மௌனத்தின் மொழிபெயர்ப்பாளன்

மௌனத்தின் மொழிபெயர்ப்பாளன், ஜெயசிவா, நந்தவனம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. மனித வாழ்வின் யதார்த்தத்தையும் சமூகத்தின்மேல் உள்ள கோபத்தையும் நமக்கு மொழிபெயர்த்துத் தந்து மனதின் ஆழத்தில் பதித்துவிட்டுச் செல்கிறார் கவிஞர் ஜெயசிவா. தவிக்கிறது தமிழ்க் குழந்தை தாய்பாலுக்காக ஆங்கிலப்பள்ளிகளில் -கவிஞரின் தவிப்பு நம்மையும் தவிக்க வைக்கிறது. நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள்

புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள், எஸ். தமயந்தி, சுவாமிமலை பதிப்பகம், பக். 176, விலை 60ரூ. நீதியை கதைகள் வாயிலாகக் கூறி, இளம் உள்ளங்களை ஒழுக்க நெறிக்கு இட்டுச் செல்வதால் பஞ்ச தந்திரக் கதைகள் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகின்றன. கதைகளை விலங்குகள் மூலம் சொல்லுவதால் சொல்ல வந்த கருத்துக்கள் இன்னும் ஆழமாகப் பதிகிறது. மாணவர்கள் எளிதில் படித்துப் புரிந்துகொள்ளும் எளிய இனிய நடையில் நூல் அமைந்திருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

மனசெல்லாம்

மனசெல்லாம், கா.ந.கல்யாணசுந்தரம், வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. கொக்கும் தூண்டிலும் அருகருகே தடுமாறும் மீன்கள் – என்ற ஹைக்கூ கவிதையில் உள்ள சிந்தனை ஒன்றுபோதும், சமூகத்தின் அதிகார வர்க்கத்தின் நிலையையும் அப்பாவி மக்களின் தடுமாறும் நிலையையும் எடுத்துக்காட்டு. அன்பு, சமூகம், உலகம், ஆன்மீகம், அறிவியல் என்று பலதரப்பட்ட சிந்தனைகளின் வெளிப்பாடு இக்கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 22/3/2017.

Read more

சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன

சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன, த. இராமலிங்கம், கண்ணதாசன் பதிப்பகம், பக். 180, விலை 130ரூ. வாழ்க்கையை ஆடம்பரத்தாலும் இலவசங்களாலும் தொலைத்துவிட்ட பலருக்கு, அவர்களின் வாழ்வை முன்னேற்றும் விதமாக மனிதர்களின் சிந்தனைகளைச் செதுக்கித் தரும் நூல். படிப்பவர்களின் வாழ்வு முன்னேற்றம் காணும் என்பது உறுதி. நன்றி: குமுதம், 22/3/2017.

Read more

மாண்புமிகு வள்ளுவம்

மாண்புமிகு வள்ளுவம், க. அன்பழகன், கே.ஜி.பப்ளிகேஷன்ஸ், பக். 101, விலை 90ரூ. உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஒன்பது வகையான பொருண்மைகளில் ஆராய்ந்து, விளக்கம் தரும் நூல். திரும்பத் திரும்ப வாசித்தால் புதுப்புது பொருள் தரும் தன்மை கொண்ட திருக்குறளுக்கு, நூலாசிரியரின் விளக்கங்கள் மேலும் ஒரு புது விளக்கத்தைத் தருகிறது. உரையாசிரியர்களின் நோக்கில் நின்று குடும்ப உறவுகள் குறித்த விளக்கம் சிறப்பு. நன்றி: குமுதம், 22/3/2017.

Read more

ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள்

ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள், குன்றில் குமார், குறிஞ்சி, பக். 176, விலை 150ரூ. அமேசான் காட்டிற்குள் போகாதவர்கள், போக முடியாதவர்கள் இந்நூலைப் படித்தால் அதன் தன்மையை ஓரளவிற்கேனும் உணர முடியும். விசித்திரமான விலங்குகள், ஆறுகள், பாம்புகள், பழங்குடிகள் என்று நம் கண்முன்காட்டி, காட்டைப் பற்றிய ஒரு ஆய்வையும் மேற்கொண்டுள்ளார் நூலாசிரியர். கையை வைத்தால் சிலிர்ப்பூட்டும் ஆறும் இங்குண்டு, நொடியில் கையைப் பொசுக்கிவிடும் கொதிக்கும் ஆறுகளும் இங்குண்டு என்பது ஆச்சரியத் தகவல். நன்றி: குமுதம், 22/3/2017.

Read more

எண்ணும் எழுத்தும்

எண்ணும் எழுத்தும், பிருந்தா சாரதி, படி வெளியீடு, பக். 88, விலை 70ரூ. எண்களுக்குள் நுழைந்து வாழ்க்கையைத் தேடும் உத்தி. ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரித்தும் இன்னொன்றைச் சேர்த்தும் காணும் வாழ்வியல் தத்துவம் இக்கவிதைகளுக்குள் உட்புகுந்து பயணிக்கின்றன. ஒரே சிகரத்தில் இருந்து உருண்டு வந்து இரண்டான கூழாங்கற்களின் சந்திப்பும், எரிந்து கொண்டு இருக்கும் இரண்டு ஊதுவத்திகளின் புகை ஒன்றாய்க் கலப்பதும், வெற்றிடத்தில் ஒன்றைத் தேடுவதும் என வாழ்வின் பல கோணங்கள் ஆராயப்படம் களமாக இக்கவிதைகள் அலசப்படுகின்றன. நன்றி: குமுதம், 22/3/2017.

Read more

வருடம் முழுவதும் வசந்தம்

வருடம் முழுவதும் வசந்தம், ச. உமாதேவி, நந்தினி பதிப்பகம், பக். 254, விலை 200ரூ. இன்றைய இளைய சமுதாயம் ஆற்றல் மிக்க சமுதாயமாக விளங்குகிறது. அவர்களுக்கு நம் நாட்டில் தோன்றி நம் நாட்டு மக்களுக்காக பாடுபட்ட தியாகிகள் பலரின் வரலாற்றை சாதனையை தெரிந்து கொண்டால் இன்னும் உற்சாகமாக செயல்படுவார்கள். அந்த வரிசையில் நம் தலைவர்கள் சிலரின் வீரத்தியாகம் பற்றிய ஒரு வரலாற்றுத் தொகுப்பாக இந்நூலை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 19/4/2017.

Read more

கண்ணோட்டம்

கண்ணோட்டம், கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 160, விலை 120ரூ. பத்திரிகைகளில் வரும் மிக அரிதான செய்திகளையும், நம்மை கடந்துபோகும் வரலாற்று நிகழ்வுகளையும் ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதுவது ஜீவபாரதியின் தனித்தன்மை. அக்கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். வந்தே மாதரம் வந்த கதை, வேலுநாச்சியார் பற்றிய கட்டுரை, கோதையம்மாளுக்கு தியாகி பென்சன் கிடைக்க காரணமாக இருந்த கட்டுரை என்று அத்தனையும் பல்நோக்கு கொண்டு பயனளிப்பதாக உள்ளன. நன்றி: குமுதம், 19/4/2017.

Read more

தமிழ்க் கிறிஸ்துவம்

தமிழ்க் கிறிஸ்துவம், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 152, விலை 150ரூ. சைவம், வைணவம், சமணம், புத்தம், இஸ்லாம் ஆகிய சமயங்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்புபோல், கிருஸ்துவமும் தமிழ்ப்பணியாற்றி சிறப்பித்துள்ளதை வெளிக்காட்டும் நூல். தமிழில் முதன்முதலாக அச்சு நூல்களை வெளியிட்டது போன்ற தமிழ்ப்பணி இந்நூலில் உள்ளது. தமிழுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த தமிழறிஞர்கள், தமிழ்த் தொண்டர்கள் பற்றியும் இந்நூல் எடுத்துரைக்கிறது. கிருஸ்துவத்தின் தமிழ்ப்பணி வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதை நிறுவும் நூல். நன்றி: குமுதம், 19/4/2017.

Read more
1 16 17 18 19 20 57