மன உறுதி பெறுவது எப்படி

மன உறுதி பெறுவது எப்படி; ஆசிரியர்; அனிதா பானர்ஜி, வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ், விலை ரூ. 40/- குறிக்கோளில் வெற்றி பெற மன உறுதி தான் முக்கிய தேவை. அது, பாதையை வகுத்து, பயணத்தை துாண்டும். இத்தகைய பண்பை பெறும் வழிமுறையை சொல்லும் நுால்.பத்து தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. தாழ்வு மனப்பான்மையை ஒழிப்பது பற்றி தனியாக விளக்கப்பட்டுள்ளது. சிறிய உதாரணங்கள் நிறைந்துள்ளன. மன உறுதி ஏற்பட்டு விட்டால், விடாமுயற்சி தொடர்ந்து வரும். முயற்சியால் செயல் கைகூடும். முன்னேற விரும்புவோருக்கு உதவும் எளியநுால். -கிருஷ்ணவேணி. நன்றி: தினமலர். […]

Read more

உன்னுள் யுத்தம் செய்

உன்னுள் யுத்தம் செய்,  இரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்., குமரன் பதிப்பகம், விலை ரூ.180. ‘உன்னுள் யுத்தம் செய்’ என்னும் நுாலின் மூலம் அறிமுகமான இரா.திருநாவுக்கரசு, ‘தன்னிலை உயர்த்து’ என்னும் தலைப்பில், இளைஞர் மணி மற்றும் ‘தினமலர், தினத்தந்தி’ நாளிதழ்களில் எழுதி வருகிறார். மனதை ஒருமுகப்படுத்தினால் எதுவும் சாத்தியமாகும் என்ற கருத்தை முத்து பேராசிரியர், யஸ்வந்த், கணேசன் போன்ற கதாபாத்திரங்கள் மூலம் தந்திருக்கிறார். அனுமன் போன்ற இதிகாசப் பாத்திரங்கள் மூலமும் கருத்துக்களை வெளிப்படுத்துகிறது இந்நுால். காலையில் கண் விழித்ததும், நேர்மறை எண்ணங்களை மாணவர்களுக்குத் தேவையான விதத்தில் பதிய […]

Read more

புதிதாய்ப் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!

புதிதாய்ப் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!, அ.முகமது அப்துல்காதர், கற்பகம் புத்தகாலயம்,  பக்.160, விலை ரூ.120.  ஒரு மனிதர் என்று சாதனை படைக்கிறாரோ அன்றுதான் அவர் பிறந்ததாக கருத வேண்டும் என்கிறார் அப்துல்கலாம். அந்த கருத்தையே தலைப்பாகக் கொண்டுள்ளது இந்த நூல். ‘வாழ்க்கை கடினமானதுதான் ஆனால் வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது’ என்கிறார் புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். ‘வலிகளை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்கிறார் புத்தர். ‘வலிகளால் நிரப்பப்பட்டதுதான் வாழ்க்கை . அதை திறம்பட கையாளுவதன் மூலம் தொடர்ந்து சாதனைகள் படைக்கலாம்’ என்கிறார் நூலாசிரியர். […]

Read more

வெற்றி எங்கே இருக்கிறது?

வெற்றி எங்கே இருக்கிறது? , உதயை மு.வீரையன், மணிவாசகர் பதிப்பகம், பக்.136, விலை ரூ.100. வாழ்கையில் ஒருவர் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதை மிக விரிவாகக் கூறும் நூல்.சிறந்த குறிக்கோள் இருப்பவர்களே சிறந்த மனிதர்களாக விளங்க முடியும். சிறந்த மனிதர்களால் மட்டுமே சிறந்த வெற்றியை ஈட்ட முடியும். எந்தச் செயலையும் செய்வதற்கு முன்னும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும். முடிவு எடுத்த பிறகு திரும்பிப் பார்க்காமல் முன்னோக்கியே போய்க் கொண்டிருக்க வேண்டும்.கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த முயற்சிகளில் […]

Read more

இளமையில் வெல்

இளமையில் வெல், செ.சைலேந்திரபாபு ஐ.ஏ.எஸ்., தினத்தந்தி பதிப்பகம், விலை 120ரூ. ஒரு நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்பவர்கள் இளைஞர்கள். அவர்களை ஆற்றல் படைத்தவர்களான உருவாக்க வேண்டும். அதே வகையில் அவர்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும், ஐ.பி.எஸ். அதிகாரி செ.சைலேந்திரபாபு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்த கட்டுரைத் தொடர், தினத்தந்தி இளைஞர் மலரில் வெளியானபோது, லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. அது இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. ‘பூமியில் புதைத்த மரத்துண்டுகளில் அதிக அழுத்தத்துக்கு உள்ளான கரித்துண்டுகளே […]

Read more

உதிர்ந்தும் உதிராத

உதிர்ந்தும் உதிராத, எஸ்.வி.வேணுகோபாலன், பாரதி புத்தகாலயம், பக். 135, விலை 135ரூ. மனதிற்கு நெருக்கமானவர்களை, மரணம் பிரிக்கும் போது, பெரும் துயரத்திற்கு ஆளாகிறோம். அழுகையால் துயரத்தை கடக்கிறோம். பிரபலங்களின் மறைவு செய்தி, அவர்கள் வாழ்க்கையை தெரிந்துகொள்ள தூண்டும். அதற்கு விடைகாணும் வகையில் இந்நூல் உள்ளது. மறைந்த அப்துல்கலாம், கிரேஸி மோகன், வாலி, எம்.எஸ்.விஸ்வநாதன், மனோரமா, தென்கச்சி கோ.சுவாமிநாதன், நா.முத்துக்குமார், ஓவியர் கோபுலு போன்ற, 24 ஆளுமைகளின் வாழ்க்கையை தொகுத்து வழங்கி உள்ளார் நூல் ஆசிரியர். தன்னம்பிக்கையின் அடையாளமாக இந்நூல் உள்ளது. நன்றி: தினமலர், 19/1/20 […]

Read more

மொபைல் ஜர்னலிசம்

மொபைல் ஜர்னலிசம், சைபர் சிம்மன், கிழக்கு பதிப்பகம், பக். 216, விலை 225ரூ. இதழியல் துறையில் புதிதாக ஒரு புயல் வீசிக் கொண்டிருக்கிறது. ‘மொஜோ’ என அழைக்கப்படும், மொபைல் ஜர்னலிசம், இத்துறையில் ஒரு புதிய வாசலை திறந்து வைத்திருக்கிறது. அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பங்களை தன் வளர்ச்சிக்கு உதவும் வகையில் வளைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது இதழியல் துறை. இப்போது அந்த வரிசையில், செல்பேசியையும் இத்துறை சேர்த்துக் கொண்டுள்ளது. நம் நாட்டில், செல்பேசி இதழியல் இப்போது தான் முதல் அடி எடுத்து வைக்க துவங்கியிருக்கும் நிலையில், […]

Read more

வெல்ல நினைத்தால் வெல்லலாம்

வெல்ல நினைத்தால் வெல்லலாம்,  அ.அமல்ராஜ், விஜயா பதிப்பகம், பக்.368, விலை ரூ.300. வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு விடை தரும் நூல். வெல்ல வேண்டும் என்று நினைத்தால் வெல்லலாம் என்றாலும் அப்படி நினைப்பதற்கே நம்மைத் தயார்ப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்நூல் மனதின், எண்ணத்தின், சொல்லின், செயலின், பழக்கத்தின் வல்லமைகளை மிக விரிவாக விளக்குகிறது. மனம், எண்ணம், குணம், சொல், செயல், பழக்கம் எல்லாமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்று இன்னொன்றின் மீது தாக்கம் ஏற்படுத்துபவை. எதிலும் கவனம் செலுத்த, நம்பிக்கை கொள்ள, […]

Read more

அச்சம் தவிர்… ஆளுமை கொள்

அச்சம் தவிர்… ஆளுமை கொள், பரமன் பச்சைமுத்து, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.160, விலை ரூ.150. படிப்பு என்பது ஒரு பாஸ்போர்ட். உங்களை நேர்முகத் தேர்விற்கும், முக்கியமான தளங்களுக்கும் கொண்டு சேர்க்கும். ஆனால் வாழ்வில் மேலும் மேலும் வெற்றி பெற சில தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஆளுமை என்று சொல்லலாம். ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள அச்சம் தடையாக இருக்கிறது. அச்சத்தை எவ்வாறு நீக்குவது? ஆளுமைப் பண்புகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது? இதுதான் இந்நூலின் சாரம். அச்சப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அச்சப்படும் ஒரு […]

Read more

மனம் சொல்லுமே மகிழ்ச்சி

மனம் சொல்லுமே மகிழ்ச்சி, ந.ஸ்ரீதர், மணிமேகலைப் பிரசுரம், பக். 96, விலை 80ரூ. அன்றாட நிகழ்வை சுட்டிக்காட்டி, அதன் மூலம் நமக்கு வாழ்க்கையின் புரிதலை, ‘மனம் சொல்லுமே மகிழ்ச்சி’ என்ற நுாலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வழியே காட்டுகிறார். நாளை நிகழவுள்ள நிகழ்வுக்காக, இன்றுள்ள பொழுதை வாழ வழியில்லாமல் தவிக்கும் மனிதர்களுக்கு, ‘நம் மனதில் உள்ள குப்பைகள்’ என்ற தலைப்பில் புத்துணர்ச்சி மலரச் செய்யும் பொக்கிஷம் இந்நுால் என்றால் மிகையாகாது. நன்றி: தினமலர், 2/2/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் […]

Read more
1 2 3 4 23