சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமாரன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 232, விலை 200ரூ. “பிரமிக்காதே பூமியில் தானிருக்கிறது மலையின் உச்சி” மலைமேல் ஏற, மலை உச்சியிலிருந்து பயணத்தைத் தொடங்கச் சொல்லும், அனுபூதி உத்தி இக்கவிதைத் தொகுப்பில் அதிகம். படிமத்தின் ஆட்சியில் சொல்ல வரும் கருத்துக்களை காட்சிப்படுத்திவிடுகிறார் கவிஞர். சமூகம், காதல், நடப்பியல் ஆன்மிகம், எள்ளல், பிரபஞ்சத் தேடல்கள் என்று அடர்த்திமிக்க கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 31/5/2017.

Read more

உருது கஸல் அரசர் மிர்ஸா காலிப்

உருது கஸல் அரசர் மிர்ஸா காலிப், சி.எஸ். தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 100ரூ. மிர்சா அசதுல்லா கான்காலிப் இந்தியாவில் வாழ்ந்த உருதுக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். அவரது கஸல்கள் தனித்தன்மை வாய்ந்தவை. காதலும் மனிதமும் உள்ளவரை காலிப்பின் கவிதைகளும் உயிர்த்திருக்கும். இந்தியாவிற்குப் பெருமை தரக்கூடிய இப்பிரபஞ்சக் கவிஞரின் வாழ்வையும் அவரது படைப்புகளையும் தமிழில் கொண்டு வந்திருப்பது தமிழுக்கும் பெருமை. நன்றி: குமுதம், 31/5/2017.

Read more

இட்டாரிச் சீமை

இட்டாரிச் சீமை, தீபிகா முத்து, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. சொற்களைத் தேடிப் பிடித்து இழுத்து வந்து, இங்கேதான் உட்கார வேணடும் என்ற அதிகார மொழி இக்கவிதைகள்ல இல்லை. எல்லாம் இயல்பாய், வட்டார மொழியின் அசைக்க முடியாத மண்வாசனையாய் கவிதைகள் தடம் பதித்துள்ளன. இட்டாரிச் சீமை வழி ஒரு கிராமத்தில் வாழ்ந்து பார்த்த வாழ்க்கையைச் சுமந்து செல்லும் ஒவ்வொரு மனிதர்களையும் மனங்களையும் நமக்குத் துணையாக அனுப்பியுள்ளார் கவிதை வரிகளால். நன்றி: குமுதம், 31/5/2017.

Read more

தண்ணீர் யாத்திரை

தண்ணீர் யாத்திரை, எஸ். அருள்துரை, வைகறை வெளியீடு, பக். 104, விலை 50ரூ. எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சினைகளால் இந்த சமுதாயம் என்ன விளைவுகளை சந்திக்கப் போகிறது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டும் நூல். மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வந்தால் அது தண்ணீர் பிரச்சினையால்தான் வரும் என்பதை தண்ணீரின் வரலாற்றுப் பின்னணியுடன் கூறும் நூல். படிப்போர் மட்டுமல்ல, எதிர்கால சமூகம் முழுமைக்கும் சிந்திக்க வைக்கும் நூல். நன்றி: குமுதம், 31/5/2017.

Read more

பெண்ணுக்கென்ன கொடுமை

பெண்ணுக்கென்ன கொடுமை, இதழாளர் அய்கோ, தனு பதிப்பகம், பக்.112, விலை 90ரூ. மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த நவீன காலப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியு புதிய கண்ணோட்டத்தை இந்நூல் தருகிறது. அதாவது ஒரு மடங்கு பெண்ணுரிமை கிடைத்தால், இருமடங்கு பெண் கொடுமை நடக்கிறது என்பதை துணிவுடன் வெளிக்காட்டும் நூல். பெண்ணுரிமைத் தளத்தில் இயங்கும் இருபாலருக்கும் இந்நூல் தேவை. நன்றி: குமுதம், 24/5/2017.

Read more

திருக்குர்ஆனில் அறிவியல் கூறுகள்

திருக்குர்ஆனில் அறிவியல் கூறுகள், ஹாஜியா டாக்டர் ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர், நந்தினி பதிப்பகம், பக். 328, விலை 240ரூ. நூலாசிரியரின் முனைவர் பட்ட ஆய்வேடு நூலாக வந்துள்ளது. இஸ்லாமிய மெய்யியல், திருக்குர் ஆனின் அறிவியல் சார்ந்த கருத்துக்களையும் சிந்தனைகளையும் உள்ளடக்கியிருப்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. திருக்குர்ஆன் தோற்றம், அறிவியல் பொருள் விளக்கம், ஆழமான ஆய்வாக உள்ளது. சமயத் திருமறைகளை விஞ்ஞான மனநிலையில் நின்று ஆராய்ந்துள்ளார். நன்றி: குமுதம், 24/5/2017.

Read more

jk ஜெயகாந்தன் வாதம் பிரதிவாதம்

jk ஜெயகாந்தன் வாதம் பிரதிவாதம், தொகுப்பு ஜெ.ஜெயசிம்ஹன், கலைஞன் பதிப்பகம், பக். 225, விலை 215ரூ. சுதந்திரத்திற்குப் பின் தன் படைப்புகளால் அதிகம் பேசப்பட்டவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். “நான் நானாக உருவானவன்” என்ற பிரகடனத்துடன்தான் அவரது எழுத்துக்கள் பலரின் மனதைத் தட்டியது. அரசியல், சமூகம், சினிமா, அறிவியல் என்று பல்வேறு துறைகளிலும் அவரது எழுத்துக்கள் ஆட்சி செய்தன என்ற போதும் எந்த இயக்கத்திற்கும் கட்டுப்படாமல் சுதந்திரப் பறவையாய், தன்னையே ஒரு இயக்கமாகக் கொண்டவர் ஜெயகாந்தன். இவற்றையெல்லாம் உள்ளடக்கிய அவரது வெளிவராத கட்டுரைகள் பலவற்றை அவரது […]

Read more

பாலி முதல் மியான் வரை

பாலி முதல் மியான் வரை, மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், பக். 320, விலை 250ரூ. பயணக்கட்டுரைகளில் இந்நூல் சற்று வேறுபட்டது. பாலி, கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ், பர்மா ஆகிய நாடுகளில் பயணம் செய்து, அங்கு புலம் பெயர்ந்த தமிழின் தொன்மங்களையும் தமிழரையும் கண்டு, அவை தந்த அனுபவங்களையும், செய்திகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் பாணி சிறப்பானதாகும். நன்றி: குமுதம், 24/5/2017.

Read more

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கண்ணதாசன் பதிப்பகம், பக். 336, விலை 200ரூ. அமெரிக்காவில் ஓஷோ தனது சீடர்களுடன் இருந்த வாழ்க்கை, அரசியல்வாதிகளை நடுங்க வைத்த அவரது உரை, மக்களை மாற்றிய அவரது சிந்தனைகள், அவரை எதிர்த்த அரசியல்வாதிகளுக்கு தனது சொற்பொழிவுகளில் பதில் அடி கொடுத்து, அதற்கான கேள்விகள், பதில்கள் என்று ஓஷோவிற்கே உரிய கடுமையான அதே சமயம் நகைச்சுவையான பேச்சினை உள்ளடக்கியது இந்நூல். நன்றி: குமுதம், 24/5/2017.

Read more

மதுரை நகரக் கோயில்கள்

மதுரை நகரக் கோயில்கள், டி.வி.எஸ். மணியன், அமராவதி வெளியீடு, பக். 200, விலை 130ரூ. மதுரை நகரத்திற்குள் அமைந்திருக்கும் கோயில்கள் பற்றி கூறும் நூல். மதுரைக் கோயில்களை காண விரும்புவோருக்கும் ஆராய விரும்புவோருக்கும் இந்நூல் ஒரு நல்ல வழிகாட்டி. கோயில்களை அறிமுகம் செய்யும் அதே வேளையில் கோயில் வரலாறு, கோயில் சார்ந்த மன்னர்கள் வரலாறு, மக்கள் வாழ்க்கை முறை, நம்பிக்கை, புராணப் பின்புலங்கள் என்று அனைத்தையும் நமக்கு எடுத்துக்காட்டிவிடுகிறார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 3/5/2017.

Read more
1 14 15 16 17 18 57