சூழலும் சாதியும்

சூழலும் சாதியும், நக்கீரன், காடோடி பதிப்பகம், விலை: ரூ.80. சூழலியல் சார்ந்த அக்கறைகளை நாவல் வடிவிலும் அபுனைவாகவும் தொடர்ந்து வெளிப்படுத்திவரும் நக்கீரனின் புதிய புத்தகம் ‘சூழலும் சாதியும்’. சூழலைச் சாதி எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது. சாதி அவ்வளவு எளிதாக வேரறுத்துவிட முடியாத அளவுக்குப் பலம் கொண்ட ஆற்றலாக இருக்கக் காரணம், அது நம் வாழ்க்கையின் சகல கூறுகளோடும் சிக்கலான பிணைப்பைக் கொண்டிருப்பதுதான். இந்தச் சிக்கலான பிணைப்பைப் புரிந்துகொள்வதற்கு அதன் ஒவ்வொரு கூறுகளின் மீதும் தனித்தனியாகக் கவனம் குவிக்கும் முயற்சிகள் தொடர்ந்து […]

Read more

எங்கெங்கும் மாசுகளாய்…

எங்கெங்கும் மாசுகளாய்…, மண் முதல் விண் வரை (சூழலியல் கட்டுரைகள்), ப.திருமலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 118, விலை ரூ.110. சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு இதழ்களில் நூலாசிரியர் எழுதிய 17 கட்டுரைகளின் தொகுப்பு. இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது; ஆனால், மனிதர்கள் இதனை மறந்து இயற்கைக்கு எதிரான செயல்களில் கட்டுப்பாடின்றி ஈடுபடுவதால் கடுமையான இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என அழுத்தமாக உரைக்கிறது நூல். புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பாரீஸ் பருவநிலை மாநாட்டின் தீர்மானங்களை எத்தனை […]

Read more

எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும்

எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும், முனைவர் ஆ.புஷ்பா சாந்தி, பக்.279, விலை ரூ.280. சங்க இலக்கியங்களை அணுகப் பண்பாட்டுச் சூழலியல் பெரிதும் துணை புரிகிறது. தற்போது பல துறைகளிலும் சூழலியல் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. காரணம், சங்க காலமும் சரி, பண்டைத் தமிழ்ச் சமூகமும் சரி இயற்கையோடு இயைந்த வாழ்வையே கொண்டிருந்தது என்பதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அப்படி இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் மட்டுமே மனிதகுலம் செழிக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள் சூழலியல் கோட்பாட்டாளர்கள். தற்போது உலகம் பல பேரிடர்களைச் சந்தித்து வருகிறது. பேரிடர்களை […]

Read more

தண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்

தண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும், ஆர்.நல்லகண்ணு, பத்மா பதிப்பகம், பக். 200, விலை 190ரூ. தமிழகம் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு உள்ளாகும் என்பதை முன்னதாகவே அறிந்து, நீர் நிலைகளை வளமாக்கும் திட்டங்களை கட்டுரை வடிவில் கொண்டு சென்ற மூத்த அரசியலாளர் இவர். உழவர்களின் தோழர் என்ற போற்றுதலுக்கு உரியவர். தமிழகத்தின் வறட்சியைப் போக்கும் வழி, கங்கை – காவிரி இணைப்பு, சேது கங்கா இணைப்பு, நெஞ்சம் குளிரும் நீர் வழிகள் உள்ளிட்டவை, நீர்வள மேலாண்மையின் முக்கியத்துவத்தை விதைப்பதாக உள்ளன. காவிரி உரிமையைக் காப்போம், தாமிரபரணியின் […]

Read more

குரங்கு கை பூமாலை

குரங்கு கை பூமாலை, ஈரோடு அறிவுக்கன்பன், காவ்யா, பக்.264, விலை ரூ.270. சுற்றுச்சூழல் கேடு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து உலகம் முழுவதும் பேசப்படுகிறது. சுற்றுச்சூழல் கேடுகளுக்கான காரணங்களும், தீர்வுகளும் பலவிதமாகக் கூறப்படுகின்றன. இந்த நூல் சுற்றுச்சூழல் கெட்டுப் போனதிற்கான உண்மையான காரணங்களைச் சொல்கிறது. அதற்கு பல்வேறு சான்றுகளையும் எடுத்துக்காட்டுகிறது. சர்க்கரை தொழிற்சாலை, சாராய தொழிற்சாலை, பெட்ரோலியம் தொழிற்சாலை, தோல் பக்குவப்படுத்தும் தொழிற்சாலை, காகிதத் தொழிற்சாலை,துணிகளை உருவாக்கும் தொழிற்சாலை, வேதியல் பொருட்களை உருவாக்கும் தொழிற்சாலை, பால் மற்றும் அதன் துணைப்பொருள் தொழிற்சாலை ஆகியவை வெளியேற்றும் கழிவுகள், […]

Read more

சிவப்புக் கிளி

சிவப்புக் கிளி, வசுதேந்திரா,  தமிழில் யூமா வாசுகி, பாரதி புத்தகாலயம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நம் அனைவரது வாழ்வையும் நேரடியாகத் தீண்டத் தொடங்கிவிட்ட நிலையிலும், அவற்றைக் குறித்த அடிப்படை உணர்வு அற்றவர்களாகவே பெரும்பாலோர் இருக்கிறோம். இயற்கையையும் நம் வாழ்க்கையையும் எப்படிப்பட்ட அவலமான வகையில் பறிகொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அழுத்திச் சொல்லும் கதைகளில் ஒன்று ‘சிவப்புக் கிளி’. நன்றி: தமிழ் இந்து, 5/1/119. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

நாங்கள் நடந்து அறிந்த காடு

நாங்கள் நடந்து அறிந்த காடு, தமிழில் வ.கீதா, தாரா வெளியீடு, விலை 250ரூ. மரபு அறிவு பெரும்பாலான நவீனத்துவவாதிகளால் துச்சமாகக் கருதப்படுகிறது. ஆனால், மரபு அறிவு எனும் பொக்கிஷம் எப்படிப்பட்டது. அது எவ்வளவு முக்கியமானது என்பதை ஆனைமலைக் காட்டுப் பகுதிகளில் வாழும் காடர் பழங்குடியினரின் சிலரது வார்த்தைகள் வழியாகக் கதைபோலக் கோத்துத் தந்துள்ளனர் மாதுரி ரமேஷும் மனிஷ் சாண்டியும். இதை எழுத்தாளர் வ.கீதா சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். நன்றி: தமிழ் இந்து, 5/1/119. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

1000 கடல் மைல்

1000 கடல் மைல், வறீதையா கான்ஸ்தந்தீன், கடல்வெளி – தடாகம், விலை 250ரூ. மீனவர்களை ஏதோ மீன்பிடித் தொழில் செய்பவர்கள் என்ற ரீதியிலேயே புரிந்துகொள்கிறது பொதுப்புத்தி. ஆனால், காட்டைச் சார்ந்து வாழும் பழங்குடிகளைப் போல் கடலைச் சார்ந்து வாழும் பழங்குடிகளாக உள்ள மீனவர்களை அரசுகள் எப்படிப்பட்ட நெருக்கடிகளுக்குத் தள்ளுகின்றன என்பதை விரிவாகப் பேசுகிறது இந்தப் புத்தகம். நன்றி: தமிழ் இந்து, 5/1/119. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027320.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

கையிலிருக்கும் பூமி

கையிலிருக்கும் பூமி, சு. தியடோர் பாஸ்கரன், உயிர்மை வெளியீடு, விலை 600ரூ. மூத்த சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் தமிழில் சூழலியல் எழுத்துக்குத் தனி அடையாளம் பெற்றுத் தந்தவர். தமிழில் அவர் எழுதிய 100 கட்டுரைகள் அடங்கிய இந்த முழுத் தொகுப்பு, முதன்மையான சூழலியல் ஆவணமாக வெளியாகியுள்ளது நன்றி: தமிழ் இந்து, 5/1/119. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027340.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கடலம்மா பேசுறங் கண்ணு!

கடலம்மா பேசுறங் கண்ணு!, வறீதையா கான்ஸ்தந்தின்,இந்து தமிழ், கடல், மீன்கள், துறைவர்கள், அவர்களது சமூகம்-பண்பாடு-சூழலியல் குறித்து மிகப் பெரிய திறப்பைத் தந்த இதே தலைப்பிலான தொடர், ‘இந்து தமிழ்’ நாளிதழில் ஓராண்டுக்கும் மேலாக வெளியானது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் புத்தகமாகவும் வெளியாகியுள்ளது நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 0444959581

Read more
1 2 3