வளர்பிறைகளும் தேய்பிறைகளும்

வளர்பிறைகளும் தேய்பிறைகளும், கழனியூரன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 100ரூ. சிலரது வாழ்க்கை வளர்பிறை போல வளரும். சிலரது வாழ்க்கை தேய்பிறைபோல தேயும். இதற்கு என்ன காரணம் என்பதை இஸ்லாமியப் பின்னணியில் விளக்கும் சமூக நாவல். நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியாகிய பனையடியூரில் இஸ்லாம் எவ்வாறு வேரூன்றி செழித்து வளர்ந்தது என்பதை இப்பகுதி மக்களின் கலாச்சார பண்பாட்டு நோக்கில் பதிவு செய்யப்பட்ட நாவல் இது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/1/2017.

Read more

தோல்வியை ருசியுங்கள் வெற்றியை ரசியுங்கள்

தோல்வியை ருசியுங்கள் வெற்றியை ரசியுங்கள், ‘ஆச்சி’ ஏ.டி. பத்மசிங் ஐசக், கண்ணதாசன் பதிப்பகம், பக்.320, சலுகை விலை 100ரூ. தொழில் மேதை ‘ஆச்சி’ ஏ.டி. பத்மசிங் ஐசக் தோல்விகளை எதிர்த்துப் போராடி தான் கண்ட வெற்றிகளை தன் வாழ்க்கை வரலாறு எழுதுவதுபோல, வருங்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இந்நூலைப் படைத்துள்ளார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் தன் அனுபவங்களை வெற்றிக்கான சூத்திரமாகத் தந்துள்ளார். தான் பிறந்து வளர்ந்த சூழல் பள்ளிப்படிப்பு, கல்லூரிக்குப்பின் பார்த்த வேலை, மாதச் சம்பளத்தை உதறிவிட்டு, புதிய தொழில் தொடங்கியது. அவரது மனைவியின் ஒத்துழைப்பு, குடும்பத்தார் […]

Read more

ஆப்ரகாம் லிங்கன்

ஆப்ரகாம் லிங்கன், டாக்டர் மா. இராசமாணிக்கனார், முல்லை பதிப்பகம், பக்.80, விலை 35ரூ. ஆப்ரகாம் லிங்கன் ஏழைக்குடும்பம் ஒன்றில் பிறந்தது முதல் அவர் அரசியலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருமுறை பதவி வகித்தது வரை சுருக்கமாக பேசும் நூல். அவரது குணநலம், பண்பாடு, சொற்பொழிவுகள், அவரது படைப்புகள் ஆகியவற்றை மாணவர் உலகம் பயனுறும் வகையில் சிறுநூலாகத் தந்துள்ளார் மூதறிஞர் இராசமாணிக்கனார். நன்றி: குமுதம், 21/12/2016.

Read more

பிணத்தோடு ஒரு பயணம்

பிணத்தோடு ஒரு பயணம், லயன் காமிக்ஸ், விலை 200ரூ. சித்திரக்கதை வரிசையில் மற்றும் ஒரு புது வரவு. பிணத்தைப் புதைப்பதை தொழிலாகச் செய்பவனுக்கும் பணத்துக்காக பிணத்தையும் சுமந்து செல்லச் சொல்லும் ரவுடிகளுக்கும் இடையே நடக்கும் ஒப்பந்தம், வழியில் நடக்கும் போராட்டம், முடிவில் சற்றும் எதிர்பாராத திருப்பம். சுவாரசியமாகப் படிக்கும்போது காது பக்கத்தில் தோட்டாக்கள் உரசிச் செல்வதுபோல் உணர முடிகிறது. காமிக்ஸ் பிரியர்கள் கொண்டாட இன்னும் ஒரு பொக்கிஷம். நன்றி: குமுதம், 12/7/2017.

Read more

கடற்கரை காவியம்

கடற்கரை காவியம், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 15, விலை 150ரூ. கடலோரக் காவியம் தமிழ் திரையுலகில் நிலவும் சிக்கல்களையும் அன்னை வேளாங்கன்னி மாதாவின் அருளையும் புதுமைகளையும் சித்திரித்து, சினிமா கலைஞர்களின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை, காதல் பிரச்னைகளை அன்னை அருளால் தீர்த்துவைத்து வெற்றியடையச் செய்வதை சித்திரிக்கும் நாவல் இது. நன்றி: குமுதம், 21/12/2016.   —-   எட்டுத் திக்கும் எங்கள் பாட்டு, தொகுப்பாசிரியர் மயிலாடுதுறை இளைய பாரதி, நம்மொழி பதிப்பகம், பக். 152, விலை 200ரூ. பல்வேறு கலைஞர்களின் கவிதைகள் ஒரு […]

Read more

வெற்றிப்படிக்கட்டு(பாகம் 3)

வெற்றிப்படிக்கட்டு(பாகம் 3), வசந்தகுமார், வசந்த்&கோ வெளியீடு, பக். 241, விலை 99ரூ. மனித வாழ்க்கையில் நிறைய போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் போராடினால்தான் வாழ்க்கை. அந்த போராட்டப் பயணத்தில் அவர்கள் வெற்றிபெற வழிகாட்டுவதுதான் ‘வெற்றிப்படிக்கட்டு’ என்ற இந்நூலின் மையக்கரு. அதற்குத் தேவைப்படும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, புத்திசாலித்தனம், சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துப்போய் செயல்பாடுகளில் சிறப்படைதல் இவையெல்லாம் வெற்றிக்கான வழிகாட்டல்கள் என்கிறார் வசந்தகுமார். அதை உணர்த்த கருத்தாழமிக்க கதைகள், உண்மைச் சம்பவங்கள், வரலாற்று நிகழ்வுகள், அறிவியல் கருத்துகள் ஆகியவற்றின் மூலம் வெற்றிப்படிக்கட்டுகளை உருவாக்கி, நம்மை தொலை […]

Read more

பட்டாம்பூச்சி விளைவு

பட்டாம்பூச்சி விளைவு, பேரா.க. மணி, அபயம் பதிப்பகம், பக். 177, விலை 120ரூ. அறிவியல் புனைகதைகள் தமிழில் குறிப்பிட்டு வராதது பெரும் குறையே. சுஜாதாவிற்குப் பின் பலர் முயற்சித்தும், இன்னும் முழு மூச்சுடன் இயக்க முன்வரவில்லை. பேரா.க.மணியன் இத்தொகுப்பு மூலம் ‘சயன்ஸ் ஃபிக் ஷன்’ என்ற தன்மையோடு வந்திருப்பது மகிழ்ச்சி. மாயத் தோற்றங்களைப் படைக்கலமாகக் கொண்ட அயல் உயிரிகள், மகிழ்ச்சி எந்திரம் கண்டுபிடித்தவன், வெர்ச்சுவல் ரியாலிட்டியில் சிக்கிய சிறுவர்கள் என்று பல கதைக்கூறுகள் படிக்கப் படிக்க சுவாரஸ்யம். நன்றி: குமுதம், 28/12/2016.

Read more

சிவனின் உடுக்கை

சிவனின் உடுக்கை, சந்திரசேகர கம்பாரா, தமிழில் இறையடியான், காவ்யா, பக். 324, விலை 300ரூ. கன்னட எழுத்தாளரான சந்திரசேகர கம்பாரா எழுதிய கிராம மாறுதல்களைப் பதிவு செய்யும் நாவல் இது. கிராமத்தில் இயல்பை புராணம் சார்ந்த நாட்டுப்புறக் கதையின் அழகியலோடு சொல்லியிருக்கிறார். பண்ணையார்களின் பகட்டு ஆரவாரத்தால் பண்ணையில் வேலை செய்பவர்கள் சிந்தும் கண்ணீர் வயல் வரப்புகளிலும் வாய்க்கால்களிலும் எப்படி தண்ணீராக ஓடுகிறது என்பதை ‘சிவனின் உடுக்கை’ வழி பதிவாகிறது. நன்றி: குமுதம், 28/12/2016.

Read more

எனது அமெரிக்கப் பயணம்

எனது அமெரிக்கப் பயணம், பேரா. கே. ஜெகதீசன், விஜயா பதிப்பகம், பக். 152, விலை 80ரூ. அமெரிக்கா போய் வருவது இன்று பெரிய விஷயமே இல்லை. ஆனால் அந்த அனுபவங்களை சுவைபடச் சொல்லி, படிப்போரை சொல்லப்படும் இடத்திற்கே அழைத்துச் சென்று அனுபவிக்க வைக்கும் கலை சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அது பேரா. கே.ஜெ.வுக்கு கைகூடியிருக்கிறது. அமெரிக்கா செல்லாதவர்களுக்கு வியப்பு. அமெரிக்கா சென்றவர்களுக்கு புது அனுபவம். நன்றி: குமுதம், 28/12/2016.   —-   அகிலமே என் அப்பாதான், மணிமேகலைப் பிரசுரம், விலை 80ரூ. இன்றைய […]

Read more

பின்னலில் அவிழ்ந்த முடிச்சுகள்

பின்னலில் அவிழ்ந்த முடிச்சுகள், சுபி. முருகன், வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 65ரூ. கவிஞர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள், சந்திப்புகள், ஒன்றையொன்று பின்னி கவிதை வரிகளாக உருவெடுத்து கவிதைத் தொகுப்பாக மலர்ந்துள்ளது. ‘எனக்குள்ளே பின்னிக் கொண்டிருந்த முடிச்சுகளை அவிழ்க்கையில், என்னையே பின்னிக் கொண்டன… கனவு முடிச்சுகள்! இப்படிப் பல கவிதை. நன்றி: குமுதம், 28/12/2016.   —-   பாரதியார் பெருமை, முல்லை பதிப்பகம், விலை 60ரூ. பாரதியாரின் வாழ்க்கை வரலாறும், பாரதியார் பற்றி பல பிரமுகர்கள் எழுதிய கட்டுரைகளும் கொண்ட அரிய […]

Read more
1 20 21 22 23 24 57