கண்டுகொண்டேன் சாயிபாபா

கண்டுகொண்டேன் சாயிபாபா, த.மா.ஜெம்புலிங்கம், ஸ்ரீரங்கம் சீரடி சாய் பவுண்டேஷன், விலை 100ரூ. சாயிபாபா நிகழ்த்திய அற்புதங்கள் மற்றும் அவரது அருமை பெருமைகளைக் கூறும் 230 பாடல்களைக் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது. அத்தனை பாடல்களும் மரபுக் கவிதைகள் என்றாலும், அவற்றைப் பேச்சு வழக்குத் தமிழில் கொடுத்து இருப்பதால் எளிதில் பொருள் விளங்கிப் படிக்க முடிகிறது. பல்வேறு கடவுள்களின் அவதாரங்கள் பற்றிய தகவல்களும் இந்த நூலில் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 26/9/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

திருமூலர் வாழ்வும் வாக்கும்

திருமூலர் வாழ்வும் வாக்கும், டாக்டர் துரை.இராஜாராம், நர்மதா பதிப்பகம், விலை 100ரூ. திருமூலர் எழுதிய மூவாயிரம் மந்திரங்களில் முக்கியமான சில மநதிரங்களுக்கு, அவற்றில் பொதிந்துள்ள அர்த்தங்கள் என்ன என்பது இந்த நூலில் சொல்லப்பட்டு இருக்கின்றது. திருமூலரின் வாழ்க்கைக் குறிப்பு, சித்தர்களின் சிறப்பு ஆகியவையும் இந்த நூலில் காணப்படுகின்றன. நன்றி: தினத்தந்தி, 26/9/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000006461_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வாழ்க்கைப் படிகள்

வாழ்க்கைப் படிகள், புலவர் மா.அருள்நம்பி, சங்கர் பதிப்பகம், விலை:ரூ.75. வாழ்வில் முன்னேறுவதற்கு வழிகாட்டியாக, அறிஞர்களின் அனுபவ வா அறிவு, சிறப்பாக வாழ்ந்து காட்டியவர்களின் வாழ்வியல் முறை ஆகியவை திருமந்திரம், திருக்குறள், தேவாரம் திருவாசகம், மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றின் எடுத்துக்காட்டுகளுடன் தரப்பட்டு இருக்கின்றன.  நன்றி: தினத்தந்தி, 6/2/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நபிகளாரின் பொன்மொழிகள்

நபிகளாரின் பொன்மொழிகள், ஆலிம் பப்ளிகேஷன் பவுண்டேசன்; விலை:ரூ.650; இறைவனின் அருள் வேதமாகிய திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் பெரிதும் போற்றப்படுகின்றன. பெரும்பாலான நபி மொழித் தொகுப்புகள் இறைநம்பிக்கை, தூய்மை, தொழுகை எனப் பாடத்தலைப்புகளைக் கொண்டு அமைந்து இருக்கும். ஆனால் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் தொகுத்த முஸ்னது அஹ்மத், இதில் இருந்து வேறுபட்டது. இது நபித் தோழர்கள் பெயர்களால் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஒரு நபித் தோழர் அறிவித்திருக்கும் நபிமொழிகளை ஒரே இடத்தில் காணலாம். மூன்றாம் பாகமாக வெளியாகி […]

Read more

பரஞ்சுடர்

பரஞ்சுடர், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, ஓங்காரம், விலைரூ.301. ஆன்மிக கருத்துகள் நிறைந்த நுால். வாழ்க்கையை அஞ்ஞானத்திற்கும், பொருளீட்டுவதற்கும், காமத்திற்கும் பயன்படுத்துவதை விடவும், மெய்ஞ்ஞான பொருளாகிய இறைவனை அடைய, தியானம் செய்து வாழ வேண்டும். பிறரையும் வாழ வைக்க வேண்டும். அமாவாசைக்கு அடுத்த பதினைந்து நாட்கள் ஏறுமுகம்; இதை ஆரோகணம் என்பர். இந்த காலகட்டத்தில், புண்ணியங்கள் செய்ய வேண்டும். பவுர்ணமியிலிருந்து அடுத்த பதினைந்து நாட்கள் இறங்குமுகம்; இதை அவரோகணம் என்பர். இந்த காலகட்டத்தில், பாவத்திற்காகப் பரிகாரம் செய்ய வேண்டும் என பதிவு செய்துள்ளார். உடல், உள்ளத் […]

Read more

தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்

தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் (உரை விளக்கத்துடன்), கே.கே. இராமலிங்கம், நர்மதா பதிப்பகம், விலைரூ.240 அருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழ் பாடல்களின் பொருளை உணர்ந்து ஓதி மகிழ்வதற்கேற்ப, உரை விளக்கம் வழங்கப்பட்டுள்ள நுால். துவக்கத்தில் அருணகிரி நாதரின் வரலாறு தரப்பட்டு உள்ளது. இளம் பருவத்தில் பெண் மோகம் கொண்டு அலைந்திருந்தவர், பின்னாளில் உணர்ந்து, முருகனருள் நாடித் தவமிருந்து, அளவிலாப் புலமை பெற்றதிலிருந்தே தடுத்தாட் கொள்ளப்பட்டது புலனாகிறது. அருணகிரி நாதர் இயற்றிய பல ஆன்மிகப் பாடல் நுால்களில் ஒன்று திருப்புகழ். முருகனே கேட்டு மயங்க வல்ல […]

Read more

திருக்கயிலையில் நாதோபாஸனை

திருக்கயிலையில் நாதோபாஸனை, ஜெமினி ராமமூர்த்தி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. திருக்கயிலை யாத்திரை செல்ல விரும்பும் இந்திய யாத்ரீகர்களுக்கு, நினைத்த போதெல்லாம் செல்ல முடியாது. கயிலையும் மானஸரோவரும் இந்தியாவில் இல்லை; இரண்டுமே மேற்கு பகுதியில் உள்ள இமயத்தில் இருக்கின்றன. அப்படிப்பட்ட புனித தலங்களை பல சிரமங்களுக்கு இடையே நேரில் சென்று தரிசித்து, அந்த அனுபவங்களை எளிய நடையில் அனைவரும் புரிந்து அனுபவிக்கும் வகையில் ஜெமினி ராமமூர்த்தி எழுதியுள்ளார். நாமே நேரில் சென்று அந்த தலங்களை தரிசித்த அனுபவத்தை, இந்த நுாலைப் படிப்பதன் […]

Read more

வாழ்வே ஒரு மந்திரம்

வாழ்வே ஒரு மந்திரம், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், பக்.280, விலை ரூ.260. ஒரு நூறு சமயக் கிரந்தங்களையும், அவற்றிற்கான ஓராயிரம் வியாக்கியானங்களையும் வாசிக்கவும் யோசிக்கவும் எங்களுக்கு நேரமில்லை; ஆனால் அவற்றிலிருந்து வடித்தெடுத்த சாரத்தை யாராவது கொடுத்தால் பருகத் தயார் என்ற நிலையில்தான் இன்று பெரும்பாலானவர்கள் உள்ளனர். அத்தகையோரின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளிவந்துள்ள தகவல் திரட்டுதான், இந்த நூல். திருமந்திர கருத்துகளை மையமாகக் கொண்டு இன்றைய இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை நெறிகள் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.  எட்டு தலைப்புகளில் ஏராளமான […]

Read more

இராம காவியம்

இராம காவியம், திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், பக்.368, விலை ரூ. 113. தமிழின் பெருங்காவியமான கம்ப ராமாயணத்தை சற்று சுருக்கமாக, உரைநடை வடிவில் எழுதியுள்ளார் கிருபானந்த வாரியார்.  அயோத்தி மாநகரை ஆண்டு வந்த தசரத சக்கரவர்த்தி, தமது குலகுருவான வசிஷ்ட முனிவரிடம், தனக்கு மகப்பேறு இல்லாத குறையைக் கூறி வருந்த, வசிஷ்டர் அவர் புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும் என்று கூற, அவ்வாறே தசரதர் யாகம் செய்ய, தசரதருக்குக் குமாரராக இராமர் பிறந்தார் என்று இராமரின்பிறப்பை […]

Read more

திருவிளையாடல் புராணம்

திருவிளையாடல் புராணம், சிவ.இராஜேசுவரி இராசா, பார்த்திபன் பதிப்பகம், விலை 100ரூ. சிவபெருமானின் திருவைளயாடல்கள் குறித்து பரஞ்சோதி முனிவர் எழுதிய புராணத்தில் உள்ள 64 திருவிளையாடல்களும் இந்த நூலில் எளிய முறையில் சொல்லப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 8/8/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 4 128