என் பெயர் நம்பிக்கை

என் பெயர் நம்பிக்கை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக், 120, விலை 80ரூ. நூலாசிரியர் தான் சந்தித்த மனிதர்களையும் அவர்கள் தந்த அனுபவங்களையும் பாடங்களையும் நம்பிக்கை தரும் வகையில் முகநூலில் எழுதி வந்ததன் தொகுப்பு இந்நூல். நம்பிக்கையான அனுபவங்களும் சம்பவங்களும் படிக்கப் படிக்க ஆர்வம். நன்றி: குமுதம், 5/10/2016.

Read more

தித்திக்கும் தேனினும் திகட்டாத திருக்கோவில்கள்

தித்திக்கும் தேனினும் திகட்டாத திருக்கோவில்கள், பா. வரதராசன், குமுதம், ஒவ்வொரு பாகத்தின் விலை 125ரூ. திருக்கோயில்களுக்குச் செல்பவர்களுக்கு அத்திருக்கோவிலின் வரலாறு, தெய்வத்தின் திருநாமம், மகிமை, வரந்தரும் கடவுள்களின் சிறப்பு, தரிசிப்பதால் மக்களுக்கு கிட்டும் பலன்கள் ஆகியவற்றை விளக்குவதோடு, திருக்கோவில்கள் பற்றிய கலைக்களஞ்சியமாகவே இந்நூலை ஆக்கியுள்ளார் ஏ.எம்.ராஜகோபாலன். முதல் பாகத்தில் 18 கோவில்களைப் பற்றியும், 2-ம் பாகத்தில் 23 கோவில்களைப் பற்றியும் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —- இரா. மோகன், ச. கவிதா, கலைஞன் பதிப்பகம், விலை 90ரூ. பன்மொழிப் பாவலர், […]

Read more

புத்தம் புது பூமி வேண்டும்

புத்தம் புது பூமி வேண்டும். சு. ராஜு, உரத்த சிந்தனை பதிப்பகம், பக். 120, விலை 150ரூ. புவி அறிவியல் தொடர்பான அடிப்படைத் தகவல்களை யாவரும் புரிந்துகொள்ளும் எளிய தமிழில் தந்துள்ளார். பூமியில் செயல்படும் வெப்ப ஆற்றல் உள்ளிட்ட ஆற்றல்கள், இயற்கைப் பேரிடர்கள், மனிதக் கண்டபிடிப்பால் சுற்றுச்து பூமியைப் பாதுகாத்து எப்போதும் இது ‘புத்தம் புது பூமியாக விளங்கிட’ நாம் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய நூல். நன்றி: குமுதம், 5/10/2016.

Read more

மதனகாமராஜன் கதைகள்

மதனகாமராஜன் கதைகள், என்.டி.நந்தகோபால், பயனீர் பப்ளிகேஷன்ஸ், பக். 304, விலை 230ரூ. நம் நாட்டுப் பாரம்பரியக் கதைகளுக்கே உரிய கற்பனை வளமும் சூட்சுமங்களும், சுவையும் மிக்க கதைகள் இவை. மென்மையான காதல் சுவையுடன் கலகலப்பாகக் கொண்டு செல்கிறது. அதே வேளை, கண்ணியம் மீறாத நேர்த்திமிக்க கதைகள் இவை. நன்றி: குமுதம், 5/10/2016.

Read more

உங்கள் கேள்விகளுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பதில்கள்

உங்கள் கேள்விகளுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பதில்கள், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக். 182, விலை 65ரூ. மோட்சத்தை நாடும் மனிதன் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை இறைவனிடம் கேள்விகளாகக் கேட்கிறான். தகுந்த குருவை அடைந்து அவரிடம் பணிவுடன் கேள்வி கேட்க வேண்டும் என்று உபநிஷதங்களும் பகவத் கீதைகளும் கூறுகின்றன. அந்த வகையில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது சீடர்களுக்கு எழும் சந்தேகங்களை நீக்கி அமுத மொழியாக அருளியுள்ளார். அதிலிருந்து பக்தர்கள் பல சூழநிலைகளில் கேட்ட கேள்விகளுக்கு ராமகிருஷ்ணர் தந்த பதில்களின் தொகுப்பு இந்நூல். நன்றி: குமுதம், […]

Read more

அறத்தந்தை அண்ணாமலை அரசர்

அறத்தந்தை அண்ணாமலை அரசர், மு. அருணாசலம்பிள்ளை, முல்லை பதிப்பகம், பக். 144, விலை 100ரூ. அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தை நிறுவி, பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி ஊட்டிய தனிப்பெரும் வள்ளல் டாக்டர் இராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை தமிழ்மக்களும் மாணவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்ட நூல். அண்ணாமலை அரசரின் கல்விப் பணியும் பொதுப் பணியும் பொதுப் பணியும் உலகம் நன்கு அறிந்த ஒன்றே என்றாலும் எதிர்கால இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்து அவர்களை நெறிப்படுத்தும் நூல். நன்றி: குமுதம், 5/10/2016.

Read more

உள்ளங்கையில் உலகம்

உள்ளங்கையில் உலகம், அ.ஸ்டீபன், வைகறை பதிப்பகம், பக். 64, விலை 40ரூ. உலகில் நடக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் – அது குடும்பம், உறவு, நட்பு, எதிர்ப்பு, நீதி, மனிதநேயம், நாடுகள் பற்றிய சர்ச்சை, தகவல் பரிமாற்றங்கள், அண்மையில் நிகழ்ந்த காவிரி பிரச்னை என்று அனைத்தையும் உள்ளங்கையில் வைத்துப் பார்க்கும் வசதியை ஊடகங்கள் தந்துவிட்டன. ஆனால் அந்த ஊடகங்கள் குறித்த சரியான புரிந்துணர்வு இல்லை. அதை கற்பிக்கும் நூல் இது. நன்றி: குமுதம், 28/9/2016.

Read more

வெள்ளைக் காகிதத்தில் ஓர் எறும்பு

வெள்ளைக் காகிதத்தில் ஓர் எறும்பு, பால்முகில், கவிஞன் பதிப்பகம், பக். 62, விலை 80ரூ. எதார்த்தமான கவிதை வரிகள் படிப்போரை மேலும் மேலும் படிக்கத் தூண்டுகிறது. ‘என் பெட்டிக்கடைக்கும் வயதாகிறது, என் வாடிக்கையாளர்களுக்கும் வயதாகிறது, எனக்கும் வயதாகிறது, எப்போது சாயுமென்று சிலர் எதிர் பாத்திருக்கலாம்’. இது வெறும் கவிதை அல்ல. நிஜ வாழ்வின் முழுக்காட்சி. நன்றி: குமுதம், 28/9/2016.

Read more

குழந்தைகளின் மனநலம்

குழந்தைகளின் மனநலம், A. வினோத்குமார், கண்ணதாசன் பதிப்பகம், பக். 245, விலை 160ரூ. குழந்தைகள் கருவில் உருவாவதிலிருந்து அவர்களின் வளர்ச்சி நிலை, வளர்ப்பு நிலை, பெற்றோரின் கடமை, சுற்றுச்சூழல், குழந்தைகளிடம் காணப்படும் பயம், ஆண் – பெண் பாகுபாடு, குழந்தைகள் படிப்பு என்று குழந்தைகளின் உலகிற்குள் சென்று அவர்களைப் புரிந்துகொள்ள உதவும் நூல். நன்றி: குமுதம், 28/9/2016.

Read more

ஹைக்கூ எழுதுவது எப்படி

ஹைக்கூ எழுதுவது எப்படி, மெர்லின், காட்சி புக்ஸ், பக். 72, விலை 70ரூ. உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கவிஞர்களாலும் அறியப்பட்ட ஹைக்கூ, தமிழிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைக்கூ என்றால் என்ன என்று தெரியாமலே பலர் ஹைக்கூ கவிதைகள் எழுதிக் குவிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களுக்கும் படிப்போருக்கும் ஹைக்கூ பற்றிய ஒரு தெளிவை, ஹைக்கூ என்றால் என்ன? அதை எப்படி எழுத வேண்டும்? என்பதையும் எடுத்துக்கூறும் நூல். நன்றி: குமுதம், 29/9/2016.

Read more
1 22 23 24 25 26 57