வெடிச்சிரிப்பு

  வெடிச்சிரிப்பு, அ.மா.சாமி, நவமணி பதிப்பகம், விலை 150ரூ. ஏராளமான கதை கட்டுரைகளை எழுதி வாசகர்களிடம் புகழ் பெற்ற ராணி வார இதழின் முன்னாள் ஆசிரியர் அ.மா.சாமி எழுதியுள்ள நகைச்சுவை நூல் வெடிச்சிரிப்பு. இதில் 5 நாடகங்கள் உள்ளன. கதைகளை நகைச்சுவையுடன் எழுதுவது அ.மா.சாமிக்கு கைவந்த கலை. எனவே இந்த நகைச்சுவை நாடகங்கள் வாசகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பதில் வியப்பில்லை. நன்றி: தினத்தந்தி, 1/11/2017

Read more

தமிழக ஜோக்ஸ் பிரபலங்கள்

தமிழக ஜோக்ஸ் பிரபலங்கள், தொகுப்பு திருமயம் பெ. பாண்டியன், வைகை ஆறுமுகம், பாண்டியன் வைகை பதிப்பகம், விலை 140ரூ. ஜோக்ஸ் எழுதுவதில் புகழ் பெற்றவர்கள் பற்றிய விவரங்களும், துணுக்குகளும் கொண்ட புத்தகம். நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

முப்பருவம்

முப்பருவம், எஸ்.ஏ.வேணிற்செல்வன், சாரதி பதிப்பகம், பக். 336, விலை 150ரூ. பேதைப் பருவம், பெதும்பைப் பருவம், மங்கைப் பருவம் எனும் முப்பருவம், இந்தப் புதினம். இன்றைய விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்து, கிராமத்து மண்ணும், குழந்தைகள் போன்ற அந்த மக்களின் வாழ்க்கையும் நன்றாகப் பதிவாகி இருக்கின்றன. அந்தக்கால குழந்தை திருமணம், எப்படி விமரிசையாக நடக்கும் என்பதையும், ஆசிரியர் நன்றாகப் படம் பிடித்துக்காட்டுகிறார். முருகையன், வள்ளியம்மாள், சுந்தரம், லட்சுமி இளவரசு, மங்கையர்க்கரசி பாத்திரப் படைப்புகள் அருமை. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் முறை, கிராமத்திலே பல்துலக்க, […]

Read more