மூளையின் திறனைப் பெருக்கி சுய முன்னேற்றம் பெறுங்கள்

மூளையின் திறனைப் பெருக்கி சுய முன்னேற்றம் பெறுங்கள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், பக். 160, விலை 80ரூ உயிரின உறுப்புகளின் மிகப் பிரதானப் படைப்பே அவற்றின் மூளையாகும். பிற உறுப்புகள் எல்லாம் தங்களது இயக்கத்தை வெளிக்காட்டும்போது, மூளை மட்டும் ஆடாமல் அசையாமல் அமைதியாக இருந்துகொண்டே, உடலின் அனைத்து உறப்புகளையும், நொடிப் பொழுதில் இயக்கும் ஆற்றல் படைத்தது. தவிர, எண்ணங்களும், சிந்தனைகளும் கூட மூளையில்தான் தோற்றுவிக்கப்படுகின்றன. அவற்றைக் கொண்டே உயிரினங்களின் அறிவுகளும் வகைப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், ஆறு அறிவு கொண்ட மனித இனத்தின் மூளையைப் போன்ற […]

Read more

புலவனும் பொல்லாதவனும்

புலவனும் பொல்லாதவனும், பரிக்கல ந.சந்திரன், ஆர்த்தி பதிப்பகம், விலை 120ரூ. வாழ்க்கையில் எல்லோருக்குமே அனுபவங்கள் ஆயிரம் இருக்கும். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழிலும் வல்லவரான நூலாசிரியர், பல ஊர்களுக்கும் சென்றபோது தாம் பெற்ற அனுபவங்கள் சிலவற்றை எளிய தமிழில் எள்ளல் இழையோட நாடக வடிவாக்கித் தந்திருக்கிறார். நன்றி: குமுதம், 16/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கருப்பு வெள்ளை கல்வெட்டு

கருப்பு வெள்ளை கல்வெட்டு, ஸ்ரீதர் பாரதி, எக்காளம், விலை 50ரூ. பரணில் தூசி மண்டிக்கிடக்கும் பாட்டன் பூட்டன் காலத்து கருப்பு வெள்ளை புகைப்படங்கள்போல், நகரப் பெருக்கத்தில் நாம் மறந்துபோன கிராமத்து கலாசாரத்தை காட்சிகளாய்க் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திடும், மண்மணக்கும் கவிதைகள். நன்றி: குமுதம், 16/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வாழ்திடச் சொல்கிறேன்

வாழ்திடச் சொல்கிறேன், தியாரூ, ஜே.பி.ரூபன் பப்ளிகேஷன்ஸ், விலை 300ரூ. வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை. கைரேகைபோல், கையெழுத்துபோல் வெவ்வேறாகத்தான் இருக்கும். உங்களுக்குக் கிடைத்திருப்பதை வைத்து, உயர்வாகவும் உன்னதமாகவும் வாழ்வது எப்படி? உள்ளத்தில் கள்ளமின்றி வெள்ளமென உயர்ந்து வாழ வழிகாட்டும் புத்தகம். நன்றி: குமுதம், 16/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மௌனமாயொரு இடிமுழக்கம்

மௌனமாயொரு இடிமுழக்கம், ட்யுராங்கோ அதிரடி, முத்து காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 250ரூ. சம்மரைக் கொண்டாட சாகசங்கள் நிறைந்த விறுவிறு காமிக்ஸ்! புரட்சிப்படை, கூலிப்படை, அதிகார வர்க்கங்களுக்கு இடையே நடக்கும் ஆக்ரோஷமான சண்டைகள், சதிகள், கொடுமைகள் என்று வன்மேற்கின் ரத்தவெறி யுத்தங்களைப் படம்படமாக நகர்த்தி பிரமிக்கச் செய்யும் த்ரில்லர். பள்ஸ் காதல், பாசம், வீரம் நிறைந்த ட்ராஜெடி என்று, கோடை மலராக இரட்டை காமிக்ஸ்! கதாநாயகன் ட்யுராங்கோவின் மின்னல் வேகமும், இடிமுழக்கமாக எதிரொலிக்கும் தோட்டாக்களின் சத்தமும் கோடை மழையாகவே காமிக்ஸ் பிரியர்களைக் கொண்டாடச் செய்யும் […]

Read more

கொங்கு மண்டல கோவேந்தன் எம்.ஜி.ஆர்.

கொங்கு மண்டல கோவேந்தன் எம்.ஜி.ஆர்., மகுடம் மாணிக்கம், சகுந்தலா வசந்தம் பதிப்பகம், விலை 225ரூ. சாதாரணக் குடும்பத்தில் பிறந்த மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். ஆக மக்கள் மனதில் இடம்பிடிப்பதற்கு முன் சந்தித்த சோதனைகள், பின்னர் வென்ற சாதனைகள், எளியோரிடம் அவர் காட்டிய அன்பு என்று பலவற்றையும் சுருக்கமாகச் சொல்லி, மனதுக்கு நெருக்கமாகும் நூல். நன்றி: குமுதம், 16/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஆதார் சட்டம்

ஆதார் சட்டம், பி.ஆர்.ஜெயராஜன், சுப்ரீம் லா பப்ளிகேஷன்ஸ், விலை 210ரூ. ஆதார் அட்டையின் அடிப்படைத் தேவை என்ன? அரசு சார்ந்த மானியங்கள், நலத்திட்டங்கள் என அத்தனைக்கும் அது ஏன் அவசியம்? அதனால் தனிமனிதனுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன? ஆதார் அட்டை குறித்து ஏ டு இசட் தகவல்களைத் தெரிந்து கொள்ள எளிய வழிகாட்டி. நன்றி: குமுதம் 9/5/2018.

Read more

கணவனின் காதலி

கணவனின் காதலி, ஜோஜ், ஹலோ பப்ளிகேஷன்ஸ், விலை 500ரூ. மயக்கும் காதலை நம்பி மனைவியை மறந்து போனவன், உண்மை உணர்ந்து திரும்பி வரும் யதார்த்தக் கதை. விஷச்செடியாய் முளைக்கும் கணவனின் விபரீதக் காதலை, வீண்வாதம் செய்து வளர்க்காமல், முளைக்கும்போதே முறித்திட அறிவுரை சொல்லியிருப்பது சிறப்பு. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 9/5/2018.

Read more

வாங்க, மனசுக்குள் போகலாம்

வாங்க, மனசுக்குள் போகலாம், டாக்டர் எஸ். மோகன வெங்கடாசலபதி, மனோரக்ஷா, விலை 100ரூ. மனம் கெட்டால் உடலும் கெட்டு நோய்களுக்கு ஆளாகும். மனநல பாதிப்புகள் எப்படியெல்லாம் ஏற்படும், அதில் இருந்து விடுபடுவது எப்படி? இதற்கெல்லாம் விடையாக தன்னிடம் வந்த உளநலப் பிணியாளர்களின் அனுபவங்கள் வாயிலாக விறுவிறு நடையில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 9/5/2018.

Read more

உன்னால் கடக்க முடியும்

உன்னால் கடக்க முடியும், ஓஷோ, தமிழாக்கம் வானமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், விலை 300ரூ. கடலைக் கடக்க வேண்டுமானால் படகு முக்கியம். அதுபோல் வாழ்க்கைக் கடலைக் கடக்க குரு எனும் தோணி அவசியம். குருவின் துணையோடு வாழ்க்கைக் கடலில் குதித்து, ஒவ்வொன்றாய்க் கடந்து, பறிகு குருவையும் துறந்து ஞானக்கடலில் சுதந்தரமாக நடந்து அதனைக் கடப்பது எப்படி? சூட்சுமமான சூஃபி கதைகள் மூலம் ஓஷோ சொல்லித் தந்த ஞானவழிகாட்டல், எளிய தமிழில். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more
1 6 7 8 9 10 57