விடியலின் வெளிச்சம்

விடியலின் வெளிச்சம், கவிஞர் இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், பக். 72, விலை 90ரூ. ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஆண்டவனுக்கு அருகில் போகலாமென்றால் ஆற்றல் மிக்கது பணமா? பகவானா? போன்ற விடைதேடும் வினாக்கள் நிறைந்த கவிதைகளின் தொகுப்பு. ஒரு காதல் பூப்பதையும், அவஸ்தைப்படுவதையும் உணர வைக்க கவிஞரால் முடிகிறது. நன்றி: குமுதம், 31/8/2016.

Read more

ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

ஏ.பி.ஜே. அப்துல் கலாம், அருண் திவாரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங், பக். 548, விலை 495ரூ. மகாத்மா காந்திக்குப் பிறகு அதிக மரியாதைக்குரியவராக கருதப்பட்ட ஓர் இந்தியத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். அவரது வாழ்க்கை வரலாற்றை விரிவாகப் பேசும் நூல் இது. அப்துல்கலாமின் சீடரான அருண் திவாரி, கலாம் தன் வாழ்வில் எதிர்ப்பட்ட அனைத்துத் தடைகளையும் சவால்களையும் எவ்வாறு வெற்றிகரமாக கடந்தார் என்பதை இந்நூல் மூலம் உலகிற்கு அறிவுறுத்தியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஓர் இந்தியராக இருந்தார் என்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது. […]

Read more

தீர்க்க சுமங்கலி பவ

தீர்க்க சுமங்கலி பவ, ப்ரியா கல்யாணராமன், குமுதம், விலை 150ரூ. திருமணம், குழந்தை பாக்கியம், சுகப்பிரசவம், நோயின்மை, பில்லி சூனியங்களிடமிருந்து பாதுகாப்பு என ஏராளமான வரங்களை அள்ளித்தரும் ஆலயங்களின் அற்புத வரலாறு அடங்கிய நூல். அம்மன் மீது பெண்களுக்கு இருக்கும் ஆழ்ந்த நெருக்கத்தை நூலாசிரியர் அருமையாக வெளிப்படுத்தி உள்ளார். குமுதம் இதழில் வெளிவந்த தொடர்களின் தொகுப்பே இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Read more

உணவே மருந்து

உணவே மருந்து, சீத்தலைச்சாத்தன், ஒப்பில்லான் பதிப்பகம், பக். 172, விலை 125ரூ. நோய் தீர்க்கும் உணவுகள் பற்றி நம் முன்னோர்கள் சொன்னதை ஓலைச்சுவடிகளில் இருந்து தேடி எடுத்து தொகுத்துத் தந்துள்ளார். கூடவே பழைய நூல்களில் உள்ள பல மருத்துவக் குணம் உள்ள உணவுப்பொருட்கள் பற்றியும் தெரிவித்துள்ளது சிறப்பு. நன்றி: குமுதம், 17/8/2016.   —- செல்வச் சுரங்கத்தின் திறவுகோல், நெப்போலியன் ஹில், தமிழில் மு. சிவலிங்கம், கண்ணதாசன் பதிப்பகம், பக். 256, விலை 160ரூ. இந்நூல் செல்வச் சுரங்கத்தின் அனைத்து கதவுகளையும் திறக்கும் திறவுகோலாக […]

Read more

பாரதிதாசன் காப்பியங்கள்

பாரதிதாசன் காப்பியங்கள், பேரா.சு. சண்முக சுந்தரம், காவ்யா, பக். 376, விலை 1300ரூ. புரட்சிக்கவி பாரதிதாசன் எழுதிய காப்பியங்களின் மொத்தத் தொகுப்பு இது. இதில் எதிர்பாராத முத்தம், பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, உள்ளிட்ட 9 பெருங்காப்பியங்கள் இடம் பெற்றுள்ளன. 1930ல் அவர் முதன் முதலாக எழுதிய ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி’ உள்ளிட்ட ஆறு சிறுகாப்பியங்களும் அடங்கும். காப்பியங்கள் அனைத்தும் இருபதாம் நூற்றாண்டில் பாரதிதாசன் விரும்பிய சமுதாய மாற்றங்களைப் பாடுபொருளாகக் கொண்டவை. சமுதாய மாற்றத்திற்கு உறுதுணையாக நிற்பவை. நன்றி: குமுதம், 17/8/2016.

Read more

கௌதம நீலம்பரன் நாடகங்கள்

கௌதம நீலம்பரன் நாடகங்கள், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 380, விலை 230ரூ. மறைந்த சரித்திர நாவலாசிரியர் கௌதம நீலாம்பரன் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் எழுதி இடம்பெற்ற சரித்திர, சமூகப் பின்னணி கொண்ட நாடகங்களின் தொகுப்பு இந்நூல். ஞானயுத்தம், அருட்செம்மல் ஸ்ரீதாயுமானவர், ஸ்ரீ கிருஷ்ணதேவராயர், மானுட தரிசனம், சொர்க்கம் இங்கேதான், உறவின் எல்லைகள் உள்ளிட்ட பல நாடகங்கள் சுவாரஸ்யம் மிக்கவை. -மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2016.   —- யோகிகள் மற்றும் சித்தர்களின் சரயோகம், யோகி சிவானந்த பரமஹம்சா, விஸ்வயோக கேந்திரா டிரஸ்ட், விலை 120ரூ. […]

Read more

சினிமாவின் மறுபக்கம்

சினிமாவின் மறுபக்கம், ஆரூர்தாஸ், தினத்தந்தி பதிப்பகம், பக். 416, விலை 250ரூ. ஆயிரம் படங்களுக்கு மேல் வசனம் எழுதியுள்ள ஆரூர்தாஸ், தான் சினிமா துறைக்குள் நுழைந்தது, தஞ்சை ராமையாதாஸை குருவாக ஏற்றுக்கொண்டு ஆரூர்தாஸ் ஆனது, ‘பாசமலர்’ படத்தின் வசனம் அவரை உச்சத்திற்குக்கொண்டு போனது முதல் இக்கால படங்கள் வரை அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் தமிழ் சினிமாவின் மறுபக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார். -மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2016.   —- உலகப்புரட்சியாளர்கள், ஆர்.கி. சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 40ரூ. நாட்டுக்காக புரட்சிகள் செய்த […]

Read more

திருமணத்திற்கு வரன் பார்க்க A To Z வழிகாட்டி

திருமணத்திற்கு வரன் பார்க்க A To Z வழிகாட்டி, யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, குமுதம் பு(து)த்தகம், பக். 80, விலை 85ரூ. மணமக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதுதான் நம் எல்லோர் விருப்பமும். அதற்கு முன் மணமக்களுக்கு பொருத்தம் பார்க்க வேண்டும். நல்ல நாள், நல்ல நேரம் பார்க்க வேண்டும், மேலும் என்னென்ன விஷயங்களைக் கவனித்தால், இந்தத் திருமணம் சிறப்பாக அமையும் என்பதற்கு யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ இந்நூலில் வழிகாட்டியுள்ளார். ஆயிரம் காலத்துப் பயிரான கல்யாணத்தை பாதுகாப்போடு வளர்த்தெடுக்க இந்நூல் உறுதுணையாக இருக்கும். -மணிகண்டன். […]

Read more

நெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும்?

நெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும்? டாக்டர் பெ. போத்தி, குமுதம் பு(து)த்தகம், பக். 168, விலை 135ரூ. நோயை அண்டவிடாமல் இருக்க ஒரு நெறியுடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் டாக்டர்போத்தி இந்நூல் வழி விளக்கிச் செல்கிறார். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இந்நோய்களால் ஏற்படும் பிரச்னைகள், இரவில் மூச்சுவிட முடியாத நிலை, நச்சு உணவுப் பொருட்களால் ஏற்படும் தீங்குகள், போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் என்று எதையும் விடாமல் உதாரணத்துடன் விளக்கியிருப்பது சிறப்பு. -மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2016.     […]

Read more

பாவேந்தர் உள்ளம்

பாவேந்தர் உள்ளம், மன்னர் மன்னன், முல்லை பதிப்பகம், பக். 192, விலை 100ரூ. பல்வேறு ஏடுகளில், சிறப்பு மலர்களில் பாவேந்தர் பற்றி மன்னர் மன்னன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பாவேந்தரின் வாழ்க்கையிலிருந்து அவரின் படைப்புகளைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருப்பதால் பாவேந்தரின் உள்ளத்தை எளிதில் நமம்முன் வைக்க முடிந்திருக்கிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/6/2016.   —- முஃபாரோலின் அழகிய மகள்கள், முத்தையா வெள்ளையன், மேன்மை வெளியீடு, பக். 88, விலை 90ரூ. அமெரிக்கா, ரஷ்யா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள் […]

Read more
1 25 26 27 28 29 57