100 ஆண்டுகளாக பொதுச்சார்பில்

100 ஆண்டுகளாக பொதுச்சார்பில்,பேராசிரியர் க.மணி, அபயம் பதிப்பகம், விலை 100ரூ. ஐன்ஸ்டைன் பொதுச்சார்பியல் கோட்பாட்டினை வெளியிட்டு நூறு ஆண்டுகள் முடித்துவிட்ட நிலையில், நோபல் பரிசுபெறும் அளவுக்கு அவர் சாதித்தது என்ன? அவரது கண்டுபிடிப்புகளால் மக்களுக்கு என்ன லாபம்? அவரது மூளையில் இருந்த சிறப்பு அம்சம் என்ன? ஐன்ஸ்டைன் பற்றி வித்தியாசமான கோணத்தில் விளக்கமாகச் சொல்லும் நூல். நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், நல்லாசிரியர் சு.குப்புசாமி, குமரன் பதிப்பகம், விலை 70ரூ. ஆங்கிலேயர்க்கு அஞ்சி இந்திய மக்கள் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த நாளில், எவர்க்கும் அஞ்சாமல் கடலிலே சொந்தக் கலத்தினை ஓட்டிய வீரத் தமிழர் வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறு. அவர் கப்பல் ஓட்டியதையும் செக்கிழுத்ததையும் மட்டுமே பாடமாகப் படித்தவர்களுக்கு ஆங்கிலேய அடக்குமுறையால் அவரும் அவரது குடும்பமும்பட்ட அத்தனை கஷ்டங்களையும் படம்பிடித்துக்காட்டியிருக்கிறது இந்த நூல். நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

எனது தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள்

எனது தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள், டாக்டர் கலைமாமணி யோகா, யோகா சாவித் பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ. மகாத்மா காந்தியின் பாதம் பதிந்த பூமி, நெல்சன் மய்டேலா பிறந்த மண் என்று பெருமைகள் நிறைந்த தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுலா நோக்கில் சென்று, வரலாற்று நோக்கில் கண்டு, ஆவணமாகப் பதிவு செய்யும் நோக்கில் எழுதப்பட்ட நூல். ஆசிரியர் எடுக்கும் புகைப்படங்களைப் போலவே அவரது எழுத்துகளும் மிளர்கின்றன. நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

பறவைகள் பலவிதம்

பறவைகள் பலவிதம், மல்லை சத்யா, மல்லைத்தச்சன், விலை 50ரூ. பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்று சொன்னார்கள். இன்று விமானம் இருக்கிறது. பறவைகள் தொலைந்துவிட்டன. உலகில் 9672 பறவை இனங்கள் இருக்கின்றன என்பது முதல், அவற்றின் உடலமைப்பு, பறவைகள் பற்றிய அற்புதமான ஆச்சரியமான உண்மைகள். இதிஹாச புராணங்களில் இடம்பிடித்திருக்கும் பறவைகள் என்று முழுவதும் சுவாரஸ்யமான தொகுப்பு. நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

சங்க இலக்கியச் சாறு

சங்க இலக்கியச் சாறு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 140ரூ. தொல்காப்பியம் எனும் இலக்கண நூல், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், பாரதியார் பாட்டு என்று இலக்கிய நூல்கள் பலவற்றில் எவ்வாறு இடம்பிடித்து இலக்கிய அந்தஸ்தினைப் பெற்றிருக்கிறது என்பதை விளக்கியிருப்பதோடு, சங்க இலக்கிய நூல்கள் பலவற்றின் சாறுபோல் அவற்றின் நயத்தினையும் சொல்லியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

ஆண்டாளம்மா தேசம் (கட்டுரைகள்)

ஆண்டாளம்மா தேசம் (கட்டுரைகள்), எஸ்.ரமேஷ், ஷேக்ஸ்பியர்ஸ் டெக்ஸ், விலை 150ரூ. ஆண்டாள் அரசுபுரியும் ஸ்ரீவில்லிபுத்தூரை மையமாக வைத்து அங்கே நடப்பது போன்ற பல நிகழ்வுகளை கற்பனையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு கட்டுரையையும் படித்து முடிக்கும்போது நிஜமாக இருக்குமோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியாது. மெல்ல நகைக்கவைக்கும் நடையில் கதைபோல் இருப்பது கூடுதல் சுவாரஸ்யம். நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

டோக்கன் நம்பர் 18

டோக்கன் நம்பர் 18, திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகள், இனிய நந்தவனம் பதிப்பகம், விலை 100ரூ. பத்துப்பேர் எழுதிய இருபது கதைகளின் தொகுப்பு. மண்வாசம் வீசுவது, மனதை அழுத்துவது, காதலைச் சொல்வது என்று ஒவ்வொரு கதையும் தனித்தனி பாதையில் பயணிக்கச் செய்கிறது. ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த பத்து எழுத்தாளர்களின் படைப்புகளை ஒருங்கிணைத்து நூலாக்கி இருப்பது வித்தியாசமான முயற்சி. நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

நெசவு

நெசவு, சுப்ரபாரதிமணியன், சிற்பி பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. மனிதர்களின் மானத்தைக் காக்கும் துணியை நெய்திடும் நெசவாளர்கள், தங்கள் தன்மானத்தைத் தக்கவைத்துக் கொள்ள நடத்திடும் போராட்டமான வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் கதைகள், சில கட்டுரைகள். நெய்யும் ஆடையின் தரம் நாளுக்குநாள் உயர்வதும், நெய்பவன் வாழ்வாதாரம் தாழ்வதும் அருமையாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

வெற்றியின் நிகழ்ச்சி வாழ்வின் வளர்ச்சி

வெற்றியின் நிகழ்ச்சி வாழ்வின் வளர்ச்சி, மெர்வின், குமரன் பதிப்பகம், விலை 70ரூ. நோய் வந்தால் அதைப் போக்கிக் கொள்வதற்கான முயற்சிகளைச் செய்யும் நாம், நோயைவிடக் கொடியதான எதிர்மறை எண்ணங்களை அகற்ற எந்த முயற்சியும் செய்வதில்லை. அதைச் செய்தாலே வாழ்வில் வெற்றிகளும் வளர்ச்சியும் நிச்சயமாகும். அதற்கான வழியினை உலக அறிஞர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மூலம் விளக்கிச் சொல்லும் அற்புதமான நூல். நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

ஏ.பி.ஜே. அப்துல்கலாம்(ஒரு வாழ்க்கை வரலாறு)

ஏ.பி.ஜே. அப்துல்கலாம்(ஒரு வாழ்க்கை வரலாறு), அருண் திவாரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 495ரூ. இந்திய வரலாற்றில் மகாத்மாவுக்குப் பிறகு மகத்தான மனிதராகப் போற்றப்பட்ட அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு. படிப்படியாக உருப்பெற்று விண்தொட்ட ஏவுகணைப்போல் வாழ்வில் படிப்படியாக உயர்ந்து அவர் சாதித்ததைச் சொல்லி இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டும் அற்புத வரலாறு. கலாமின் சீடரும் நெருங்கிய நண்பரும் அவரது நூல்கள் பலவற்றுக்கு இணை ஆசிரியருமான பேராசிரியர் அருண்திவாரி எழுதிய ஆங்கில நூலின் செம்மை குறையாத தமிழ் வடிவம். நன்றி: குமுதம், […]

Read more
1 11 12 13 14 15 57