திருவருட்பா பதிப்புச் சோலை

திருவருட்பா பதிப்புச் சோலை, இராம.பாண்டுரங்கன், ஐந்திணை வெளியீட்டகம், பக்.224, விலை ரூ.200. காலந்தோறும் ஆவணப்படுத்துதல் என்பது இன்றியமையாத ஒன்று. வரலாறுகளை ஆவணப்படுத்துதலின் மூலமாகவே பல்வேறு வரலாறுகளை அறிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் தமிழ் வரலாறுகளின், தமிழ் ஆய்வுகளை ஆவணப்படுத்தலின் தேவையை இந்நூல் வலியுறுத்துகிறது. 1867 முதல் 1972 வரை வெளியான திருவருட்பா பதிப்புகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. வள்ளலாரின் "திருவருட்பா' தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய செல்வம். தாயுமானவர், பாரதியார், வானமாமலை, ம.பொ.சி. முதலியோர் பார்வையில் வள்ளலார் குறித்த விரிவான விளக்கம் சிறப்பு. தமிழ் நூல் […]

Read more

வள்ளலார் மூட்டிய புரட்சி

வள்ளலார் மூட்டிய புரட்சி, பழ.நெடுமாறன், ஐந்திணை வெளியீட்டகம், பக். 160, விலை ரூ.150. திருவருட்பிரகாச வள்ளலாரை ஓர் ஆன்மிகவாதியாக மிகப் பெரிய ஞானியாக மட்டுமே அறிந்து வைத்துள்ளவர்களுக்கு அவரை மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக, மனித நேயப் பண்பாளராக, மொழிப்பற்றாளராக இன்னும் பல்வேறு கோணங்களில் அவரது அருமை பெருமைகளை இந்நூலின் வாயிலாக எடுத்தியம்பி இருக்கிறார் பழ.நெடுமாறன். 19-ஆம் நூற்றாண்டின் தனிப்பெரும் சிந்தனையாளராக வள்ளலார் சிறப்பிடம் பெற்றுள்ளார். வள்ளலார் பெருமான் உலகிற்கு வழங்கிய அழியா முழு முதற்கோட்பாடு ஒன்றே ஒன்றுதான். அதுவே சீவகாருண்யம் என்னும் உயிரிரக்கப் பண்பு. […]

Read more

தாதுமணல் கொள்ளை

தாதுமணல் கொள்ளை, முகிலன், ஐந்திணை வெளியீட்டகம், விழுப்புரம், விலை 160ரூ. இயற்கையின் கொடையை சுயநலச்சக்திகள் சூறையாடவதை அம்பலப்படுத்தும் ஆவணம் இது. தமிழகத்தின் தென்பகுதியான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலோரப் பகுதியில் இருக்கும் தாதுவளம், கடந்த 20 ஆண்டுகளாக கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. பேருக்கு அரசின் அனுமதியை வாங்கிகொண்டு பெருமளவு அள்ளி கணக்கில்லாத கோடிகளைக் கொண்டுபோய்விடுகிறார்கள். இவை அரசின் சொத்து, அதாவது நாட்டின் சொத்து. இன்னும் சொல்லப்போனால் மக்கள் சொத்து. ஆனால் இதனைத் தட்டிக் கேட்கும் மக்களை தீவிரவாதிகள் என்று பட்டம் சூட்டி காக்கிச் சட்டைகள் […]

Read more

இடிந்தகரை-சிறைபடாத போராட்டம்

இடிந்தகரை-சிறைபடாத போராட்டம், சுந்தரி, ஐந்திணை வெளியீட்டகம், 4ஏ, 29, முகமதியர் தெரு, மந்தக்கரை, விழுப்புரம் 2, பக். 200, விலை 160ரூ. இடிந்தகரையில் நடைபெற்று வரும் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக் களத்தில் பங்கேற்று, 98 நாள்கள் திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் நூலாசிரியர் சுந்தரி. அவர் மீது 12 வழக்குகள். 8ஆம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் சுந்தரிக்கு இப்போது அணுஉலை குறித்து சர்வதேச அளவிலான அறிவும் வளர்ந்திருக்கிறது. சிறையிலிருந்து பிணையில் விடுக்கப்பட்ட பிறகு, மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த 50 […]

Read more