகமும், அமரகவி, தாராபாரதியின், ‘வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம்’ என்ற வாக்கியத்தை நினைவுபடுத்துகிறது. முயற்சியின் மேன்மையை வலியுறுத்துகிறது. ஆண்மை என்பது ஆளும் தன்மை என்ற பொருளில், ஆண், பெண் என்ற வேறுபாடு இன்றி, செய்வதற்கு […]

Read more
1 3 4 5 6 7 23