மகான் ஸ்ரீ நாராயண குரு புனித சரிதம்

மகான் ஸ்ரீ நாராயண குரு புனித சரிதம், ஆர்.வி. பதி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.200 நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டு மக்களின் வளர்ச்சியில் இருக்கிறது; மக்களின் வளர்ச்சி என்பது அவர்களுக்கு தரப்படும் சமமான வாய்ப்புகளில் இருக்கிறது. அப்படி சம வாய்ப்பு பெற இயலாத ஏழை எளிய மக்களின் அரிய வழிகாட்டியாக அம்மக்களை உயர்த்த பாடுபட்டவர் தான், கேரளத்தில் செம்பழந்தியில் அவதரித்த ஸ்ரீ நாராயண குரு. ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம். மதம் எதுவானாலும் மனிதன் நன்றானால் […]

Read more

வியப்பூட்டும் வழிபாடுகள்

வியப்பூட்டும் வழிபாடுகள், பெ.பெரியார் மன்னன், விவேகா பதிப்பகம், விலைரூ.145 வித்தியாசமான 50 கோவில்கள் பற்றியும், அவற்றின் வழிபாட்டு முறை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்துள்ள இந்த நுாலில், அந்தச் சுவாமிகளின் படத்தையும் தெளிவான தகவல் கொண்ட நுால். இதில் இடம்பெற்றுள்ள கோவில்கள் சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டாரத்தில் உள்ளவை. கல்வராயன் மலையில் ராமனைக் கரியராமன் என்று குறிப்பிடுகின்றனர். கல்வெட்டையும் கடவுளாக வணங்குகின்றனர். அந்தக் கல்வெட்டை வணங்கினால் நோய் தீர்ந்துவிடும் என்னும் நம்பிக்கையும் இந்தப் பகுதியில் நிலவுகிறது. ஓர் ஊரில் எட்டுக்கை அம்மன் சிலை 45 அடி […]

Read more

தெய்வங்கள் கேட்கவரும் தேனிசைப் பாடல்கள்

தெய்வங்கள் கேட்கவரும் தேனிசைப் பாடல்கள், கவிஞர் மு.தவசீலன், வானதி பதிப்பகம், விலை: ரூ.120. தமிழர் வழிபாட்டு மரபில் பக்திப் பாடல்களுக்குத் தனித்த இடம் உண்டு. கவிஞர் மு.தவசீலன் எழுதியுள்ள பக்திப் பாடல்களின் தொகுப்பு இந்நூல். திரைப்படங்களிலும் பாடல்களை எழுதியிருப்பவர் என்றாலும் பக்திப் பாடல்களுக்காகவே அறியப்படுபவர் தவசீலன். அவர் எழுதிய பாடல்களை பி.சுசீலா, வாணி ஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி சிவசிதம்பரம், கே.வீரமணி உள்ளிட்ட புகழ்பெற்ற பல பாடகர்கள் பாடியுள்ளனர். குன்னக்குடி வைத்தியநாதன், வி.குமார், எச்.எம்.வி. ரகு உள்ளிட்டோர் இசையமைத்துள்ளனர். பண்டிகை நாட்களில் வீடுகளிலும் […]

Read more

சைவ சமயம் – ஒரு புதிய பார்வை

சைவ சமயம் – ஒரு புதிய பார்வை, சிகரம் ச. செந்தில்நாதன், சந்தியா பதிப்பகம், விலை: ரூ. 250 சிந்துவெளி நாகரிகம் நம் கவனத்தில் பட ஆரம்பித்து நூறாண்டுகள் கடந்துவிட்டன. இந்த நூறாண்டுகளில் சிந்துவெளிப் பண்பாட்டுக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் இடையேயுள்ள உறவு பற்றிய ஆய்வுகளும் மிகத் தீவிரமாகக் களத்தில் முன்நிற்கின்றன. வடமொழியும் அதன் வேதங்களும் ஆட்சி செலுத்தும் முன்பே இந்த மண்ணில் நிலவிய நாகரிகம் தமிழர்களின் நாகரிகம் என்பதை நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இவை அனைத்துக்கும் மேலாக சமீபத்திய கீழடி […]

Read more

கர்ம வினைகள் நீக்கும் கால பைரவ ரகசியம்

கர்ம வினைகள் நீக்கும் கால பைரவ ரகசியம், ஜெகதா, சங்கர் பதிப்பகம், விலைரூ.260. கால பைரவரின் புராணத்தில் துவங்கி, பைரவர் சிறப்புகளையும் வழிபாட்டு முறைகளையும் கூறி, பைரவ வழிபாட்டால் கிட்டும் பலன்கள், தமிழகத்திலுள்ள பைரவர் தலங்கள், பைரவர் சஷ்டி கவசம், அஷ்ட பைரவர் அவதாரங்கள், பைரவர் ஆற்றல்கள், பிரபஞ்ச ரகசியம், நட்சத்திர கோவில்கள் போன்ற பல தகவல்கள் தொகுக்கப்பட்ட நுால். சனி பகவானுக்குக் குரு என்பதாகக் கூறி, ஒவ்வொரு ராசிக்காரரும் முறைமையோடு வழிபாடு செய்ய வேண்டிய கிழமைகள் தரப்பட்டுள்ளன. பைரவர் விரதம் மேற்கொள்ள வேண்டிய […]

Read more

நவ கைலாய கோவில்கள்

நவ கைலாய கோவில்கள், பாலசர்மா, ஆர்.ஆர்.நிலையம், விலைரூ.60 முக்கிய கோவில்களின் தகவல் களஞ்சியமாக வழிபாட்டு முறைகள் பற்றி விரிவாக விளக்கியுள்ள நுால். இமயமலைத் தொடரில் கைலாயமலைக்கு நிகராக தாமிரபரணி நதிக்கரை ஓரங்களில் அமைந்துள்ள ஒன்பது சிவாலயங்கள் நவ கைலாயம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளன. இவற்றின் அமைவிடம், கலைநயம், கோபுரங்கள், இயற்கையழகு, புராண வரலாறு, அத்திருத்தலத்தின் தீர்த்தம், வழிபாட்டு முறைகள், வழிபாட்டு நேரங்கள், தோஷ நிவர்த்திகள், பூஜையின் பயன்கள் என விவரங்கள் தரப்பட்டுள்ளன. ஆன்மிக அன்பர்களுக்கு வழிகாட்டும் நுால். – புலவர் சு.மதியழகன் நன்றி: தினமலர், […]

Read more

வரம் தரும் அன்னை

வரம் தரும் அன்னை, பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.190. இந்து கடவுள் என்றால் இந்தியாவிலிருந்து தான் வரமுடியுமா… பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம்; மகாகாளி உருவெடுக்கலாம்; சரஸ்வதி வீணை மீட்டலாம். மகாலட்சுமி அருட்கடாட்சம் தரலாம் என்பதை உணர்த்தும் நுால். பிரான்சில் இருந்து வந்த மிர்ரா, அன்னையாக மகான் அரவிந்தர் அடியொற்றி, தத்துவங்களை பின்பற்றி நடந்தவர். நீ நீயாய் இரு என்பது தான் அன்னை சொல்லும் வேதம். உண்மை, அன்பு, பாசம் என நற்பண்புகளுடன் விளங்குவது தான் நீயாக இருப்பதன் அவசியம். […]

Read more

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், மு.அருணகிரி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.990. காசி மாநகரில் முனிவர்கள் பலர் கூடியிருந்து மதுரையைப் பற்றியும், அங்கே சிவபெருமான் கோவில் கொண்டிருப்பது பற்றியும் உரையாடுகின்றனர். அவர்களுடன் இருந்த அகத்தியரைப் பார்த்து, சிவபெருமான் திருவிளையாடல் புரிவதற்கு ஏற்ற இடமாக மதுரையைத் தேர்ந்தெடுத்தது குறித்து கேட்டனர். அந்த முனிவர்களுக்கு, 63 திருவிளையாடலையும் அகத்தியர் கூறுவதைப் போல் இந்த நுால் துவங்குகிறது. தமிழ் மொழியில் நுாற்றுக்கணக்கான தல புராணங்கள் உள்ளன. அவற்றில் எல்லாம் மிகவும் பழமையானதாக விளங்குகிறது. 13ம் நுாற்றாண்டில் தோன்றியது, திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம். […]

Read more

திருவடி முதல் திருமுடி வரை

திருவடி முதல் திருமுடி வரை, அருண் சரண்யா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160 புத்தகத்தின் பெயரைப் பார்த்ததும் திருமாலும், பிரம்மனும் விஸ்வரூபம் எடுத்த சிவபெருமானின் அடியையும், முடியையும் காணச் சென்ற கதை தானே என்று நினைக்க வேண்டாம். திருவடி முதல், திருமுடி வரையான உடலின் ஒவ்வொரு உறுப்புகளைப் பற்றிய அரியின், சிவனின் திருவிளையாடல்கள் விளக்கப்படுகின்றன. சிறு சிறு கதைகளின் வழியே எளிமையாக மனதில் பதியும் வகையில் சொல்லப்பட்டுள்ளது. தன் இடையால் சிவபக்தனை திருத்திய திருமாலின் கதை சுவாரசியத்தைத் துாண்டும். ராதையின் அன்பை […]

Read more

திருப்பாவை

திருப்பாவை, கவிஞர் பிரபாகர பாபு, தமிழ்க்கவி பதிப்பகம், விலைரூ.80. மார்கழி மாத விடியற்காலை நேரத்தில் பெண்களை எழுப்பி நீராடச் செல்வதாகப் பாடப் பெறும் திருப்பாவைக்கு எளிய உரை தரும் நுால். இயல்பான ஓட்டத்தில் செல்கிறது. சில சொற்களுக்குப் புதிய நோக்கில் பொருள் காண முற்பட்டுள்ளது. குறளை என்ற சொல், கோள் சொல்வதாகத்தான் மூலத்தில் உள்ளது. தீயசொல் என்று இதில் சுட்டப்பட்டுள்ளது. வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று என்பது ஆண்டாள் கால ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தும் தொடர். வெள்ளி சுக்கிரனையும், வியாழன் குருவையும் குறிக்கும். மார்கழி மாதத்தில் […]

Read more
1 2 3 4 5 6 128