இந்த நாள் வெற்றித் திருநாள் – பாகம் 1

இந்த நாள் வெற்றித் திருநாள் – பாகம் 1, சிந்தனைக் கவிஞர் கவிதாசன், குமரன் பதிப்பகம், விலைரூ.100 வெற்றி பெறத் துடிக்கும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை, உற்சாகம் தரும் நுால். ஒருவரிடம் உள்ள குறைகளைச் சொல்லக் கூடாது; மாறாக நிறைகளைச் சொல்ல வேண்டும். நிறைகளைச் சொல்லி குறைகளைத் திருத்த முயல வேண்டும். முன்னேற்றத்திற்கு மூன்று வழிகள், ஆறுவது சினம், சொற்களின் அற்புதம், விழிப்புணர்வே வெற்றி, மகிழ்ச்சியின் ரகசியம், முயற்சியே மூலதனம், அச்சத்தை விரட்டுங்கள், இலட்சியம் வெல்லட்டும் போன்ற தலைப்புகள் வசப்படுத்தும். பார்த்தது, படித்தது, கேட்டது மற்றும் […]

Read more

மேடையில் பேசலாம்

மேடையில் பேசலாம், நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், பக். 80, விலை 60ரூ. மேடைப் பேச்சு கலை பற்றி விரிவாக வழிகாட்டும் நூல். முறையாக பேசி பழகினால் மிளிர்வதற்கு பல உத்திகளை சொல்கிறது. பயிற்சி செய்வதற்கு ஏற்ற வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. மாணவ மாணவியருக்கு உதவும். நன்றி: தினமலர், 10/5/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030597_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நரேந்திர மோடி என்னும் நான்

நரேந்திர மோடி என்னும் நான்…, மானோஸ், குமரன் பதிப்பகம், விலைரூ.400 பிரதமர் மோடி, இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றிப் பெற்று, பிரதமர் ஆனதை முன்னிட்டு, அவரது சாதனை பயணத்தை விரிவாக எழுதியுள்ளார். மோடியின் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், அவரது அடுத்தடுத்த திட்டங்கள், வெளிநாட்டு பயணங்களின் நோக்கம், ஊழலுக்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான அவரது திட்டங்கள் போன்றவற்றை விரிவாக, 125 அத்தியாயங்களில் எழுதியுள்ளார். – என்.எஸ்., நன்றி: தினமலர், 23/8/20. இந்தப் புத்தகத்தை […]

Read more

உன்னுள் யுத்தம் செய்

உன்னுள் யுத்தம் செய்,  இரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்., குமரன் பதிப்பகம், விலை ரூ.180. ‘உன்னுள் யுத்தம் செய்’ என்னும் நுாலின் மூலம் அறிமுகமான இரா.திருநாவுக்கரசு, ‘தன்னிலை உயர்த்து’ என்னும் தலைப்பில், இளைஞர் மணி மற்றும் ‘தினமலர், தினத்தந்தி’ நாளிதழ்களில் எழுதி வருகிறார். மனதை ஒருமுகப்படுத்தினால் எதுவும் சாத்தியமாகும் என்ற கருத்தை முத்து பேராசிரியர், யஸ்வந்த், கணேசன் போன்ற கதாபாத்திரங்கள் மூலம் தந்திருக்கிறார். அனுமன் போன்ற இதிகாசப் பாத்திரங்கள் மூலமும் கருத்துக்களை வெளிப்படுத்துகிறது இந்நுால். காலையில் கண் விழித்ததும், நேர்மறை எண்ணங்களை மாணவர்களுக்குத் தேவையான விதத்தில் பதிய […]

Read more

குறள் விருந்து கதை விருந்து

குறள் விருந்து கதை விருந்து, இரா.திருநாவுக்கரசு, குமரன் பதிப்பகம், பக்.232, விலை ரூ.200. திருக்குறளுக்கு நிறைய உரைகள் வெளிவந்திருக்கின்றன. திருக்குறளைப் படிக்கும் அனைவரின் மனதிலும் அது பதிந்துவிடும் என்று சொல்ல முடியாது. மருந்தின் கசப்பை நாக்கு ஏற்றுக் கொள்ள தேனைக் கலப்பது போல், நல்ல கருத்துகளை விதைக்க தேனான கதைகள் அவசியம் என நினைத்த நூலாசிரியர், திருக்குறளை ஒரு கதையுரையில் தந்தால் அது சிறக்கும் என்பதால், ஒரு குறளுக்கு ஒரு கதையை எழுதி விளக்கியிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட 108 திருக்குறள்களுக்கு 108 கதைகளை எழுதித் தொகுத்துத் தந்திருக்கிறார். […]

Read more

உலக உத்தமர் கலாம்

உலக உத்தமர் கலாம்,  தொகுப்பாசிரியர்: கவிதாசன், குமரன் பதிப்பகம், பக்.224, விலை ரூ.150. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுடன் பழகியவர்கள் அவருடனான தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்விதமாக எழுதப்பட்ட 18 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். முன்னாள் சி.பி.ஐ.இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன், காவல்துறை கூடுதல் இயக்குநர் செ.சைலேந்திரபாபு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம், நெல்லை சு.முத்து உள்பட 18 ஆளுமைகள் எழுதிய கட்டுரைகளிலிருந்து அப்துல்கலாம் என்ற மனிதரின் உயர்ந்த பண்பு, பழகும் விதம், பிறரின் துன்ப, துயரங்களில் பங்கெடுக்கும் தன்மை, வித்தியாசமான அவருடைய சிந்தனைகள் என […]

Read more

ஒளி உன்னால் அறியப்படுகிறது

ஒளி உன்னால் அறியப்படுகிறது, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், விலை ரூ:80 முத்தத்தின் துயர மொழி, திரையிசைப் பாடல்களில் தனித்துவத்தோடு மிளிர்ந்த கவிஞர் பழநிபாரதி தனது ‘ஒளி உன்னால் அறியப்படுகிறது’ கவிதைத் தொகுப்பில் சுண்டக் காய்ச்சிய வார்த்தைகளால் எழுதியிருக்கிறார். பெரும்பாலான கவிதைகள் வாசகரின் மனசுக்குள் காட்சி கிளைகளாக விரிகின்றன. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் எதிலும் அலங்கார வார்த்தைகள் இல்லை. ‘வீட்டின் வரவேற்பறையில்/ ஒரு பியானோ இருக்கிறது/ அதன் முன்னிருக்கையில் யாருமில்லை /நடுங்காத தீபத்தைப் போல /நின்றொளிரும் இசையில்/ நிரம்பி வழிகிறது/ வீடு’ எனும்போது நமக்குள்ளிருக்கும் இசை நம் வீட்டை […]

Read more

உன்னுள் யுத்தம் செய்

உன்னுள் யுத்தம் செய், இரா.திருநாவுக்கரசு, குமரன் பதிப்பகம், விலை 180ரூ. ஐ.பி.எஸ். அதிகாரியான இரா.திருநாவுக்கரசு, சுய முன்னேற்றத்திற்குத் தேவையான கருத்துகளைக் கொண்ட 31 கட்டுரைகளை இந்த நூலில் தந்து இருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையையும் இரண்டு கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வது போல அமைத்து இருப்பதால் அவை, சுவையான சிறுகதைகளைப் படிப்பது போன்ற உணர்வைத் தருகின்றன. மாணவர்கள் பரீட்சையை எதிர்கொள்வது எப்படி? வாழ்க்கையை எவ்வாறு சந்திப்பது? போன்ற பல வினாக்களுக்கு இந்த நூலில் விடைகள் தரப்பட்டுள்ளன. எளிமையான வாசகங்கள், யதார்த்தமான உரையாடல்களைக் கொண்டு இருப்பதால், இந்தக் கட்டுரைகளை எளிதாக […]

Read more

உன்னுள் யுத்தம் செய்

உன்னுள் யுத்தம் செய்,  இரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்., குமரன் பதிப்பகம், பக்.224, விலை ரூ.180. போராட்டம்தான் வாழ்க்கை. போராட்டம் என்பது நம்மோடு – ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தீமையை எதிர்க்கும் போராட்டம். நல்லதை உயர்த்தும் போராட்டம். போராட்டத்தின் உச்சநிலை யுத்தம். நமக்குள்ளே உள்ள நேர்மறை எண்ணங்களை, செயல்பாடுகளை உயர்த்தி, எதிர்மறை எண்ணங்களை, செயல்பாடுகளை நம்மிடம் இருந்து அழித்தால் வாழ்வில் வெற்றி உறுதி. இதுதான் நமக்குள் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் யுத்தம் என்று இந்நூலின் அடிப்படையை முன்னுரையிலேயே சொல்லி விடுகிறார் நூலாசிரியர். ஒருவர் தமக்குள் இருக்கும் தீமையை எதிர்க்கும் […]

Read more

குறள் இனிது கதை இனிது

குறள் இனிது கதை இனிது, இரா.திருநாவுக்கரசு, குமரன் பதிப்பகம், விலை 200ரூ. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பாலில் இருந்து 108 குறள்களைத் தேர்ந்தெடுத்த அவற்றின் பொருளை விளக்கும் வண்ணம் ஒரு பக்க கதைகளாக எழுதி இருக்கிறார் காவல்துறை அதிகாரியான ஆசிரியர். புராண இதிகாசம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டு வரையிலான பல நிகழ்வுகளைப் படம்பிடித்து அவற்றை திருக்குறளுடன் ஒப்பிட்டு கதைகளை பின்னி இருப்பது படிக்க சுவாரசியமாகவும், பயன் அளிக்கும் வகையிலும் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 27/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more
1 2 3 9