திகைக்க வைக்கும் தீர்க்கதரிசி நாஸ்ட்ரமாமஸ்

திகைக்க வைக்கும் தீர்க்கதரிசி நாஸ்ட்ரமாமஸ், குன்றில்குமார், அழகு பதிப்பகம், பக். 168, விலை 140ரூ. நாளை என்ன நடக்கப்போகிறது என்பதை மிகச் சரியாக கணித்த தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ். தலைவர்களின் அகாலமரணம், மோசமான இயற்கைப் பேரழிவுகள், உலகப் போர்கள், சண்டைகள், சச்சரவுகள் என்று பல்வேறு அம்சங்களை 16ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் எப்படித் துல்லியமாக கணிக்க முடிந்தது என்பதை அலசும் நூல். நன்றி: குமுதம், 3/5/2017.

Read more

ஆடவும் பள்ளுப் பாடவும்

ஆடவும் பள்ளுப் பாடவும், நர்மதா, பாப்லோ பதிப்பகம், பக். 96, விலை 150ரூ. ‘நீயுமா பாரதி… விடுதலையைப் பாட நாங்கள்தான் குனிந்து கும்மியடிக்க வேண்டுமா? என்ற கவிதைகளின் வரிகளிலேயே இக்கவிதைத் தொகுப்பு எதைப் பற்றியது என்பதை உணர்த்திவிடுகிறது. பெண், பெண்ணியம், பெண் விடுதலை, பெண் உரிமை இவற்றின் தேவைகளும், கட்டாயமும் என்பது போன்ற உணர்வை ஊட்டும் கவிதைகள் இவை. நன்றி: குமுதம், 3/5/2017

Read more

பெண்களுக்காக

பெண்களுக்காக, அர்ச்சனா நடராஜன், கண்ணப்பன் பதிப்பகம், பக். 336, விலை 200ரூ. டீன் – ஏஜ் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை, அவர்களுக்கு உதவும் வகையில் மருத்துவம், மாதவிடாய், உள்ளிட்டப பெண்கள் பிரச்னைகள், கர்ப்பகால டிப்ஸ்கள், குழந்தைப் பராமரிப்பு, குடும்ப பராமரிப்பு, தொடர்ந்து வீட்டுத்தோட்டம் அமைப்பது வரையான பல அரிய தகவல்களைத் தாங்கி வரும் நூல். நன்றி: குமுதம், 3/5/2017.

Read more

சருகுகள்

சருகுகள், போசு, டினோ, பெர்லின், வைகறை பதிப்பகம், பக். 128, விலை 65ரூ. வீழ்ந்த பிறகும் நிலத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கவும் தன்னை உருவாக்கிய மரத்திற்கே உரமாகவும் உருமாறும் சருகுகளின் பங்கு அதிகம். இதை அடிநாதமாகக் கொண்டு 18 சமூகப் பிரச்னைகளை இந்நூலில் நாடகவடிவில் அலசியிருக்கிறார்கள் மூன்று இளைஞர்கள். விழிப்பூட்டும் சிந்தனை நாடகங்கள். நன்றி: குமுதம், 22/2/2017.

Read more

சருகுகள்

சருகுகள், போசு, டினோ, பெர்லின், வைகறை பதிப்பகம், பக். 128, விலை 65ரூ. வீழ்ந்த பிறகும் நிலத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கவும் தன்னை உருவாக்கிய மரத்திற்கே உரமாகவும் உருமாறும் சருகுகளின் பங்கு அதிகம். இதை அடிநாதமாகக் கொண்டு 18 சமூகப் பிரச்னைகளை இந்நூலில் நாடகவடிவில் அலசியிருக்கிறார்கள் மூன்று இளைஞர்கள். விழிப்பூட்டும் சிந்தனை நாடகங்கள். நன்றி: குமுதம், 22/2/2017.

Read more

வேடிக்கைப் பார்க்கிறான் மனிதன்

வேடிக்கைப் பார்க்கிறான் மனிதன், கோ. ராஜசேகர், வாசகன் பதிப்பகம், பக். 64, விலை 50ரூ. எரியும் அடுப்பாக அவள் வயிறும் அணைந்த நெருப்பாக அவள் கல்வியும் – என்று பெண் கல்வியின் நிலையை இதைவிட ஆணி அடித்த மாதிரி சொல்ல முடியாது. இப்படி நிறைய கவிதைகள் நிறைந்த நூல். இளம் கவிஞர்களுக்குப் பிடிக்கும். நன்றி: குமுதம், 22/2/2017.

Read more

நந்தவனங்கள் பேசுகின்றன

நந்தவனங்கள் பேசுகின்றன, மரியதெரசா, தென்றல் நிலையம், பக். 112, விலை 50ரூ. கல்வி, சாதி, முதியோர் இல்லம், குடிப்பழக்கம், உழைப்பு, நகம், கூந்தல், நா, வாழை, குழந்தை போன்ற தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் 100-ம், 50-ம் ஆக ஹைகூ வடிவில் கவிதைகள் படைத்துள்ளார். படிக்கப் படிக்க நற்பயன் நல்கும் கவிதைகள். நன்றி: குமுதம், 22/2/2017.

Read more

மலரும் நினைவுகளில் காமராஜர்

மலரும் நினைவுகளில் காமராஜர், விருதை ராஜா, கண்ணப்பன் பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. காமராஜர் பற்றிய 100 நிகழ்வுகளைத் தொகுத்து மலரும் நினைவுகளாகத் தந்துள்ளார் நூலாசிரியர். தமிழக மக்களின் கல்விக் கண்ணைத் திறக்க அவர் உழைத்த உழைப்பு இங்கே சித்திரமாகக் காட்டப்பட்டுள்ளது. அவரது தியாகம், தொண்டு, எளிமை ஆகியவற்றைப் படிக்கப் படிக்க அது புதிய சரித்திரமாக நம்முன் வந்து நிற்கிறது. மனிதன் மனிதனாக வாழ விழிப்புணர்வு ஊட்டும் நூலாக அது விளங்கும் என்பது உண்மையே. நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

உறவுகள் பலவிதம்

உறவுகள் பலவிதம், சந்திராமனோகரன், ஒலிவியா பதிப்பகம், பக்.164, விலை 150ரூ. முற்போக்கு சிந்தனையுள்ள, இளைஞர்கள் கூட்டணி அமைத்து, வேர்கள் இறுகிப்போனாலும் விழுதுகள் மரத்தைத் தாங்கி நிற்கும் என்ற கருத்தை ஆழமாகப் பதிவு செய்யும் புதினம். பழைய சாதி சமய முரண்பாடுகளை முறியடித்து அவர்கள் புதுயுகம் படைக்கிறார்கள். கார்த்திக், கல்பனா, மணிவண்ணன் நம் வாழ்வின் நிஜங்கள். நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

பொருளறிவியல் கற்பித்தல்

பொருளறிவியல் கற்பித்தல், டாக்டர் அ. பன்னீர் செல்வம், டாக்டர் வி. நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 272, விலை 170ரூ. பொருள் அறிவியல் என்றால் என்ன? அதன் குறிக்கோள், நோக்கம் யாது? அவை எவ்வாறு கற்பிக்கப்படவேண்டும்? என்பன போன்ற உள்ளடக்கங்களுடன் கூடிய நூல். பி.எட். கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் பயன்பெறும் வகையில் அதன் சிறப்புப் பேராசிரியர்களால் எழுதப்பட்ட முதல்நூல் இது. மாணவர்களை ஆசிரியர்களாக உருவாக்கும் பணியில் இந்நூல் சிறப்பிடம் பெறும். நன்றி: குமுதம், 26/4/2017.

Read more
1 15 16 17 18 19 57