ஒளி உன்னால் அறியப்படுகிறது

ஒளி உன்னால் அறியப்படுகிறது, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், பக். 104, விலை 80ரூ. இலக்கண நடையில் எழுதி, இக்கால இலக்கியத்திற்கு சிறப்பு சேர்க்கும், பழநிபாரதியின் கவிதைகள் எண்ணற்றவை. ‘இந்த வைகறை உன்னிடமிருந்து துயிலெழுகிறது; ஒளி உன்னால் அறியப்படுகிறது; முதல் மலர்களின் நறுமணத்தை நுகர்ந்தபடி விடைபெற்ற நட்சத்திரங்களில் ஒன்று கடைசியாக உன்னைத் திரும்பிப் பார்க்கிறது!’ என்ற கவிதை வரிகள், நம்மை நெகிழ வைப்பதாக உள்ளன. இந்நுால், இன்றைய இளைய தலைமுறையினருக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. – மாசிலா இராஜகுரு நன்றி: தினமலர்,17/3/19, இந்தப் […]

Read more

குறள் இனிது! கதை இனிது!

குறள் இனிது! கதை இனிது!. இரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்., குமரன் பதிப்பகம், விலை 200ரூ. தேர்ந்தெடுத்த நூற்றியெட்டு குறட்பாக்களுக்கு பொருத்தமான குட்டிக் குட்டி நன்னெறிக் கதைகள். ராமாயணம், மகாபாரதம் வரலாற்று நிகழ்வுகள் என்று பலவற்றோடும் தொடர்புடைய கதைகளைச் சொல்லியிருப்பது திருக்குறளை ஒரு புதிய கோணத்தில் அழகுபடுத்தியிருப்பதோடு, படிப்போரின் ஆர்வத்தையும் தூண்டுகிறது. குட்டீஸை நிச்சயம் ஈர்க்கும். நன்றி: குமுதம், 13/3/2019.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு, நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், விலை 100ரூ. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் தென் பகுதியில் வாழ்ந்த மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, சாதிக்கொடுமை தலைவிரித்து ஆடியபோது, சமுதாய சீர்திருத்த எண்ணங்களை மக்களிடம் விதைத்து மறுமலர்ச்சி உண்டாக்கிய பகவான் வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு மனதைத் தொடும் வகையில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கிறது. புத்தகத்தில் ஆங்காங்கே பகவான் வைகுண்டரின் அகிலத்திரட்டில் இருந்து சிந்தனையைத் தூண்டும் வாசகங்களைக் கொடுத்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 5/2/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027989.html […]

Read more

பாரதி முதல் கவிதாசன் வரை

பாரதி முதல் கவிதாசன் வரை, பூ.மு.அன்புசிவா, குமரன் பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. பாரதி முதல் கவிதாசன் வரை எனும் இந்நுால் தொடர்ச்சியான வரலாறாக இன்றி, காலப்போக்கில் அவ்வப்போது எழுதிய திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. இந்நுாலின் முதல் கட்டுரை பாரதியைப் பற்றியது. அடுத்தடுத்த மூன்று கட்டுரை, சங்க இலக்கியம் பற்றியது. பின், கம்பன், திருவள்ளுவர் என அமைந்து, இக்காலத்தில் சக்திஜோதி, பா.விஜய், கனிமொழி, நா.முத்துக்குமார், அகிலா, கவிதாசன் ஆகிய படைப்பாளிகளின் கவிதைகளையும் திறனாய்வு செய்துள்ளது இந்நுால். பாரதியின் சமுதாய உணர்வையும், உலகளாவிய […]

Read more

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு, டாக்டர் வசந்த் செந்தில், குமரன் பதிப்பகம், பக். 128, விலை 50ரூ. குழந்தையின் தேவை என்ன? எந்தெந்த வயதில் தடுப்பூசிகள், ஆண் – பெண் குழந்தையின் வயதுக்கேற்ப எடை மற்றும் உயரம், எடைக்குத் தேவையான கலோரி, தாய்ப்பால் கொடுப்பதால் அம்மாக்களுக்கு என்ன பயன்? திட உணவுகளை அறிமுகப்படுத்தும் முறை, குழந்தை வளர்ப்பில் பல்வேறு வழிமுறைகளை படங்களுடன் விவரிக்கிறார், டாக்டர் வஸந்த் செந்தில். இந்நுால், கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனளிக்கும் அரிய பொக்கிஷம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 26/8/2018. இந்தப் புத்தகத்தை […]

Read more

சந்தித்தேன் சிந்தித்தேன்

சந்தித்தேன் சிந்தித்தேன், சிந்தனைக் கவிஞர் கவிதாசன், குமரன் பதிப்பகம், விலை 80ரூ. வாழ்க்கை தெரு எங்கும் நிறைந்து உள்ள வளர்ச்சிக்கான பாடங்களை கவனித்து கற்று கொள்பவர்கள் மட்டுமே முன்னேற்ற பாதையில் செல்கின்றனர். மற்றவர்கள் பின்னடைவுகளை சந்திக்கன்றனர். அவ்வாறு உண்டாகும் பயண அனுபவங்களில் எதை கற்றுக்கொள்ள வேண்டும், எதை புறந்தள்ள வேண்டும் என்ற தன்னுடைய அனுபவங்களை இணைத்து தொகுத்து நூலாக்கி உள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 25/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027096.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

நகரத்தார் மரபு காக்கும் மங்கையர்கள்

நகரத்தார் மரபு காக்கும் மங்கையர்கள், எம்.வள்ளிக்கண்ணு, குமரன் பதிப்பகம், விலை 100ரூ. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு – நகரத்தார் கோவில் – ஆண்களின் பெருமை – பெண்களின் சிறப்பு – நகரத்தார் வீட்டின் அமைப்பு – நகரத்தார் உறவு முறைகள் – நகரத்தார் திருமண முறைகள் – மருந்து அல்லது தீர்த்தம் குடித்தல் – நகரத்தார் பெயர் சூட்டும் முறைகள் – நகரத்தார் உணவு முறைகள் போன்ற தலைப்புகளில் நகரத்தார் பெண்களின் சிறப்பைப் பேசுகிறார் ஆசிரியை. நகரத்தார் மரபைச் சேர்ந்த பெண்கள், சம்பிரதாய முறைகளை […]

Read more

பெரியார்

பெரியார், அழகிய பாண்டியன், குமரன் பதிப்பகம், பக். 176, விலை 60ரூ. தமிழகத்தின் விடிவெள்ளி, ஈ.வெ.ரா., தமிழுணர்ச்சியையும், தமிழனின் உணர்ச்சிகளையும் தட்டி எழுப்பிய மாமேதை. சமூகப் புரட்சி சிந்தனைகளின் பிறப்பிடமாக இருந்தது மட்டுமின்றி, மக்களின் இதயங்களில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருப்பவர். அரசியல் கடலில் முதல்வர் பதவிக்காக மூழ்கிப் போனவர்களுக்கு மத்தியில், தம்மை நாடி வந்த முதல்வர் பதவியை மறுத்த திராவிட இயக்கங்களின் பிதாமகன், பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது இந்நுால். நன்றி: தினமலர், 11/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000011851.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

திருக்குறளில் தன்னம்பிக்கை

திருக்குறளில் தன்னம்பிக்கை, ஜெ.கமலநாதன், குமரன் பதிப்பகம், பக்.104, விலை 40ரூ. திருக்குறளில் கூறப்பட்டுள்ள மேலாண்மை அறிவியல் கருத்துக்களை முன்னிறுத்துகிறது. உலகின் மிகச் சிறந்த ஆங்கில தன்னம்பிக்கை நுால்களில் கூறப்பட்டுள்ள ஆளுமைப் பண்புகள் பல உள்ளன. அவை யாவும், ஏற்கனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளில் வலியுறுத்தப்பட்டுள்ள பெரும் விந்தையையும், பெருமையையும் நுாலாசிரியர் தக்க சான்றுகளோடு பதிவு செய்து, சிறப்பு சேர்க்கிறார். இந்நுால், இலக்கிய அன்பர்கள் அனைவர் கைகளிலும் தவழும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 7/1/2018.

Read more

மகாபாரதக் கதைகள்

மகாபாரதக் கதைகள், எஸ்.தமயந்தி, குமரன் பதிப்பகம், பக்.112, விலை 40ரூ. உலகில் பல குணங்களை கொண்ட மனிதர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும், ஒரு காவியத்தில் காண முடியும் என்றால், அது மகாபாரதம் தான். மகாபாரதத்தை ஒரு கதை களஞ்சியம் என்றே கூற வேண்டும்; கதைக்குள் கதை என பல்லாயிரம் கதைகள் உள்ளன. கடல் போன்ற மகாபாரதத்தை, ஏழு கதைகள் மூலம், ஆசிரியர் மிகச் சுருக்கமாக தந்துள்ளார். இதை படித்தால், மகாபாரதத்தை படித்த திருப்தி ஏற்படுகிறது. குழந்தைகளிடம் இந்த புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னால், அவர்கள் […]

Read more
1 2 3 4 9