தமிழ் நாடக மேடை தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ் நாடக மேடை தோற்றமும் வளர்ச்சியும், டி.வி. ராதாகிருஷ்ணன், திருவரசு புத்தகநிலையம், விலை 100ரூ. தமிழ் நாடக மேடை முதன் முதலில் தோன்றியதிலிருந்து இன்று வரை கண்டிருக்கும் மாற்றம், ஏற்றம் என்று அத்தனையையும் அழகாகச் சொல்லியிருக்கிறார். கடைச்சங்க காலம் முதலே நாடகக் கலை இருந்தது என்பது முதல், தமிழ் நாடகக் கலைக்கு வித்திட்ட சி.கன்னையா, சங்கரதாஸ் சுவாமிகள், நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, பம்மல் சம்பந்தம் முதலியார் என்று நாடகபிதாமகர்கள் பற்றிய தகவல்கள், அக்காலத்திய பிரபல நாடகங்கள், தற்காலத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நாடகக்குழுக்கள், அவர்களின் சிறந்த நாடகங்கள் […]

Read more

நூல் ஏணி, (தலித் பார்வையில் ஆசிரியர்கள்)

நூல் ஏணி, (தலித் பார்வையில் ஆசிரியர்கள்), தொகுப்பு ரவிகுமார், மணற்கேணி பதிப்பகம், விலை 80ரூ. எல். இளையபெருமாள், ஓவியர் சந்துரு உள்ளிட்ட தமிழ் தலித் எழுத்தாளர்கள் சிலரது மாணவப் பருவ அனுபவக் கட்டுரைகள். சாதியம் வேரூன்றிக் கிடந்த அந்தக் காலத்திலும் சமத்துவத்தினை விரும்பிய ஆசிரியர்கள் தலித் மாணவர்களிடம் காட்டிய நேசத்தின் நினைவுகளுடனான நெகிழ்வான தொகுப்பு. நன்றி: குமுதம், 16/8/2017.

Read more

ஆகாயச் சுரங்கம்

ஆகாயச் சுரங்கம், சி.ராமலிங்கம், மேன்மை வெளியீடு, விலை 100ரூ. விண்கல் முதல் விண்கலம் வரை, கோள்கள் முதல் செயற்கைக் கோள்கள் வரை இயற்கை, செயற்கை என்று எத்தனையோ அற்புதங்களைச் சுமந்துகொண்டு பரந்து விரிந்து கிடக்கிறது வானம். உயர்ந்து அதனை உற்றுப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடத்தை அது கற்றுத் தருகிறது. தோண்டத் தோண்ட வளரும் சுரங்கமாக தொலைவில் இருக்கும் ஆகாயத்தை தொட்டுவிடும் தூரத்தில் கொண்டுவந்து காட்டியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 16/8/2017.

Read more

ஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும்

ஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும், ஏ.எல்.சூரியா, பி பாஸிடிவ் புரொடக் ஷன்ஸ், பக். 296, விலை 300ரூ. உலகக் கோடீஸ்வரர் பில்கேட்ஸூக்கு என்ன ஆற்றல் உள்ளதோ, அதே ஆற்றல் உங்களுக்குள்ளும் உள்ளது என்பதை நீங்கள் உணரும் விதத்தில் உங்களைத் தூண்டி விடும் நூல். ஆழ்மனதின் ரகசியங்களையும் ஆழ்மனதை சரியான முறையில் இயக்கவும் பழகிக்கொள்ள உதவும் நூல். ஆழ்மனதின் அபரிமிதமான ரகசியங்களை உங்களுக்குள்ளேயே புதைத்துவிடாமல், அதை வெளிக்கொணர உதவும் நூல். நன்றி: குமுதம், 21/6/2017.

Read more

நீங்களும் கிடைப்பீர்கள்

நீங்களும் கிடைப்பீர்கள், ம. சக்தி வேலாயுதம், விஜயா பதிப்பகம், பக்.144, விலை 75ரூ. “பத்தே அடியில் தண்ணீர் கிடைக்கிறதாம்… விளைநிலம்… விலை நிலம் ஆனபின்பு” இப்படி சமூகத்தில் புரையோடிப்போன ஏமாற்றுக்களை எளிய தமிழில் ஆழமாகப் பதியவிட்டு, வாசகனை விழித்து எழச் செய்யும் உத்தி கவிதைகள் தோறும் காண முடிகிறது. கவியின் உள்ளமும் சொல்லாட்சியும் படிப்போரைக் கவரும். நன்றி: குமுதம், 21/6/2017.

Read more

உன்னைவிட்டு விலகுவதில்லை

உன்னைவிட்டு விலகுவதில்லை, எஸ். செல்வசுந்தரி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 160, விலை 120ரூ. திருநங்கைகள், திருநம்பிகளின் விமர்சனங்களை கேள்விகளாக்கி நாவலில் விடை தேடும் முயற்சி இது. மூன்றாம் பாலினத்தின் மூடப்பட்ட ரகசியங்களை நாவலில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். மூன்றாம் பாலினத்தின் மீது சமுதாயம் திணிக்கும் அழுத்தம், அவர்களின் வாழ்வைப் பற்றிய குறைந்தபட்ச புரிதல் கூட இன்றி அவர்களை ஏளனமாக கடந்து போவதைச் சுட்டிக்காட்டுகிறார். நன்றி: குமுதம், 21/6/2017.

Read more

உன்னால் கடக்க முடியும்

உன்னால் கடக்க முடியும், ஓஷோ, தமிழில் வானமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், விலை 200ரூ. எங்கும் மணலே நிறைந்திருக்கும் பாலைவனத்தில் செல்லும் பாதை எது? அதன் எல்லை எங்கே இருக்கிறது? அந்தப் பாதையில் சென்ற அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே அறிவர். வாழ்க்கையும் அந்த மணல் பாதைபோல்தான். அதில் நாம் செல்லும் பாதைக்கு வழிகாட்டி, செல்ல வேண்டிய எல்லைக்கு அழைத்துச் செல்கிறார் ஓஷோ. வழிகாட்டியை முழுமையாக நம்பினால்தான் பயணத்தை முழுமையாக ரசிக்க முடியும் என்கிறார். வாழ்வின் மறுபுறம் மறைந்துள்ள மகிழ்ச்சியைக் காண்பதற்கான சூஃபி தத்துவம் எளிய முறையில் […]

Read more

ஆண்கள் படைப்பில் பெண்கள்

ஆண்கள் படைப்பில் பெண்கள், சு. ஜெயசீலா, காவ்யா, பக். 134, விலை 130ரூ. நாவல்களில் பெண்கள் ஆண் எழுத்தாளர்களால் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆராயும் நூல். கு. அழகிரிசாமி, ஐசக் அருமை ராஜன், சு. சமுத்திரம், பொன்னீலன், மேலாண்மை பொன்னுச்சாமி உள்ளிட்ட 16 புதினங்களில் பெண்கள் பழமைக்கும் புதுமைக்கும் இடையே போராடுவதை இந்நூல் வெளிக்காட்டுகிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/6/2017.

Read more

தக்கர் கொள்ளையர்கள்

தக்கர் கொள்ளையர்கள், இரா. வரதராசன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ. ‘ஒரே வருடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனார்கள்… காற்றில் கரைந்ததுபோல் மாயமானார்கள்….!’ தொடக்க வரிகளே நடுங்க வைக்கின்றன. பதினெட்டாம் நூற்றாண்டில் தக்கர் கொள்ளையர்கள் கொலைவெறியுடன் நடத்திய கொடூர சம்பவங்களின் வரலாறினை அலைந்து திரிந்து சேகரித்து திகில் படங்களுக்கு சற்றும் குறையாத படபடப்பு படிப்பவர்களுக்கு ஏற்படும் வகையிலும் சுவாரசியமாகவும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. நன்றி: குமுதம், 12/7/2017.

Read more

வேடிக்கை மனிதரா? சாதிக்கும் மனிதரா?

வேடிக்கை மனிதரா? சாதிக்கும் மனிதரா?, கலைமாமணி டாக்டர் ஆர்.பி.என்., சமாஜ சேவா டிரஸ்ட், பக். 184, விலை 100ரூ. வாழ்வில் முதன்மை நிலையை அடைய விரும்புபவர்களுக்கு இந்நூல் உந்துதலைத் தரக்கூடியது. அதாவது வாழ்வில் வெற்றிபெறும் நோக்குடன் செயல்படும் எவருக்கும் இந்நூல் வழிகாட்டும். வாழ்ந்து சாதித்துக் காட்டியவர்களின் அறிவுரைகளையும், வரலாறு படைத்தவர்களின் அனுபவங்களையும் படிப்போருக்கு நல் உதாரணமாகத் தந்து உயரச் செய்கிறார் நுலாசிரியர். நன்றி: குமுதம், 31/5/2017.

Read more
1 13 14 15 16 17 57