ஒருமிடறு பச்சைக் குருதி

ஒருமிடறு பச்சைக் குருதி, காலச்சித்தன், விஜயா பதிப்பகம், விலை 120ரூ. விரிந்த வெளியில் பரந்து இயங்கி, மகாபாரதம் முதல் சிலப்பதிகாரம் வரை இலக்கியங்களையும் களங்களாக்கி, வியக்கச் செய்யும் வித்தியாசமான கோணத்தில் புனைந்திருக்கும் கவிதைகள். நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

வாழநினைப்போம், வாழுவோம்

  வாழநினைப்போம், வாழுவோம், டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 120ரூ. “எல்லா மாணவர்களுக்கும் சிறந்த வாழ்க்கை சாத்தியம் என்பதை நிச்சயப்படுத்தும்வகையில் நான் எழுதி இருக்கும் இந்தப் புத்தகத்தை பெற்றோரும் ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களையும் குழந்தைகளையும் படிக்க ஊக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”. இந்த நூல்குறித்து அப்துல் கலாம் அவர்களே சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை. இலட்சிய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். ஆங்கிலத்தை அழகுத் தமிழாக்கியிருக்கிறார் சிவதர்ஷினி. நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

பாவேந்தர் பாரதிதாசனின் பாண்டியன் பரிசு

பாவேந்தர் பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, முனைவர் சபா. அருணாசலம், முல்லை பதிப்பகம், விலை 40ரூ. புரட்சிக் கவிஞர் படைத்த வீரம், காதல், நகைச்சுவை என யாவும் நிறைந்த ஒப்பற்ற காவியமான பாண்டியன் பரிசின் சுருக்கம், முழுமையாகப் படித்த உணர்வைத் தரும் வகையில் செதுக்கித் தந்திருப்பது பாராட்டத்தக்கது. நன்றி: குமுதம், 21/3/2018.

Read more

மனைவிக்கு

மனைவிக்கு, பெருங்கவிக்கோ, கவியரசன் பதிப்பகம், விலை 190ரூ. பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், தமது இல்லத்தரசிக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. தனிப்பட்ட இருவருக்குமான தகவல்களாக இல்லாமல், மனம் ஒருமித்த தம்பதியராக இல்லறத்தை நல்லறமாய் நடத்திட விரும்பும் எல்லோருக்குமே வழிகாட்டும் வகையிலான மடல்களாக இருப்பது சிறப்பு!. நன்றி: குமுதம், 21/3/2018.

Read more

அண்ணன்மார் சுவாமிகள்

அண்ணன்மார் சுவாமிகள், பொன்னன் சங்கர் வீர வரலாறு, பாஸ்கரதாசன், கொங்குநூல் பதிப்பகம், விலை 240ரூ. கொங்கு நாட்டின் வீரகாவியம், அண்ணன்மார் சுவாமிகள் என்று போற்றப்படும் பொன்னர் சங்கரின் வீரமும் புனிதமும் நிறைந்த வரலாறு. எழுத்து நயமும் விறுவிறுப்பும் கொஞ்சமும் குறையாத புதினமாகப் புனையப்பட்டிருக்கும் விதம் அருமை. நன்றி: குமுதம், 21/3/2018.

Read more

ஒரு துளியின் துளித்துளி

ஒரு துளியின் துளித்துளி, தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், விலை 70ரூ. கழிந்து செல்லும் கணங்களில் நடந்தவற்றைக் கூர்ந்து நோக்கியதால் செதுக்கப்பட்டிருக்கும் கவிதைகள். ஒவ்வொரு கவிதையும் விதவிதமான கோணத்தில் எழுதப்பட்டிருப்பது சோர்வில்லா வாசிப்புக்குத் துணை நிற்கிறது. நன்றி: குமுதம், 21/3/2018.

Read more

வட இந்திய வரலாறு

வட இந்திய வரலாறு, இர.ஆலால சுந்தரம், சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 400ரூ. இந்தியாவின் வடக்கே, ஹர்ஷரின் ஆட்சிக்காலத்துக்குப் பின் நடந்த இந்து மன்னர்களின் ஆட்சிக் கால வரலாறும், கஜினி முகமது தொடங்கி குத்புதீன் ஐபக் வரையிலான முஸ்லிம் அரசர்களின் வரலாறும் முழுமையாகச் சொல்லப்பட்டிருக்கும் நூல். மத்திய மாநில போட்டித் தேர்வுகளுக்கான பாடநூல் என்று குறிப்பிட்டிருப்பது முற்றிலும் பொருந்தும். நன்றி: குமுதம், 21/3/2018.

Read more

இந்தியாவின் இலட்சிய மகளிர்

இந்தியாவின் இலட்சிய மகளிர், வசந்தநாயகன், ஸ்ரீகுருஇராகவன் பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. மாலவனுக்குத் தொண்டு செய்த ஆண்டாள் முதல் மக்களுக்கு சேவை செய்த மதர் தெரசா, ஜெயலலிதா வரை இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த மங்கையர்கள், பதினேழுபேரின் சுருக்கமான வரலாறு. ஜான்சிராணியின் இயற்பெயர் மணிகர்ணிகா என்பது போன்ற பலருக்கும் தெரியாத தகவல்களும் உண்டு. -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

கடல் பயணங்கள்

கடல் பயணங்கள், மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 130ரூ. பயணிகளால்தான் பாதை உருவானது. அதுதான் உருண்டையான உலகின் இரு முனைகளை இணைக்க உதவியது. வாஸ்கோடகாமா, மார்கோபோலோ, கொலம்பஸ் என பன்னிரண்டுபேர் கடலோடிகளாகப் பயணித்து பல்வேறு சிரமங்களுக்கு இடையே கடல்வழிப் பாதைகளையும் அதன் வழிசென்று பல நாடுகளையும் கண்டுபிடித்த வரலாறு. கதைபோல் சொல்லப்பட்டிருப்பது சுவாரஸ்யம்! -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

கொஞ்சம் பயமாய் இருக்கிறது

கொஞ்சம் பயமாய் இருக்கிறது, நர்மதா, படிவெளியீடு, விலை 90ரூ. சுற்றி நடக்கும் அநீதியைத் தட்டிக் கேட்க முயலாமல், உள்ளுக்குள் நொறுங்கி வெளியே தைரியசாலியாய் வேஷம் போடும் மனத்தின் மனக்குரலாய் ஒலிக்கும் கவிதைகள். நேசம், பாசம், பரிதவிப்பு, நெகிழ்ச்சி என்று ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு உணர்வின் வெளிப்பாடு. -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more
1 9 10 11 12 13 57