திருக்குறளில் உயிர்ச்சூழல்

திருக்குறளில் உயிர்ச்சூழல், க.சி. அகமுடைநம்பி, மீனாட்சி புத்தக நிலையம், பக். 217, விலை 160ரூ. அற நூலாகிய திருக்குறளில் ‘உயிர்ச்சூழல்’ பற்றிய சிந்தனைகள் நிறைந்திருப்பதை வெளியில் கொண்டு வந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். திருக்குறள் ஆய்வுலகில் இது புதிய முயற்சியும்கூட. அனைத்து உயிர்களும் தத்தம் சூழல்கள் கெடாமல் அல்லது கெடுக்கப்படாமல், இயல்பான முறையில் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்ற சூழலையே ‘உயிர்ச்சூழல்’ என்று வரையறுக்கிறார் பதிப்பாசிரியர். புதிய ஆய்வுக் களத்தை திறந்து வைத்திருக்கும் நூல். நன்றி: குமுதம், 28/12/2016.

Read more

தண்ணீர் அஞ்சலி

தண்ணீர் அஞ்சலி, காகிதம் பதிப்பகம், பக், 64, விலை 50ரூ. ‘குழந்தையின் கண்ணில் தூசி உறுத்தியது அம்மாவுக்கு’ -இப்படி நிறைய ஹைக்கூ கவிதைகள் நூல் முழுக்க உள்ளன. தாய்மை உணர்வை ஹைக்கூவில் நமக்கு உணர்த்திய கவிஞர், உலக நடப்புகள் அனைத்தையும் தம் ஹைக்கூ கவிதை வழியே நமக்கு காட்சிப்படுத்திவிடுகிறார். இப்படி இன்னும் நிறைய சொல்லலாம். சொல்வளம் மிக்க கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

நல்ல தமிழில் எழுதுவோம்

நல்ல தமிழில் எழுதுவோம், என். சொக்கன், கிழக்கு பதிப்பகம், பக். 256, விலை 200ரூ. இலக்கணம் என்றாலே காத தூரம் ஓடும் நமக்கு சொக்கனின் இந்நூலைப் படித்தால் அடிப்படையான இலக்கணத்தை அறிந்து கொண்ட உணர்வைத் தருகிறது. நன்னூல், தொல்காப்பியம், இலக்கிய உதாரணங்களை மட்டும் சொன்னால் வறட்சியாக இருக்கும் என்று திரைப்பாடல்களையும், பட்டிமன்ற நகைச்சுவையையும் உதாரணமாகக் காட்டுவது படிப்போரை எளிதில் விளங்க வைக்கும் உத்தி. புதிய தலைமுறையை நல்ல தமிழில் எழுத வைக்கும் முயற்சி இது. நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

நோய்களின் தாக்கமும் தடுப்பு முறைகளும்

நோய்களின் தாக்கமும் தடுப்பு முறைகளும், டாக்டர் பெ. போத்தி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128,விலை 60ரூ. மனிதனுக்க வரக்கூடிய மாரடைப்பு, மூளை அடைப்பு, நீரிழிவு, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்களை உணவு, உடற்பயிற்சி, பழக்கவழக்கங்கள் மூலம் எவ்வாறு நோய்வரும் முன் தடுக்க முடியும் என்பதை எடுத்துக்கூறுகிறார் நூலாசிரியர். நோய்த் தடுப்புக்கான வழிகாட்டி நூல் இது. நன்றி: குமுதம், 4/1/2017.   —-   உள்ளம் உலகம், சேகர் பதிப்பகம், விலை 125ரூ. “உருவகக் கடல் கவியரசு” என்று புகழ் பெற்ற […]

Read more

பாரதியார் பெருமை

பாரதியார் பெருமை, முல்லை பி.எல். முத்தையா, முல்லை பதிப்பகம், பக். 143, விலை 60ரூ. பாதியாரின் நண்பரான பரலி சு. நெல்லையப்பர் தொடங்கி, திரு.வி.க., டி.கே.சி., ராஜாஜி, கவிமணி, ரா.பி. சேதுப்பிள்ளை, அண்ணா, கல்கி, மு.வ.., வையாபுரிப்பிள்ளை, ம.பா.சி., ஜீவா, கி.வா.ஜ., புதுமைப்பித்தன், குன்றக்குடி அடிகளார், ரா. கனலிங்கம், திருலோக சீதாராம், முல்லை முத்தையா என்று பல அறிஞர் பெருமக்கள் அவ்வவ் காலங்களில் பாரதி பற்றி புலப்படுத்திய கருத்துக்களைத் தொகுத்து பாரதியாருக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். பாரதியார் பற்றிய கருத்துப் பெட்டகமான இந்நூல் பாரதியின் நூற்றாண்டு […]

Read more

ரகுநாதம் கட்டுரை கவிதை நாடகம்

ரகுநாதம் கட்டுரை கவிதை நாடகம், பேரா. சண்முக சுந்தரம், காவ்யா, பக். 1120, விலை 1100ரூ. படைப்பாற்றலும் விமர்சனக் கூர்மையும் ஒருங்கே பெற்றவர் தொ.மு.சி. ரகுநாதன். முதுபெரும் எழுத்தாளரான தொ.மு.சி. பொதுவுடமைக் கருத்துக்களை எந்த சமரசமும் செய்யாமல் விதைத்த புரட்சியாளர். புதுமைப்பித்தனை இனம் கண்டவர். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என பரந்துபட்ட இலக்கிய ஆளுமையாக ஆட்சி செய்தவர். அந்த வகையில் அவரது 100 கட்டுரைகள், 2 நாடகங்கள், 56க்கும் மேற்பட்ட கவிதைகளை உள்ளடக்கிய பொக்கிஷமாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

நல்லவை நாற்பது

நல்லவை நாற்பது, இரா. மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 330, விலை 200ரூ. வள்ளலார், விவேகானந்தர், பரமஹம்சர், ரமண மாமுனி என்று ஆற்றல்சால், அருளாளர்கள் பற்றிய சுவையான கட்டுரைகள், ரசிகமணி டிகேசி, தொ.பொ.மீ. உள்ளிட்ட தமிழ்ச்சான்றோர்கள் தமிழ்ப் புலமை, பாரதியார், பாரதிதாசன், நாமக்கல்லார், சுரதா என்று பாரதி பாசறை, பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், என்.எஸ்.கே., நாகேஷ் என திரைவித்தகர்களை வியந்தோதும் பாங்கு என்று நாற்பது நல்லவைகளை இந்நூலில் புகுத்தித் தந்துள்ளார்கள் பேராசிரியர்கள். நன்றி: குமுதம், 16/11/2016.

Read more

மனம் ஒரு மகாத்மா

மனம் ஒரு மகாத்மா, முனைவர் பா. மஞ்சுளா, விஜயா பதிப்பகம், பக். 104, விலை 70ரூ. வள்ளலார் மீதான ஈடுபாடு நூலில் நிரூபணமாகியுள்ளது. பெற்றோர் போற்றுதல், தெய்வத் துணை, சான்றோரை மதித்தல், துணையை நேசித்தல், மரங்களைக் காத்தல், நட்பு போற்றுதல், நல்லோர் சேர்க்கை, தானம் கொடுத்தல், நல்லோர் மனத்தை நலம் பெறச் செய்தல் என்று வள்ளலார் வழி நின்று விளக்கியுள்ளது பயன்தரத்தக்கது. நன்றி: குமுதம், 16/11/2016.

Read more

முதல் வரிசை மூன்றவாது இருக்கை

முதல் வரிசை மூன்றவாது இருக்கை, படுதலம் சுகுமாரன், ஆரம் வெளியீடு, பக். 208, விலை 160ரூ. பல்வேறு இதழ்களில் வந்த சிறுகதைகளின் தொகுப்பு. ‘சுருக்’ கமாக ஒரு விஷயத்தைச் சொல்லி அதனைப்பற்றி அசைபோட வைப்பதில் தேர்ந்தவர் படுதலம் சுகுமாரன். இத்தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளும் அந்த ரகத்தைச் சேர்ந்ததே. அப்படிப்போடு அருவாளில் வரும் புவனாவாகட்டும், முதல் வரிசை மூன்றாவது இருக்கையில் வரும் ஜானகியா கட்டும் அன்றாட வாழ்வின் எதார்த்த பெண்களின் பிரதிபலிப்புகள். பெரும்பாலும் பெண்மையை, அவர்களின் ஆழ் மனதை எடை போடும் கதைகளே அதிகம். […]

Read more

திருக்குர்ஆன் தமிழாக்கம்

திருக்குர்ஆன் தமிழாக்கம், குட்வேர்ட் புக்ஸ், பக். 774. ஆன்மிகம் மற்றும் அறிவுப் பூர்வமான தளங்களில் உண்மையை மனிதன் கண்டடைய வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கூறும் புனித நூல் குர்ஆன். அதோடு மனித குலத்திற்கான நற்செய்தியைக் கொண்டுள்ள நூலாக குர்ஆன் விளங்குவதை எளிமையாக எடுத்துக்காட்டுகிறார்கள். இறைவனைப் பற்றிய ஞானத்தை அடைதல், இறைவனின் நெருக்கத்தைப் பெறுதல், சாந்தி மற்றும் ஆன்மிக ரீதியிலான வாழ்க்கையை வாழ்தல் என்று குர்ஆனின் முக்கிய நோக்கங்களை புரிந்துகொள்ளும் விதமாக இதன் மொழிபெயர்ப்பும் விளக்க அடிக்குறிப்புகளும் தந்திருப்பது பயனுள்ளதாக உள்ளது. நன்றி: குமுதம், 16/11/2016.

Read more
1 21 22 23 24 25 57