ஈழம் 87

ஈழம் 87, வரலாற்று ஓவியப் பதிவு, தாய்ப்பனை வெளியீடு, விலை 500ரூ. ஓவிய வடிவில் ஈழப்பிரச்னை ஈழப் பிரச்னையை விளக்கும் பல நூல்களுக்கு மத்தியில் அப்பிரச்னையின் ஒரு முக்கிய காலகட்டத்தைர ஓவியங்களின் மூலமாகச் சொல்கிறது இந்த நூல். அங்கங்கே வர்ணனையாக குறிப்புகளை உணர்வுடன் எழுதி இருப்பவர் புகழேந்தி தங்கராஜ். 1987ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரபாகரன் – ராஜீவ்காந்தி சந்திப்பு முதல் அதன் பின்னர் நிகழ்ந்த இந்திய அமைதிப்படை – புலிகள் மோதல் போக்கு என 1987 முதல் 1990 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த […]

Read more

ஒரு கணவாய் யுத்தம்

ஒரு கணவாய் யுத்தம், போஸ்சில்லி, லயன் காமிக்ஸ், பக்.266, விலை 150ரூ. காமிக்ஸ் புத்தகத்திற்கு, உலகெங்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. படமும், கதையும் என்ற அணுகுமுறை, குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது. லயன் காமிக்ஸ், இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் வெளிவந்து, பெரும் வெற்றி பெற்ற காமிக்ஸ் புத்தகங்களை, தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுகின்றனர். வரவேற்கத்தக்கது நன்றி: தினமலர், 20/1/2018

Read more

சுந்தரகாண்டம் (படக்கதை)

சுந்தரகாண்டம் (படக்கதை), டாக்டர் வே. ஹரிகுமார் பதிப்பகம், தாரணி பதிப்பகம், விலை 20ரூ. ராமாயணத்தின் இறுதிப் பகுதி சுந்தர காண்டம். ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையை ராமன் மீட்பதுதான் சுந்தரகாண்டம். இதைப் படக்கதையாக்கி இருக்கிறார் டாக்டர் வே.ஹரிகுமார். ஓவியங்களை அழகாகத் தீட்டியிருக்கிறார் தமிழ். பாராட்டத்தக்க முயற்சி. நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் (படக்கதை), ஓவியர் ப. தங்கம், தங்கப்பதுமை பதிப்பகம், விலை 200ரூ. “கல்கி”யின் “பொன்னியின் செல்வன்” சரித்திர நாவல் மீது தீராக் காதல் கொண்டவர் ஓவியர் ப. தங்கம். அந்த காவியத்தை சித்திரக் கதையாக வடிவமைத்து, புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார். இப்போது இரண்டாவது புத்தகம் வெளிவந்துள்ளது. பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரங்களை ஓவியர் மணியம் எப்படி உருவாக்கி உயிரோவியங்களாக நடமாட விட்டாரோ, அதே பாணியில் ஓவியர் தங்கமும் தன் முழுத்திறமையையும் பயன்படுத்தி இந்த படக்கதையை உருவாக்கியுள்ளார். படங்களும், வசனங்களும் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. […]

Read more