புத்தர் கொள்கைகளும் பெரியார் இயக்கமும்

புத்தர் கொள்கைகளும் பெரியார் இயக்கமும், க. திருநாவுக்கரசு, தளபதி பதிப்பகம், பக். 80, விலை 60ரூ. 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புத்தர் கொள்கைகள் பற்றியும் 2500 ஆண்டுகளுக்குப் பின் வாழ்ந்த பெரியார் உருவாக்கிய இயக்கத்தின் கொள்கைகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பாய்வுரையின் நூல் வடிவம் இது. புத்தரும் பெரியாரும் மக்களை அறிவார்ந்த வாழ்க்கையை வாழும்படி பரப்புரை செய்ததை ஒப்பிட்டுள்ளது சிறப்பு. நன்றி: குமுதம், 29/9/2016.

Read more

இளம் குற்றவாளிகள் உருவாவது ஏன்?

இளம் குற்றவாளிகள் உருவாவது ஏன்?. முளங்குழி பா. இலாசர், முதற்சங்கு பதிப்பகம், பக். 160, விலை 120ரூ. திரைப்படத் தாக்கம், போதைப் பழக்கம், காதல் மயக்கம், அரசியல் அவலம், பெற்றோர் சுயநலம், ஆசிரியர்கள் செய்யும் தவறு ஆகியவையே இளம் குற்றவாளிகளை உருவாக்கும் காரணிகள் என்பதை தக்க ஆதாரத்துடன் அனுபவ ரீதியாக தரும் நூல். இளம் குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கும்முறை பலருக்கும் பலன் தரும். நன்றி: குமுதம், 10/8/2016.

Read more

ஊமை அலைகள்

ஊமை அலைகள், ரா.பிரடிசன், காவ்யா, பக். 108, விலை 100ரூ. தமிழக மீனவ மக்களின் வாழ்வியல் யதார்த்தங்கள், இலங்கை கடற்படையால் மீனவர்கள் படும் உயிர் வேதனை, இயற்கைச் சீற்றத்தால் அம்மக்கள் சந்திக்கும் இன்னல்கள் இவைகளே ‘ஊமை அலைகள்’ கவிதைத் தொகுப்பின் பாடுபொருள்களாக நம்மை கவனிக்க வைக்கின்றன. நன்றி: குமுதம், 10/8/2016.

Read more

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம்

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம், அரங்க பரமேஸ்வரி, வையவி பதிப்பகம், பக். 192, விலை 120ரூ. அரசியலிலும் நேர்மையை நிலைநாட்ட முடியும் என்று வாழ்ந்து காட்டிய பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கையை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதோடு, தாமும் அம்மாமனிதர்போல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற தூண்டுதல் உணர்வை ஏற்படுத்தும் நூல். நன்றி: குமுதம், 10/8/2016.

Read more

தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு

தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு, ரவி வைத்தீஸ்வரன், ரா. ஸ்தனிஸ்லாஸ், மேன்மை வெளியீடு, பக். 336, விலை 250ரூ, தற்கால சமய, பண்பாட்டு, அரசியலை விளங்கிக் கொள்ளும் நோக்குடன், அண்மைக் காலத்தில் கோட்பாடு ரீதியாக எழுச்சி பெற்ற பின் அமைப்பியல், பின் காலனித்துவம், விளிம்பு நிலை மக்கள் ஆய்வு முறை, பின் காலனிய மதச் சார்பின்மை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. இந்தியா, இலங்கை, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிவு ஜீவிகளின் விவாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. நன்றி: குமுதம், 10/8/2016.

Read more

நிழலின் வாக்குமூலம்

நிழலின் வாக்குமூலம், பொன்.வாசுதேவன், அகநாழிகை பதிப்பகம், பக். 96, விலை 90ரூ. கவிதைகள் ஒவ்வொன்றும் கவிதைக்கான ஆழத்தைத் தேடிப் பயணிக்கிறது. இடையிடையே வாழ்க்கைக்கான ஆதாரங்களைக் கண்ட பெருமிதங்களையும் தொட்டுச் செல்கிறது. சில சமயம் கவிஞருக்கு அது ஒரு ஞாபக மீட்டலாக மீண்டு வந்து காட்சிப்படுத்துகிறது. அதுவே வாசிப்பினரின் அடையாளத் தேடலாகவும் கடந்து போகிறது. ஒன்றமில்லாததில் எல்லாம் இருந்தது போன்ற வரிகளில் அனுபூதியியலை நோக்கிய பயணம் தெரிகிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 12/10/2016.

Read more

உழைப்போம் உயர்வோம்

உழைப்போம் உயர்வோம், மெர்வின், குமரன் பதிப்பகம், பக். 208, விலை 80ரூ. உழைப்பின் மேன்மையைச் சொல்லி, அதற்கு பல உதாரணங்கள் தந்ததுடன் அதன் வரலாற்று உண்மைகளை நெஞ்சில் பதியச் செய்துள்ளார் மெர்வின். நாமும் நாடும் முன்னேற்றம் காண உதவும் நூல். நன்றி: குமுதம், 12/10/2016.   —– குட்டீஸ் கிச்சன், ஜெயஸ்ரீ சுரேஷ், விகடன் பிரசுரம், விலை 140ரூ. சின்னக் குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவு வகைகளை தயாரிப்பது பற்றி இந்த நூல் விவரிக்கிறது. பெரியவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகைகள். எனவே அனைவருக்கும் பயன்படக்கூடிய […]

Read more

வட்டியை ஒழிப்போம்

வட்டியை ஒழிப்போம், டாக்டர் எம். உமர்சாப்ரா, இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், பக். 60, விலை 40ரூ. வட்டி என்பது நீதிக்கும் மானுட உணர்வுக்கும் எதிரானது. வாழ்வின் நிம்மதியை அழிக்கக்கூடியது. எனவே வட்டியை ஒழிப்பதற்கான மாற்று ஏற்பாடாக லாப, நஷ்டத்தில் பங்கு வகிக்கும் வட்டியில்லா வங்கி முறை பற்றி சுருக்கமாக அதேசமயம் நிறைவாக விளக்கும் நூல். நன்றி: குமுதம், 12/10/2016.   —-   காக்க காக்க உடல் நலம் காக்க, வானதி பதிப்பகம், விலை 100ரூ. காய்ச்சல் முதல் இருதய செயலிழப்பு வரை பலவித […]

Read more

நம்மிடையே உலவும் ஆவிகள்

நம்மிடையே உலவும் ஆவிகள், விக்ரவாண்டி வி. ரவிச்சந்திரன், மேகதூதன் பதிப்பகம், பக். 304, விலை 250ரூ. உலகப் புகழ்பெற்ற ஜேம்ஸ் வான் பிராக் என்ற ஆவியுலக ஆராய்ச்சியாளரின் அனுபவங்களைச் சொல்லும் இடங்கள் பிரமிப்பு. அவரைப்போலவே பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆவியுலக ஆராய்ச்சியாளர்களையும் அவர்களது அனுபவங்களையும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர். அந்த வகையில் ஆவியுலகத்துறையில் ஆர்வமுள்ள தமிழ் வாசகர்களை உலக அளவில் அழைத்துச் செல்லும் முயற்சி இது. படிக்கப்படிக்க சுவாரஸ்யம். நன்றி: குமுதம், 14/9/2016.

Read more

ஜான்சிராணி

ஜான்சிராணி, கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சுவாமிமலை பதிப்பகம், பக். 96, விலை 40ரூ. ஜான்சிராணி லட்சுமிபாய் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அரச குடும்பத்தைச் சேர்ந்தவராகி, பிரிட்டிஷ் பேரரசை ஆட்டம் காணவைத்த வீரமங்கை. இந்திய புரட்சி இயக்கம் கொண்ட வீரர்களிலேயே துணிச்சல் மிக்க, அச்சமற்ற, மிகச்சிறந்த தலைவியாக விளங்குவதை பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டு நூலாசிரியர் விளக்குவது சிறப்பு. அவரைப்போன்று ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் அந்நியரிடமிருந்தும் தீவிரவாதிகளிடமிருந்தும் தீய சக்திகளிடமிருந்தும் நாட்டினைக் காக்க வீராங்கனைகளாக வீறுகொண்டு எழ வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் இது. நன்றி: குமுதம், […]

Read more
1 23 24 25 26 27 57