ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு – சராஜீவோவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை

ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு – சராஜீவோவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை , ஸ்லெட்டா ஃபிலிப்போவிக்,  தமிழில் – அனிதா பொன்னீலன், புலம் வெளியீடு,  பக்.208, விலை  ரூ. 170. போர்க்களச் சூழலில், 13 வயதுச் சிறுமி எழுதிய நாட்குறிப்புகள் தாம் இந்நூல். அவர், ஸ்லெட்டா ஃபிலிப்போவிக். யுகோஸ்லாவியாவிலிருந்து விடுதலையடைந்த போஸ்னியா, ஹெர்ஸகோவினா என்ற சின்னஞ்சிறிய நாடுகள் எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என விரும்பி செர்பியர்கள் நடத்திய போர்தான் நாட்குறிப்பின் அடிப்படை. 1991 முதல் 1993 வரை நடந்த போரில் ஏற்பட்ட துயர அனுபவங்கள்தாம் […]

Read more

மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு

மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு, சுந்தரபுத்தன், பரிதிபதிப்பகம், விலை 150ரூ. மணம் வீசும் நினைவுகள் கண்ணையும் காதையும் திறந்துவைத்திருக்கிறவர் பத்திரிகையாளர் சுந்தரபுத்தன். சென்னையின் மஞ்சள் பூக்கள் நிறைந்த தெருக்களையும் கிராமத்தில் வெல்லம் அடைத்து சுட்டுத்தின்னும் தேங்காய்களையும் ஒரே நேரத்தில் எழுதுகிறவர். நகரவாழ்விலிருந்து கிராம வாழ்வின் ஏக்கங்களை, பெருமூச்சுகளை பதிவு செய்யும் இவரது எழுத்துகளில் ஏராளமான மனிதர்கள் வந்துபோகிறார்கள். பூவிற்கும் பெண்மணி முதல் நடிகர் சிவாஜிகணேசன் வரை எத்தனைபேர்? தன் தந்தையாரை என்ன மீசை எப்படி இருக்கே என்று நடிகர் சிவாஜிகணேசன் கூப்பிட்டதாக நினைவுகூரும் இவர் […]

Read more

இது மடத்துக் குளத்து மீனு

இது மடத்துக் குளத்து மீனு, ஹாஜகான், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 215ரூ. மிதக்கும் நினைவுகள் சுயசரிதைக்கு இணையான பொறுப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டிருக்கிறது இந்த நினைவலைகள் தொகுப்பு. ஷாஜகான், தான் படித்து ரசித்தது, தான் அவமானப்பட்டது, தான் பாராட்டப்பட்டது அனைத்தையும் எளிமையான நடையில் பதிவு செய்திருக்கிறார். சாலை விபத்துகள், ‘தூல் கா ஃபோல்’ இந்திப் படப் பாடல், கடித இலக்கியம், தாராபுரத்தில் உள்ள சித்தி வீடு, கணக்கு வாத்தியார்… என்று அவரது நினைவலைகளில் மிதக்கும் தகவல்கள் சுவையான டைரிக் குறிப்புகளாகச் சுவையூட்டுகின்றன. -மானா. நன்றி: […]

Read more

திருவள்ளுவர் திருவுள்ளம்

திருவள்ளுவர் திருவுள்ளம், பெருவெளிராமன், கணபதி பதிப்பகம், பக். 144. திருக்குறளில் வீடு பேறு பற்றிச் சொல்லப்படவில்லை என்னும் கருத்தை மாற்றி, ஆதிபகவானை அறிதலே வீடு பேற்றை நல்கும் என்று நூலைத் தொடங்கியுள்ளார். பாயிரம் திருவள்ளுவர் எழுதவில்லை என்ற கருத்தையும், வன்மையாக மறுத்து எழுதியுள்ளார். திருவள்ளுவரின் திருவுள்ளத்தை ஊடுருவி பல குறட்பாக்களுக்கான நுண் பொருளைக் காணும் முயற்சியில் ஈடுபட்டு தொல்காப்பியம் தொடங்கி, சங்க இலக்கிய நூல்கள், தமிழ் மற்றும் வட மொழியில் உள்ள ஆன்மிக நூல்கள் பலவற்றின் துணையும் கொண்டு, இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. பல்வேறு நூலறிவும், […]

Read more

பொலிவிய நாட்குறிப்பு

பொலிவிய நாட்குறிப்பு, சே கெவாரா, தமிழில்-அமரந்த்தா, காலக்குறி, 31/48 இராணி அண்ணாநகர், கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 78, விலை 225ரூ. எங்களது ஒவ்வொரு செயல்பாடும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தின் அறைகூவல்தான். இதை வரவேற்கும் ஏரோ ஒரு காதில் இந்த அறைகூவல் விழுமானால், எங்கள் ஆயுதங்களை ஏந்துவதற்கு மற்றொரு கை நீளுமானால், மரணம் எம்மை எங்கெங்கு எதிர் கொள்வதானாலும் அதற்கு நல்வரவு என்று தனது நாட்குறிப்பில் சே கெவாரா எழுதும்போது, பொலிவியக் காடுகளுக்குள் உயிரைப் பயணம் வைத்துச் சென்றுகொண்டு இருந்தார். அர்ஜென்டினாவில் பிறந்து… கவுதமாலா […]

Read more