அருகர்களின் பாதை
அருகர்களின் பாதை, ஜெயமோகன், கிழக்குப் பதிப்பகம், பக். 272, விலை 250ரூ. இந்தியாவின் மறக்கப்பட்ட சமணத் தலங்களை தேடிச் செல்லும் ஒரு பயணம் இது. ஜெயமோகன் தனது நண்பர்கள் ஆறுபேருடன் ஈரோடு முதல் ராஜஸ்தான் வரை ஆறு மாநிலங்கள் வழியாக இதற்காகப் பயணப்பட்டிருக்கிறார். அறநிலைகளை சமணர்கள், இந்தியாவில்அமைத்திருந்தனர். அந்த சங்கிலி இன்றும் அறுபடாமல் அப்படியே இருப்பதை ஜெயமோகன் இப்பயணத்தின் வழி கண்டறிந்துள்ளார். பயணத்தின்போது தினமும் அவர் இணைய தளத்தில் எழுதியதன் தொகுப்பு இந்நூல். நன்றி: குமுதம், 29/3/2017.
Read more