உடல் அரசியல்

உடல் அரசியல், ஜெகாதா, மீனாட்சி புத்தக நிலையம், பக்.232, விலை ரூ.200. உடல் மொழி பற்றி கேள்விப்பட்டிருப்போம். பேசும்போதும், பேசுவதற்கு மாற்றாகவும் உடல் மொழி உதவுகிறது. இந்த “உடல் அரசியல்’ நூல் கூட ஒருவிதத்தில் உடலின் பேச்சை – உடலின் மொழியை – நாம் உன்னிப்பாகக் கவனிக்கத் தூண்டுகிறது. நான் என்று ஒருவர் தன்னை நினைத்துக் கொள்வது அவருடைய சிந்தனை, மனோபாவம் ஆகியவை மட்டுமல்ல, இந்த உடலும் சேர்த்துத்தான் என்பதால் உடலைப் பற்றி தெரியாத விவரங்களை இந்நூல் சொல்லித் தருகிறது. நமது உடலில் உள்ள […]

Read more

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில், கீழாம்பூர், கலைமகள் பப்ளிகேஷன்ஸ், பக்.88, விலை ரூ.75. நூலாசிரியர் பல நிறுவனங்களில் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்திய அனுபவங்களின் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருக்கிறார். 16 கட்டுரைகள் அடங்கியுள்ள இந்நூலில் பணியாளர்கள் மட்டுமல்லாமல், அனைவருக்கும் தேவையான பல அரிய கருத்துகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. வாழ்க்கையில் முன்னேற எந்த ஒரு மனிதருக்கும் லட்சியங்கள் இலக்காக இருக்க வேண்டும். அந்த இலக்கை அடைய உழைப்பு மிக அவசியம். எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்ய வேண்டும். பிற மனிதர்களுடன் பழகும்போது […]

Read more

கனவோடு நில்லாமல்

கனவோடு நில்லாமல், ஜெ. சதக்கத்துல்லாஹ், வானதி பதிப்பகம்,  பக்: 224, விலை ரூ. 150; தனது வாழ்க்கை அனுபவங்களை எழுதியுள்ள நூலாசிரியர்சதக்கத்துல்லாஹ் கனவை நனைவாக்குங்கள் என்று கூறி அதற்கான பலமடங்கு உந்து சக்தியை இந்த நூலின் மூலம் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதில் தந்தையை இழந்து, குடும்ப வறுமையிலும் பல தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றி பள்ளி, கல்லூரி, வெளிநாடுகளில் மேற்படிப்பை முடித்து இன்று ரிசர்வ் வங்கியின் தென்மண்டல இயக்குநராக உயர்ந்துள்ளார் சதக்கத்துல்லாஹ். மிக எளிய குடும்பத்தைச் […]

Read more

சிறகை விரி பற!

சிறகை விரி, பற!, பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.176, விலை ரூ.130. ஆன்மிகத்தை மையமாகக் கொண்டு உலகின் சகல விஷயங்களையும் பார்க்கும் நூலாசிரியரின் 31 கட்டுரைகள் அடங்கிய நூல் இது. நமது பாரம்பரிய சிந்தனைகள், முன்னோரின் வாழ்க்கைமுறைகளை இன்றைய வாழ்க்கையுடன் இணைத்துப் பார்த்து தெளிவான புரிதல்களை இந்நூல் வழங்கியுள்ளது. அநீதியான எதையும் எதிர்க்கும் பண்பு நூல் முழுவதும் இழையோடி இருக்கிறது. பக்கம் பக்கமாக எழுதப்பட வேண்டிய பல விஷயங்கள் ஓரிரு வரிகளிலேயே சொல்லப்பட்டிருக்கின்றன. எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ” கண், […]

Read more

சிக்கனம் சேமிப்பு முதலீடு

சிக்கனம் சேமிப்பு முதலீடு, சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், பக்.120, விலை ரூ.125. சேமிப்புப் பழக்கம் வீட்டில் உள்ள உண்டியலிலிருந்து தொடங்குகிறது எனத் தொடங்கும் நூலாசிரியர், சேமிப்பதால் என்ன பயன் என்பதை விளக்குகிறார். பணமாகச் சேமித்து வைக்கும்போது விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகிய காரணங்களால் பணத்தின் மதிப்பு குறைந்துவிடுகிறது. அதனால் லாபம் இல்லாமல் போய்விடுகிறது. எனவே, சேமிப்பதற்கான சிறந்த வழிமுறைகளை இந்நூலில் விளக்கியுள்ளார். தனிநபர்களிடம் அல்ல; பதிவு பெற்ற சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வதே நல்லது என்று கூறுகிறார். வங்கிகளில் டெபாசிட் செய்வது நல்லதா? வங்கியின் […]

Read more

வாழ்க்கை வாழத்தான்

வாழ்க்கை வாழத்தான், எஸ்.ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், பக்.120, விலை 90ரூ. வாழ்தல் – நம், ‘கை’யில் இருப்பதால் தான் அதற்கு, வாழ்க்கை’ என்று பெயர் வைக்கப்படுகிறது என்பார் ஏர்வாடியார். ‘ஜெயமுண்டு பயமில்லை மனமே’ என்கிற பாரதி, ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்று கூறி அசையாது நிற்பான். அப்பர் சுவாமிகள், ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்பார். இவர்களைப் போல் அஞ்சாது, வாழ்க்கையை எதிர்கொண்டால், வாழ்க்கை நமக்கு வசப்படும். பழி எண்ணம் மறக்கிற போது, பகை மாறி நட்பு மலரும் என்று பேசும் ஏர்வாடியார் – கவிஞர் அப்துல் […]

Read more

மொபைல் ஜர்னலிசம்

மொபைல் ஜர்னலிசம், நவீன இதழியல் கையேடு, சைபர் சிம்மன், கிழக்கு பதிப்பகம், பக்.216, விலை ரூ.225. செல்பேசி இதழியல் என்பது, களத்தில் நடக்கும் நிகழ்வுகளை எளிதாகவும், விரைவாகவும் படம் பிடித்து வெளியிட ஸ்மார்ட் போன்கள், செயலிகள், சமூக வலைப்பின்னல் சேவைகள் மற்றும் இணைய வசதி ஆகியவை இணைந்து அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதாகும். யார் வேண்டுமானாலும் செல்போன் மூலம் செய்திகளைப் பிறருக்குப் பரப்பலாம் என்ற நிலை இருப்பதால், அதற்கான அடிப்படைகளை வரையறுத்து விளக்குவதும், அவற்றை ஒழுங்குபடுத்துவதும் அவசியமாகிறது. அந்த அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. செல்பேசியின் மூலம் […]

Read more

காவல் துறையினருக்கு வெற்றிதரும் மேலாண்மைப் பண்புகள்

காவல் துறையினருக்கு வெற்றிதரும் மேலாண்மைப் பண்புகள், அ.அமல்ராஜ் ஐ.பி.எஸ்., விஜயா பதிப்பகம், பக். 352, விலை 290ரூ. சவால்களும் பொறுப்புகளும் எல்லாத் துறைகளிலுமே உண்டு என்றாலும் காவல்துறையில் அவை மிகமிக அதிகம். நிர்வாகத்திற்ன் அதிகம் தேவைப்படும் அந்தத் துறையில் இருந்து கொண்டே வாழ்வின் மற்ற எல்லா நிலைகளையும் திறம்பட நிர்வகித்து வெற்றி காண்பதற்கான வழியினை எளிய முறையில் சொல்லும் நூல். புலம்பலோ மன அழுத்தமோ இல்லாமல், பணியிடம், குடும்பம், நட்பு வட்டாரம், வெளியிடம் என்று எல்லா இடங்களிலும் சீராகவும் சிறப்பாகவும் செயல்பட சின்னச் சின்ன […]

Read more

உங்களாலும் முடியும்

உங்களாலும் முடியும்,  பி.வி.பட்டாபிராமன், யுனிக் மீடியா ன்டெகரேட்டர்ஸ், பக்.280, விலை ரூ.230. வெற்றியாளர்கள் என்றால் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே அல்ல. பிரச்னைகள் எதிர்ப்பட்டாலும், இடையில் கைவிடாதவர்களே வெற்றியாளர்கள். எந்தத் துறையிலும் நாம் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் தேவைப்படுவது நம்பிக்கையே. நம்பிக்கையே உண்மையான முதலீடு.ஏழையாகப் பிறப்பது என்பது உங்கள் கையில் இல்லை. ஆனால் ஏழையாகவே இறப்பதா? என்பது உங்கள் கையில் உள்ளது. நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டிய ஓர் உண்மை உள்ளது. அது என்னவென்றால், ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றம் செய்து கொள்வது. நிலைமைகள் மாறிக் […]

Read more

உங்களாலும் முடியும்

உங்களாலும் முடியும்,  பி.வி.பட்டாபிராமன், யுனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ்,  பக்.280, விலை ரூ.230. வெற்றியாளர்கள் என்றால் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே அல்ல. பிரச்னைகள் எதிர்ப்பட்டாலும், இடையில் கைவிடாதவர்களே வெற்றியாளர்கள். எந்தத் துறையிலும் நாம் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் தேவைப்படுவது நம்பிக்கையே. நம்பிக்கையே உண்மையான முதலீடு.ஏழையாகப் பிறப்பது என்பது உங்கள் கையில் இல்லை.ஆனால் ஏழையாகவே இறப்பதா? என்பது உங்கள் கையில் உள்ளது. நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டிய ஓர் உண்மை உள்ளது. அது என்னவென்றால், ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றம் செய்து கொள்வது. நிலைமைகள் மாறிக் கொண்டிருக்கின்றன. அதற்கு […]

Read more
1 2 3 4 5 23