வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம், சிந்தை ஜெயராமன், வினோத் பதிப்பகம், விலை 299ரூ. சாதாரணக் குடும்பத்தில் பிறந்து பல சோதனைகளை வென்று சாதனை படைத்தவரின் அனுபவப் பாடம். குழந்தைகளுக்கான பள்ளிக் கல்வி முறை எப்படியெல்லாம் இருந்தால் அவர்களின் அறிவுத் திறன் வளரும் என்பதற்கான யோசனைகள் வித்தியாசமானவை, வரவேற்கத்தக்கவை. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 2/5/2018.

Read more

காலம்

காலம், பேரா.க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. சுற்றுவது பூமியா சூரியனா? காலச் சுழற்சி எதனால் ஏற்படுகிறது? காலத்தைப் பின்னோக்கி நகர்த்த முடியுமா? விண்ணிலும் மண்ணிலும் காலமாற்றத்தில் என்னென்ன நிகழ்கின்றன? மனிதர்களும் உயிர்களும் தோன்றியது எவ்வாறு? இப்படி காலம் குறித்த ஏராளமான விஞ்ஞான விளக்கங்கள். எளிய நடையில். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 2/5/2018.

Read more

எல்லோரும் நலம் வாழ

எல்லோரும் நலம் வாழ, தொகுப்பாசிரியர் பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 170ரூ. கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்களது சிந்தனையில் விளைந்த கவிதை மலர்களில் இருந்து, தேன் துளிகள்போல் தேர்ந்தெடுத்துக் கோத்திட்ட கவிதைகளின் தொகுப்பு நூல். நகைச்சுவை இழையோடுவது, வாசிப்பை நேசிக்க வைக்கிறது. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000026610.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 2/5/2018.

Read more

மனம் உதிரும் காலம்

மனம் உதிரும் காலம், கல்பனா ரத்தன், கல்பதரு பதிப்பகம், விலை 100ரூ. வித்தியாசமான கோணத்தில் பார்க்கும்போது ஒவ்வொன்றும் ஒரு கவிதையாய் முளைத்து மனதுக்குள் பதிந்து இன்னொன்றின் விதையாக மாறும். அப்படி கணங்களால் காலத்தை நகர்த்தி தான் கண்டவற்றையெல்லாம் கவிதையாக்கித் தந்திருப்பது நல்ல ரசனை. நன்றி: குமுதம், 14/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026797.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

காற்றாய் வருபவள்

.காற்றாய் வருபவள், இ.எஸ்.லலிதாமதி, தாமரை பிரதர்ஸ் மீடியா பி.லிட், விலை 60ரூ. இருக்கு ஆனா இல்லை. இந்த இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளியில் ஒளிந்திருக்கும் ஒரு மர்ம முடிச்சுத் தேடுதலில் பல திடுக் சம்பவங்களுக்கு நடுவே தன் சொந்தத்தின் சூட்சும உருவைக் கண்டறியும் காதல், சென்டிமென்ட் கலந்த பேய்க் கதை. நன்றி: குமுதம், 14/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026798.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஜென் பாடங்கள்

ஜென் பாடங்கள், தமிழாக்கம் ந.முரளிதரன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 180ரூ. வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து அதன் இன்பங்களை அனுபவித்திட வேண்டுமானால், அதன் மெய்ம்மையை உணர்ந்து கொள்வது அவசியம். அதற்கான எளிய சூத்திரத்தை பல்வேறு குட்டிக் கதைகள் மூலம் சொல்லித் தருவதே ஜென் துறவிகள் சொன்ன பாடங்கள். ஆங்கிலத்தில் யோமே.எம்.குபோஸ் தொகுத்து எழுதிய அத்தகைய பாடங்களின் எளிமைத் தமிழாக்கம் இந்த நூல். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026624.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை பாகம் 3

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை பாகம் 3, சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், விலை 200ரூ. விவேகமும் வீரமும் நிறைந்த சுவாமி விவேகானந்தரின் உரைகளில் தெய்வ பக்தியும் தேசபக்தியும் ஒன்று கலந்தே ஒலித்தது. அவற்றுக்கு எதிரொலியாகவே எழுந்தவை மகாகவியின் கவிதைகளும் கட்டுரைகளும். அஞ்ஞானம் என்ற இருளில் இருந்து மக்களை விழித்தெழச் செய்யும் வகையில் அமைந்த அவர்கள் இருவரின் கருத்துகளையும் தேடித் தொகுத்துத் தரப்பட்டிருக்கும் அற்புதமான நூல் இது. பாரதியார் தமது கட்டுரைகள் பலவற்றிலும் சுவாமி விவேகானந்தர் குறித்து சொன்னவற்றைத் தொகுத்திருப்பதோடு, இருவர் […]

Read more

அறிவியல் முதல்வர்கள்

அறிவியல் முதல்வர்கள், தேவிகாபுரம் சிவா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 70ரூ. அறிவியல் பாடப்புத்தகங்களில் பெயர்களை மட்டுமே படித்திருக்கும் அறிவியல் அறிஞர்கள் பன்னிருவரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாகவும் சுவையாகவும் தரப்பட்டிருப்பது அருமை. மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம் வளர இந்நூல் நிச்சயம் உதவும். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000022170.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம், 14/3/2018.

Read more

முத்தன் பள்ளம்

முத்தன் பள்ளம், அண்டனூர் சுரா, மேன்மை வெளியீடு, விலை 150ரூ. புதினப் படைப்பில் ஒரு புதுமையாய், மறந்துபோனதால் மறைந்து போயிருக்கும் ஒரு சின்னஞ் சிறு கிராமத்தை வெளிக்கொணரும் முயற்சியாக எழுதப்பட்டிருக்கும் நாவல். விளையாட்டுப் பூச்சி தேடிச்செல்லும் பயணமாய் கதையை நகர்த்தியிருக்கும் விதம் வித்தியாசமானது. நன்றி: குமுதம், 14/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026694.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

போதிதர்மா

போதிதர்மா(நான்கு பாகங்கள்), கயல் பரதவன், நர்மதா பதிப்பகம்,விலை 1700ரூ.(நான்கு பாகங்களும் சேர்த்து). போதிதர்மா – இந்தப் பெயரைச் சொன்னாலே பலரிடமும் ஒரு பரபரப்பும் ஆர்வமும் தொற்றிக் கொள்ளும். பல ஆயிரம் வருடம் கடந்தும் உலகம் முழுக்க பேசப்படும் போதிதர்மா இந்தியரா? சீனரா? அவர் வாழ்ந்தது உண்மையா? பொய்யா? முழுமையான வரலாறை, அந்தக் கால நாகரிகம், வாழ்வு முறைக்கு ஊடாக நகர்த்தி, உணர்வுகளோடு பிணைத்து எழுதப்பட்டிருக்கும் விறுவிறுப்பான சரித்திர நாவல். நன்றி: குமுதம், 7/3/2018.

Read more
1 7 8 9 10 11 57