பரலி சு.நெல்லையப்பா் கவிதைகள் – தொகுப்பு

பரலி சு.நெல்லையப்பா் கவிதைகள் – தொகுப்பு, எதிரொலி விசுவநாதன், மணிவாசகா் பதிப்பகம், பக்.144, விலை ரூ.75. பக்திமலா், சுதந்திர பாரதம், தேசியத் தலைவா்கள், தமிழ்நாடு, பாரதி வாழ்த்து, பெரியோா் புகழ், அஞ்சலி மலா்கள், இயற்கை இன்பம், பசுமைப்புரட்சி, சமுதாயம், அன்பு வ ழி, அறிவுரை, பல்சுவை என்ற தலைப்புகளில் மொத்தம் 110 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. தேசவிடுதலை வீரராக விளங்கிய நெல்லையப்பா் சிறந்த தமிழ் அறிஞராக, பத்திரிகை ஆசிரியராக, பதிப்பாளராக, சைவப் பெரியாராக, கவிஞராக, மிக நல்ல மனிதராக வாழ்ந்தவா். மகாகவி பாரதி, வ.உ.சிதம்பரனாருடன் […]

Read more

பச்சையம் என்பது பச்சை ரத்தம்

பச்சையம் என்பது பச்சை ரத்தம், பிருந்தா பார்த்தசாரதி, படைப்பு பதிப்பகம், விலைரூ.100. தாவரங்களை கருப்பொருளாகவும், உரிப்பொருளாகவும் கொண்டு எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். இயற்கையை எண்ணி எழுதியுள்ளார் நுாலாசிரியர். நீண்ட முன்னுரையுடன் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மண்ணைத் தோண்டி கிழங்கு எடுத்தேன்; கருணையின் வாசனை என்று ஒரு கவிதை. புலி உறுமியது; பயப்படாமல் நிமிர்ந்தே நிற்கிறது சிறு புல் போன்ற சுவாரசியமான சிறு கவிதைகள் உள்ளன. வங்காரி மாத்தாய், பூக்கோ போன்ற சூழல் பாதுகாப்பு முன்னோடிகளின் பொன்மொழியும் தொகுப்பில் உள்ளது. நன்றி: தினமலர், 4.4.21 இந்தப் […]

Read more

வெண்பா பாடும் பண்பாடு

வெண்பா பாடும் பண்பாடு, எஸ்.ஆர்.ஜி.சுந்தரம், பாற்கடல் பதிப்பகம், விலைரூ.91. பல்சுவையாக தொகுக்கப்பட்டுள்ள நுால். 52 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. சங்கக் கவிதைகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அறங்கூறும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாடல்களும், அவற்றுக்கான விளக்கங்களுமாக அமைந்து உள்ளது. நன்றி: தினமலர்,14/3/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பெண் எனும் பேரிலக்கியம்

பெண் எனும் பேரிலக்கியம், கவிஞர் துரைசாமி, நவீனா பதிப்பகம், விலை 60ரூ. பெண்மை தொடர்பாகவும், மனித வாழ்வின் உள்ளடக்கத்தைக் கொண்டவைகள் குறித்தும் எழுதப்பட்ட 33 கவிதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அனைத்துக் கவிதைகளும் படிப்பதற்கு இதமாக இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 13/6/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மகாகவி பாரதியார் கவிதைகள்

மகாகவி பாரதியார் கவிதைகள், வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.250. மகாகவி பாரதியின் பாடல், கவிதைகளை உள்ளடக்கிய முழுமையான மறு பதிப்பு நுால். எளிதாக புரியும் வண்ணம் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது. பாடல்களை சுலபமாக அடையாளம் காணும் வகையில் நிரல்படுத்தப்பட்டுள்ளது. கெட்டி அட்டையில் சிறப்பாக, ‘பைண்ட்’ செய்யப்பட்டுள்ளது. பாரதி பாடல்களில் உள்ள கம்பீரம் இந்த நுாலிலும் தெரிகிறது. தெளிவான எழுத்துக்கள், வாசிப்பைத் துாண்டுகின்றன. வீடுகளில் இருக்க வேண்டிய காலப்பெட்டகம். நன்றி: தினமலர், 2.5.21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

சிறுவருக்கான அறக்கவிதைகள்

சிறுவருக்கான அறக்கவிதைகள், செ.ஏழுமலை, பானு ஏழுமலை, விலை 125ரூ. எளிமையான பாடல்கள் மூலம் சிறுவர்களின் மனதில் நல்ல கருத்துகளை விதைக்க முடியும் என்று அடிப்படையில் இந்த நூல் ஆக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள கவிதைகளில் வாழ்வுநெறி, கல்வியின் முக்கியத்துவம், பெற்றோரின் சிறப்பு, யோகா, நடைப்பயிற்சியின் அவசியம் உள்பட பல நல்ல கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி,2/5/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கலாட்டா குடும்பம்

கலாட்டா குடும்பம், மு.அருளப்பன், விலை 90ரூ. ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என்று பன்முகம் கொண்ட இந்த நூலின் ஆசிரியர் எழுதிய முதல் கவிதை தொகுப்பு இது. கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்பு, நல்ல இல்லறம், வரதட்சணைக்கொடுமை, பாலியல் கொடுமை, கொரோனாவை விரட்டுவோம் என்பது போன்ற சமூக அக்கறை கொண்ட கவிதைகள் சிந்தனையைத் தூண்டும் வகையில் உள்ளன. காதல், ஊடல் ஆகியவற்றை சித்தரிக்கும் கவிதைகளும் மனதைக் கவருகின்றன. நன்றி: தினத்தந்தி,2/5/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

கருவறைத் தேசம்

கருவறைத் தேசம், முனைவர் இரா.சந்திரசேகரன், நண்பர்கள் தோட்டம், விலைரூ.180. கவிதை ஒரு சுரங்கம். தோண்டத் தோண்டச் சுரக்கும் நீரூற்று. வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் அமுதம். அழகிய கவிதைகளுக்கு உயிரூட்டியுள்ளார் இக்கவிஞர். பூமியைத் தாயாக்கி, அத்தாயின் கருவறையில் உயிருள்ள மனித இனம் மட்டுமன்றி, பல்வேறு உயிரினங்களும் தோன்றியதை, உயிர்கள் கூட்டம் பல உருவாய் அபயம் கொண்டன! என்று வண்ணம் சேர்க்கிறார். வாழும் இக்கருவறை – பூமித்தாய். அவள் அன்பும், கருணையும் மிக்கவள். இத்தாயின் அற்புதங்களை உணர்ந்திருப்பினும், அவை ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டும் ‘எளிய கற்பனை கலந்த கவிதை வரிகள்’ […]

Read more

இசை எனும் நீர்

இசை எனும் நீர், நினைவின் ஆழியில் அலையும் கயல்கள், ரவிசுப்பிரமணியன், போதிவனம் பதிப்பகம், விலை: ரூ.150. நல்லவற்றை அடையாளம் காணுதல் ஒரு கலை. தனக்கானதைக் கண்டடைந்து, அதைத் தன்னுணர்வாக மாற்றி பாடுபொருளின் பன்முகத்தன்மையை நம் பயணிப்புக்கு ஏதுவாக மாற்றம்கொள்ளவும் செய்திடுகிறார் கவிஞர் ரவிசுப்பிரமணியன். அன்றாடங்களில் நிகழும் சம்பவங்களில் கவிதைக்கான விதையைத் தேர்வுசெய்தல், திறம்பட மொழியில் பிணைத்தல், இசை எனும் நீரால் ஈரப்படுத்துதல் எனும் தொடர் செயல்பாடுகளால் தன் படைப்புகளுக்கு முழுமை தருகிறார் ரவிசுப்பிரமணியன். இயல்பில் அவர் பாடகராக இருப்பது அவரின் கவிதைகளுக்குக் கூடுதல் பலமாக […]

Read more

அந்த விளக்கின் ஒளி பரவாதது

அந்த விளக்கின் ஒளி பரவாதது,  அகச்சேரன், புது எழுத்து, விலை: ரூ.50. குறைவாகவே எழுதினாலும் அதில் ஒரு திருப்தி காண்பவர் அகச்சேரன். அவருடைய ‘அன்பின் நடுநரம்பு’ கவிதைத் தொகுப்பு வெளியாகி 7 ஆண்டுகள் கழித்து இந்த நூல் வெளியாகியிருக்கிறது. மொத்தம் 29 கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. ‘சிறியதே அழகு’ என்பதற்கொப்ப தொகுப்பும் சிறியது, கவிதைகளும் சிறியவை. காலத்துக்கேற்ப கவிதைகளில் பல்வேறு போக்குகள் ஏற்பட்டாலும் சில விஷயங்கள் மட்டும் கவிதைகளுக்கு என்றும் மாறாதவை. அவற்றுள் இருத்தலின் பதைபதைப்பும் ஒன்று. நவீன மனிதனுக்கு ஒவ்வொரு பொழுதின் […]

Read more
1 2 3 4 5 6 57