டாலர் அரசனும் ஆசை அரசியும் (தொகுதி 5)

டாலர் அரசனும் ஆசை அரசியும் (தொகுதி 5), பாமதி மைந்தன், ஸ்ரீராமகிருஷ்ண மடம், விலை 48ரூ. பரந்த உலகில் பார்க்கும் காட்சிகள் எல்லாமே ஒவ்வொரு பாடம் சொல்லும். நாம்தான் அதனை கவனிப்பதில்லை. அந்த உண்மையே கருவாகி, கற்பனையில் கதைகளாகி, உருவெடுத்து நற்பண்புகளும் நல்லொழுக்கமும், பக்தியும் வளர்க்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. கணத்தில் படித்து முடித்தாலும் மனத்தில் பல கணங்கள் தங்கி கனக்கச் செய்யும் சிறப்பான கதைகளின் தொகுப்பு. நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள்

உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள், அப்துல்கலாம், தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. “பெரும் இடையூறுகளைக் கடந்து என்னால் சாதிக்க முடிந்திருக்கிறது என்றால், அதுபோலவே யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதுதான் இந்தப் புத்தகத்தின் வாயிலாக நான் சொல்ல விரும்பும் செய்தியாகும்” என்கிறார் நூலாசிரியர் அப்துல் கலாம். இந்திய இளைஞர்களின் மனதிலுள்ள நுட்பமான பிரச்னைகளை கேள்வி – பதில் வடிவில் அலசி ஆராயும் நூல். நன்றி: குமுதம்

Read more

நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய சாலையில் பார்த்தபோது

  நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய சாலையில் பார்த்தபோது, ஹாருகி முரகாமி, தமிழில் ஜி.குப்புசாமி, வம்சி புக்ஸ், விலை 170ரூ. முரகாமி… ஜப்பான் மட்டுமில்லை, அகில உலகமே அவரது எழுத்தின் மீது கவனம் வைக்கிறது. அவரின் ஆறு சிறந்த சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன இந்தத் தொகுப்பில். வலிமையான கதைக்களன் என்று எதுவும் இல்லை. மெல்லிய உரையாடல்களில் சித்திரம் விரிகிறது. அவரது உரையாடல்கள் ஏமாற்றும் எளிமை கொண்டவை. முதல் வாசிப்பிலேயே கிடைக்கக்கூடிய அபூர்வ அழகும் சாத்தியப்படுகிறது. அதே நேரத்தில் மறுவாசிப்பின் அவசியமும் நேரிடுகிறது. தத்துவ […]

Read more

யாருக்கும் வேணடாத கண்

யாருக்கும் வேணடாத கண், மலையாளமூலம் சிஹாபுதின் பொய்தும் கடவு, தமிழில் கே.வி. லஜா, வம்சி புக்ஸ், விலை 120ரூ. மகிழ்ச்சியை மட்டுமே தேடும் மனிதன், தான் மனிதத்தைத் தொலைத்திருப்பதை உணர்வதே இல்லை. மானுட வாழ்வை சரியான வழியில் செலுத்தும் அன்பு, கருணை போன்றவற்றை இதயத்தில் புகுத்தும் முயற்சியாக மலையாளத்தில் எழுதப்பட்ட கவிதைகளின் தமிழாக்கம். மொழி மாற்றத்தில் நயம் சிதையாமல் எழுதப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. நன்றி: குமுதம், 2/8/2017

Read more

பறக்கும் தட்டு உண்மையா?

பறக்கும் தட்டு உண்மையா?, குன்றில்குமார், குறிஞ்சி, விலை 175ரூ. பலநூறு ஆண்டுகளாக கேள்விக்குறியாகவே இருக்கும் பறக்கும் தட்டு உண்மையா? வேறு கிரகங்களில் மனிதர்கள் – வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? அவர்கள் அவ்வப்போது பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து செல்வதாகச் சொல்லப்படும் செய்திகள் உண்மையா? பொய்யா? வேற்றுகிரகவாசிகளுடன் பேசமுடியுமா ? என்பது போன்ற எல்லா கேள்விகளுக்கும் விடை சொல்லும் விதமாக ஆதாரத்துடனும் தேவையான படங்களுடனும் எழுதியிருக்கிறார். படித்துவிட்டு இரவில் வெளியே வந்தால் தொலைவில் தெரியும் வெளிச்சம் பறக்கும் தட்டாகத் தோற்றமளிப்பது போன்ற பிரமை ஏற்படக்கூடும். நன்றி: குமுதம், […]

Read more

மதுரைக் கதைகள்

மதுரைக் கதைகள், நர்சிம், மெட்ரோ புக்ஸ், விலை 200ரூ. தூங்கா நகரான மதுரை மண்ணிண் மணம் கமழ எழுதப்பட்டிருக்கும் இருபத்தைந்து கதைகள். ஜல்லிக்கட்டு காளை விடுவதில் தொடங்கும். முதல் கதையில் இருந்து கடைசி கதைவரை ஒரே துள்ளலும், ஓட்டமும், தாவலுமாகவே நகர்கிறது. ஒவ்வொரு கதையும் ஜனனம் தொடங்கி மரணம் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு கோணத்தைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. படித்து முடித்ததும் மனசு கொஞ்சம் கனமாவது நிச்சயம். நன்றி: குமுதம், 2/8/2017

Read more

ஒளிந்திருப்பது ஒன்றல்ல

ஒளிந்திருப்பது ஒன்றல்ல, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 150ரூ. இன்றைய அவசர உலகில் உடலும் மனமும் நலமாக இருக்க, விழிப்பு உணர்வுடன் வாழ எளிய முறையில் உங்கள் மனநிலைக்குப் பொருத்தமான தியானத்தை விளையாட்டாகவே தேர்வு செய்வது எப்படி? சூட்சுமத்தை சொல்லித் தந்திருக்கிறார் ஓஷோ. தியானத்தைக் கைக்கொள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு யுக்தி. அதைத் தெரிந்து கொள்ள வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம், 2/8/2017

Read more

அங்குசம் காணா யானை

அங்குசம் காணா யானை,பிச்சினிக்காடு இளங்கோ, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 180ரூ. நேயத்தைத் தேடி அலைகின்ற வாழ்வில், மாயத்தைப் பார்த்தே மயங்கியிருக்கிறது மானுடம். இயற்கையோ எங்கும் நேசத்தை நெசவுசெய்து வைத்திருக்கிறது. அது நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது என்பதை கவிமணத்துடன் சொல்லியிருக்கிறார். நெடுங்கவிதையும் உண்டு. குறுங்கவிதையான ஹைக்கூவும் இருக்கிறது. நன்றி: குமுதம், 26/7/2017

Read more

வாய்ப்பின் வாசலிலே வெற்றி

வாய்ப்பின் வாசலிலே வெற்றி, ப.குணசேகரன், பண்புப் பதிப்பகம், விலை 150ரூ. ஒரு நாளைக்கு இருபத்துநான்கு மணிநேரம் என்பது எல்லோருக்குமே சரிசமமாகத் தரப்பட்டிருக்கும் நேரம். அதை எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதே நம் வாசல் தேடி வெற்றியை வரவழைக்கிறது. புகழ்பெற்ற வெற்றியாளர்கள் பலர் சாதிப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளை உதாரணம் காட்டி வெற்றிக்கு அஸ்திவாரம் போடச் சொல்லித் தருகிறார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 2/8/2017

Read more

கரன்சிகாலனி

கரன்சிகாலனி, ந. இளங்கோவன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 70ரூ. எந்தத் தொழிலிலும் வெற்றி பெறுவதற்கு அறிவு அவசியமா? புத்திசாலித்தனமா? என்றால் அறிவை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதில்தான் வெற்றி இருக்கிறது என்பார்கள். அறிவை புத்திசாலித்தனமாக எப்படி பயன்படுத்திக் கொள்வது, அதன் மூலம் எப்படி வெற்றி பெறுவது என்பதற்கான வழிமுறைகள் அனுபவரீதியாக கதைபோல் சொல்லப்பட்டிருக்கின்றன. நன்றி: குமுதம், 26/7/2017

Read more
1 12 13 14 15 16 57