தெய்வத்தின் குரலமுதம்

தெய்வத்தின் குரலமுதம், ஆர். பொன்னம்மாள், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 150ரூ. கண்கண்ட தெய்வமாக இருந்து ஏராளமான ஆன்மிக சாதனைகளைச் செய்தவர் என்று காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரசுவதி சுவாமிகளை பக்தர்கள் போற்றிப் பாராட்டுவது மிகச் சரியான கருத்து என்பதை, இந்த நூலைப் படிக்கும் போது உணரமுடியும். பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பிரிச்சினைகள் பற்றி காஞ்சிப் பெரியவர் வழங்கிய அமுத மொழிகளை அவரது சரளமான பேச்சு நடையிலேயே தொகுத்துத் தந்து இருப்பதால், அவரே நம் முன் அமர்ந்து உரையாற்றுவது போன்ற அனுபவம் ஏற்படுகிறது. மோர் […]

Read more

புண்ணியம் சேர்க்கும் புனித யாத்திரை

புண்ணியம் சேர்க்கும் புனித யாத்திரை, பத்மாவதி குமரன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, பக். 168, விலை 250ரூ. பக்தி இலக்கியங்கள் என்பது வேறு; ஆனால், புனிதத் தலங்களைத் தேடிச் சென்று வாழ்வின் பயனைத் துய்க்கும் பலரில், நுாலாசிரியர் பத்மாவதி குமரனும் ஒருவர். மிகப்பெரும் பாரம்பரியத்தைச் சேர்ந்த இவர் குழந்தையாக இருக்கும் போது, ரமணர் கையில் தவழ்ந்த அரிய பேறு பெற்றவர். இந்தியாவில் உள்ள மிகப் புகழ் மிக்க கோவில்கள் மட்டுமின்றி, மலேஷியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் உள்ள கோவில்களின் சிறப்பை வண்ணப் படங்களுடன், வழு […]

Read more

பேசும் வரலாறு

பேசும் வரலாறு, அ.கே.இதயசந்திரன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 150ரூ. முக்தா சீனிவாசனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இந்நூலாசிரியர், பின்னர் இயக்குநராக வளர்ந்து, இன்று தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர் சங்கத்தின் இணைச்செயலாளராக உள்ளார். இவர் வரலாற்றுச் சிறப்புமிக்க இராஜாஜ சோழனின் வரலாற்றுச் சாதனைகளை இந்நூலில் பதிப்பித்துள்ளார். இந்நூல் நாவல் இல்லை. ஆனால் நாவலைப் படிப்பது போல ஆவலைத் தூண்டும் நூல். சரித்திர காலத்தில் தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்தான் சிறப்பு மிக்க மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள். காரணம் இவர்களிடம் ஆட்சித்திறமை மட்டுமின்றி, […]

Read more

ஸ்ரீமத் பகவத் கீதை

ஸ்ரீமத் பகவத் கீதை, சைலேந்திர சர்மா, கிரி டிரேடிங் ஏஜென்ஸி, பக். 304, விலை 150ரூ. இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையில் உள்ள பண்டைய யோக பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால், கிருஷ்ணரை நேரில் காணும் பாக்கியம் கிடைக்கும் என்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 2/7/2017.   —-   ஆங்கில மருத்துவம், சா. அனந்தகுமார், நிவேதிதா பதிப்பகம்,  பக். 96, விலை 80ரூ. உடல் மருத்துவம், நோய்கள், மருந்து முறைகள், மருத்துவக் கண்டுபிடிப்புகள், முதல்மருத்துவத் தகவல்கள், மருத்துவ நோபல் பரிசு உள்ளிட்டவை அடங்கிய […]

Read more

பூர்வா

பூர்வா (பன்னிரு ஆழ்வார்களின் கதை), லக்ஷ்மி தேவ்நாத், தமிழில் பத்மா நாராயணன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 295ரூ. பூர்வாவுக்கு கிடைத்த ஸ்வாமித் தாத்தா! தாத்தா பாட்டிகள் கதை சொன்ன காலத்து அனுபவங்களை அழகாக மீட்டெடுத்துத் தருகிறார் லக்ஷ்மி தேவ்நாத். ஆங்கிலத்தில் வெளியான ‘பூர்வா’ நூலை வெகு நளினமாகத் தமிழாக்கியிருக்கிறார் பத்மா நாராயணன். ‘பூர்வாவை மீண்டும் ஒருமுறை அவர் புதிதாக உருவாக்கியிருக்கிறார்’ என்று மொழிபெயர்ப்பாளரை மூல ஆசிரியரே வியப்பது அழகு. எல்லோருக்கும் நன்கு தெரிந்த பன்னிரு ஆழ்வார்களின் திவ்ய சரிதம்தான். எறும்புகள் சாரிசாரியாக ஊர்ந்து […]

Read more

108 தென்னக சிவஸ்தலங்கள்

108 தென்னக சிவஸ்தலங்கள், பொன்னம்மாள், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 250ரூ. எந்நாட்டவருக்கும் இறைவனாகி, தென்னகத்தை தன்னகத்தாய் கெண்டு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அனைத்தினையும் தனதாக்கிக் கொண்ட சிவபெருமானுக்கும் நம் முன்னோர்களால் எண்ணற்ற சிவாலயங்கள் எழுப்பப்பட்டன. அவைகளில் பிரதானமான 108 சிவாலயங்களைப் பற்றிய முழு விவரங்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான கோவில்களோடு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலுள்ள புகழ்பெற்ற கோவில்களும், பின் இணைப்பாக காசி, கேதாரேஸ்வர கோவில்களும் ஸ்தல புராணம், ஆலய அமைப்பு, அமைவிடத்தோடு அரிய […]

Read more