கமுகம் பூ

கமுகம் பூ, ஸ்ரீலெஜா, வாசி பதிப்பகம், விலை 100ரூ. கவிதைக் கால்களால் ஊர் முழுக்கச் சுற்றி உலகு முழுக்க உலவி, ஆங்காங்கே நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் ஆழ்ந்த கோணத்தில் கவிதைகளாய்ப் பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு கவிதையும் மனதில் விதையாய் பதிகிறது. நன்றி: குமுதம், 7/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026801.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மைக்ரோ பதிவுகள்

மைக்ரோ பதிவுகள், ராஜா சந்திரசேகர், சந்தியா பதிப்பகம், விலை 185ரூ. சுருங்கச் சொல்லி விரிய உணர்த்திடல் சொல்லுக்கு அழகு என்பார்கள். அத்தகைய ஆழமான வார்த்தைகளால், ட்விட்டரில் கீச்சியவற்றை அழகாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். ஒற்றை வரியில் உலகம் சுற்றிய நிறைவு கிடைக்கிறது. நன்றி: குமுதம், 7/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026696.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள், போகன் சங்கர், கிழக்கு பதிப்பகம், விலை 175ரூ. இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையே உள்ள இடைவெளிபோல், இருப்புக்கும் இறப்புக்கும் இடையேயும் உண்டு. அந்த இடைவெளிக்குள் எத்தனை எத்தனையோ உறவுகள், உயிர்கள், உணர்வுகள். அவற்றை அறிமுகம் செய்து நம் அடிமனதை வருடி, ஆழ்மனதை நெகிழச் செய்யும் சிறுகதைகள். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9788184938197.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம், 7/3/2018.

Read more

உருதுக் கவிஞர் கவிக்குயில் காலிப்பின் கவிதைகள்

உருதுக் கவிஞர் கவிக்குயில் காலிப்பின் கவிதைகள், தமிழாக்கமும் விளக்கமும் பேராசிரியர் தி.ரா.சீனிவாசரங்கன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 95ரூ. உலக இலக்கியவாதிகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக ஈர்த்த உருதுக் கவிஞர் காலிப்பின் அழகுக் கவிதைகள் எளிய தமிழாக்கத்துடன் தெளிவான விளக்கத்துடன் தொகுக்கப்பட்டிருக்கின்றன. வாழ்வின் பல நெளிவு சுளிவுகளைச் சொல்லும் அழகான கவிதைகள். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000022311.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம், 7/3/2018.

Read more

எங்கிருந்து தொடங்குவது?

எங்கிருந்து தொடங்குவது?, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 100ரூ. கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழும்போது குடும்பம் எனும் கூடு கலையாமல் இருக்கும். கலகலப்பாகவும் இருக்கும். அப்படியின்றி புரிதல் கோளாறினால் பிரிதல் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், இல்லறம் நல்லறமாக இருப்பதற்கான எளிய வழிகளை இதமுறச் சொல்லும் நூல். மணவாழ்க்கை மணக்க விரும்புவோர் படிக்க வேண்டிய பாடம். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026367.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

மலர்களே கொஞ்சம் மலருங்கள்

மலர்களே கொஞ்சம் மலருங்கள், சிறுவர்களுக்கான அறிவியல் சிறுகதைகள், லூர்து எஸ்.ராஜ், வைகறை பதிப்பகம், விலை 40ரூ. பூக்கள் குறித்த அறிவியல் சார்ந்த விஷயங்கள், வித்தியாசமான கதை பாணியில் சொல்லப்படுகின்றன. மாணவர்கள் மனதில் எளிதில் இடம்பிடித்து மணம் வீசும். நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

வேட்கையில் எரியும் பெருங்காடு

வேட்கையில் எரியும் பெருங்காடு, பச்சியப்பன், இராசகுணா பதிப்பகம், விலை 150ரூ. இதயத்து உணர்வுகளை அனுபவத்தால் சொற்களாகச் செதுக்கி, வார்த்தைகளை வரிகளாக்கி எழுதப்பட்டிருக்கும் அழகான, ஆழமான கவிதைகள். படிக்கும்போது மனம் பறக்கிறது! பரபரக்கிறது! நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

அச்சத்தை அடித்து நொறுக்குவோம்

அச்சத்தை அடித்து நொறுக்குவோம், நந்தவனம் சந்திரசேகரன், இனியநந்தவனம் பதிப்பகம், விலை 100ரூ. விடியலில் எழும்போதே வெல்வோம் என நினைத்தால் வெற்றிகள் உங்கள் வாசலில் வந்து நிற்கும். அறியாமையால் அச்சத்தை சுமந்து அந்தச் சுமையில் அழுந்திப்போகாமல், துணிந்து போராடி ஜெயித்திட, உள்ளுக்குள் இருக்கும் தன்னம்பிக்கைப் பொறியினை அடையாளம் காட்டும் நூல். நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

தி.க.சி. திரைவிமர்சனங்கள்

தி.க.சி. திரைவிமர்சனங்கள், தொகுப்பாசிரியர் வே.முத்துக்குமார், ஆவாரம்பூ, விலை 40ரூ. முற்போக்கு இலக்கியவாதிகளின் வழிகாட்டியான தி.க.சி. தமிழிலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்ட ஆரம்பகால இதழ்களில் சினிமா விமர்சனங்களும் எழுதியிருக்கிறார். குறை, நிறைகளை கொஞ்சமும் தயங்காமல் சுட்டிக்காட்டி தனக்கே உரிய பாணியில் அவர் எழுதிய 13 விமர்சனங்களின் தொகுப்பு. நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

மறக்கமுடியாத மாபெருந்தலைவர்

மறக்கமுடியாத மாபெருந்தலைவர், திருவாரூர் இரா. தியாகராஜன்(சின்ன குத்தூசி), சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 90ரூ. கர்மவீரர் காமராஜருடனான அனுபவ நிகழ்வுகளை பிரபலங்கள் பலரிடம் கேட்டு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. காமராஜரின் கண்ணியம், உதார குணத்திற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு இந்தப் புத்தகம். நன்றி: குமுதம், 28/3/2018.

Read more
1 8 9 10 11 12 57