காதல் ஒரு மின்னல் போர்

காதல் ஒரு மின்னல் போர், ப. குணசேகர், பண்புப் பதிப்பகம், பக். 128, விலை 70ரூ. உலகப் பெருங்கவிஞரான பாப்ளோ நெருதாவின் காதல் பாடல்களில் தனக்குக் கிடைத்தவற்றை தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் ப. குணசேகர். காதல் வாழ்க்கை தந்த அனுபவங்கள் கவிதை வடிவம் பெற்றுள்ளன. மக்கள் மொழியில் இருப்பதால் அவை மக்கள் மனதை எளிதில்கொள்ளை கொள்கின்றன. தமிழில் எழுதிய கவிதைகள் போலவே தந்து நெருதாவுக்கு சிறப்பு செய்துள்ளார் மொழிபெயர்ப்பாளர். நன்றி: குமுதம், 14/9/2016.

Read more

காட்டு நெறிஞ்சி

காட்டு நெறிஞ்சி, கவிமதி சோலக்சி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 128, விலை 110ரூ. கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு அர்த்தத்தை உணர்த்தும்விதமாக உள்ளன. நாம் கவனிக்கத் தவறிய, நாம் மறந்துபோன பல விஷயங்களை கவிதைகளாகப் படைத்து, படிப்போரை வியப்படைய வைக்கிறார் கவிஞர். கோபம், வலி, சுமை, ஏக்கம், என்று ஒன்றுவிடாமல் நிஜத்தை நிதர்சனமாக காட்டியுள்ளார். அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பேசும் கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 14/9/2016.

Read more

மாணவ மணிகளே

மாணவ மணிகளே, டாக்டர் ச. தமிழரசன், குறிஞ்சி பதிப்பகம், பக். 74, விலை 50ரூ. மாணவ சமுதாயத்தை நன்னெறிப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே இந்நூல். மது, புகை, தற்கொலை, கேலிவதை போன்ற களையப்பட வேண்டியவைகளையும், பெற்றோர், ஆசிரியர், நண்பர் ஆகியோரின் பங்களிப்பு பற்றியும் மாணவர்களின் கற்கும் முறை, லட்சியம், தொண்டுள்ளம் எப்படி இருக்க வேண்டும் என்கிற நூலாசிரியரின் எண்ணமே இங்கே நூல் வடிவம் பெற்றுள்ளது. நன்றி: குமுதம், 14/9/2016.

Read more

மார்க்சின் மூலதனம் ஒரு பொறியாளனின் இன்றைய பார்வையில்

மார்க்சின் மூலதனம் ஒரு பொறியாளனின் இன்றைய பார்வையில், ப. பார்த்திபன், வாசகன் பதிப்பகம், பக். 224, விலை 150ரூ. சாதாரண மனிதனும் தன்னுடைய பொருளாதார அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் நூல். மார்க்சின் மூலதனத்தை இன்றைய வாழ்வியலோடு பொருத்திப் பார்த்து நம்மை தெளிவுபடுத்தும் நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 7/9/2016.

Read more

சட்டக் கேள்விகள் 100

சட்டக் கேள்விகள் 100, வழக்குரைஞர் வெ. குணசேகரன், லாயர்ஸ் லைன் வெளியீடு, பக். 128, விலை 150ரூ. எல்லா துறைகளிலும் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் அந்த பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியாக என்ன தீர்வு உள்ளது என்பதை விளக்கும் நூல். பிரச்சினைகளை சந்திக்கும் மக்கள் அவர்கள் தொடுக்கும் கேள்விகளையும் அதற்கான பதில்களையும் தொகுத்து சட்டக் கேள்விகள் 100 (பாகம் 1, 2) என்ற தலைப்பில் வெளியிட்டு, அனைத்து வகையான மக்களையும் பிரச்சினைகளில் இருந்து சுலபமாக வெளிவர உறுதுணையாக இருக்கும் நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், […]

Read more

கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை

கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை, சிற்பி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 96, விலை 80ரூ. சிற்பி தன் கவிதைக்கு வயது ஐம்பதைக் கடக்கும் என்கிறார். இந்த ஐம்பதாண்டுகளில் கவிதைகயின் அகமும் புறமும் பெருமளவு மாறிப்போயிருந்தாலும், யாப்புகளில் புதிய பரிசோதனைகளும் மாற்றங்களும் நிகழ்ந்திருந்தாலும், மரபு நீங்காத புதிய காலப் பதிவுகளோடு இன்றைக்கும் புது சிறகோடு பறக்கிறது அவரது கவிதைப் பறவை. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 7/9/2016.

Read more

1000 செய்திகள்

1000 செய்திகள், முக்தா வீ. சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், பக். 80, விலை 100ரூ. இது முக்தா வீ. சீனிவாசனின் 140வது புத்தகம். இதில் இல்லாத தகவல்களே இல்லை என்பதுபோல், நம் ஊர் பாரதி பற்றிய தகவல்கள் தொடங்கி, சாக்ரடீஸ், அரிஸ்டாடில் போன்றோரின் கருத்துக்கள், அறிவியலாளர்கள், நடிகர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், இசைஞானிகள், சாதனையாளர்கள், ஆன்மிகவாதிகள், விளையாட்டு வீரர்கள் என்று தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. -இரா. மணிகண்டன் நன்றி: குமுதம், 7/9/2016.

Read more

நான் ஏன் பிறந்தேன்?

நான் ஏன் பிறந்தேன்?, எம்.ஜி.ஆர், கண்ணதாசன் பதிப்பகம், பக். 736, விலை 460ரூ. எம்.ஜி.ஆரின் சுயசரிதாதான் ‘நான் ஏன் பிறந்தேன்?’ நூல் வடிவம் கொண்டுள்ளது. அவர் கைப்பட எழுதியது என்பது இதன் தனிச்சிறப்பு. எம்.ஜி.ஆர். பங்கு கொண்ட நாடக அமைப்புகள், பட நிறுவனங்கள், தன்னோடு பணியாற்றிய சக கலைஞர்கள், அவர் சாந்த கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், குடும்ப நண்பர்கள், தொண்டர்கள் என்று யாரையும் விடாமல் உள்ளதை உள்ளபடி தைரியமாக எழுதிச் செல்கிறார். அவருக்கு உதவியோரையும் அவரை படுபாதளத்தில் தள்ளி அழிக்க முயன்றோரைப் பற்றியும் […]

Read more

எம்.ஜி.ஆர். எழுதாத குறிப்புகள்

எம்.ஜி.ஆர். எழுதாத குறிப்புகள், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 808, விலை 550ரூ. தற்கால வரலாற்றையும் சென்ற தலைமுறையில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த கால கட்டத்தையும் இரண்டறக் கலந்து எழுதிச் செல்கிற நாவல் இது. முத்தமிழன், ரகு உள்ளிட்ட ஏழு கதாபாத்திரங்களுடன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரையும் ஒரு கதாபாத்திரமாக அமைத்திருப்பது புதுமை. நன்றி: குமுதம், 31/8/2016.   —- தெரியும் ஆனால் தெரியாது, முனைவர் ந. அப்புராஜ், தண்மதி பதிப்பகம், பக்.110, விலை 120ரூ. மிகப்பெரிய கருத்தை ஒரு சிறிய பெட்டிக்குள் திணித்து வைத்திருப்பதுபோல் […]

Read more

பொன்விழா சுற்றுலா

பொன்விழா சுற்றுலா, கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 208, விலை 140ரூ. ஜம்பதாண்டைக் கடந்துவிட்ட நமது தேசத்தின் சுதந்திரத்தை இன்றைய தலைமுறைக்குச் சொல்லப்பட வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட நூல். இந்த தேசத்திற்காக பாடுபட்டு மறைந்த மாமனிதர்களின் ஊர்களுக்கு மாணவர்கள் சுற்றுலா செல்வது போன்று இந்நூலை ஜீவபாரதி படைத்திருப்பது சிறுவர்களுக்கு பயன்தரும். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 31/8/2016.

Read more
1 24 25 26 27 28 57