ரகுநாதம் கட்டுரை கவிதை நாடகம்,

ரகுநாதம் கட்டுரை கவிதை நாடகம், பேரா. சண்முக சுந்தரம், காவ்யா, பக். 1120, விலை 1100ரூ. படைப்பாற்றலும் விமர்சனக் கூர்மையும் ஒருங்கே பெற்றவர் தொ.மு.சி. ரகுநாதன். முதுபெரும் எழுத்தாளரான தொ.மு.சி. பொதுவுடமைக் கருத்துக்களை எந்த சமரசமும் செய்யாமல் விதைத்த புரட்சியாளர். புதுமைப்பித்தனை இனம் கண்டவர். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என பரந்துபட்ட இலக்கிய ஆளுமையாக ஆட்சி செய்தவர். அந்த வகையில் அவரது 100 கட்டுரைகள், 2 நாடகங்கள், 56க்கும் மேற்பட்ட கவிதைகளை உள்ளடக்கிய பொக்கிஷமாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

அறிவியலுக்கு அப்பால்

அறிவியலுக்கு அப்பால், நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், வானதி பதிப்பகம், பக். 152, விலை 125ரூ. நம்மைச் சுற்றிலும் அறிவியலுக்கு அப்பாற்பட்டு எவ்வளவோ நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அறிவியலுக்கே சவால் விடுபவை அவை. அவற்றில் சிலவற்றை அலசி, அவற்றை மூடத்தனம் என்று ஒதுக்காமல், அதில் உள்ள உண்மைத்தன்மையை தேட வைக்கும் முயற்சி இந்நூல். இசை ஞானமே இல்லாத ரோஸ்மேரி பிரவுன் – இசைமேதைகளின் ஆவியுலகில் இருந்து தரப்பட்ட புது கம்போசிஷன்களில் இசைத்தட்டுக்களை விற்பனைக்குக் கொண்டு வந்தது, அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி கொல்லப்படுவதை முன்கூட்டியே […]

Read more

திண்ணைகளற்ற பெரு நகரங்களில்

திண்ணைகளற்ற பெரு நகரங்களில், நர்மதா, பாப்லோ பதிப்பகம், பக். 82, விலை 80ரூ. தொலைந்து போன் மனித மனங்களைத் தேடும் ஒரு முயற்சி இது. ‘எல்லோர்க்கும் எல்லாம் கிட்டும் நல்வாழ்வு தேடும் நல்லோர் நிறை சமூகம் வேண்டும்’ என்பது கவிஞரின் அன்றாடப் பிரார்த்தனை. அதுவே படிப்போரை நாளைய உலகம் நல்லோரின் கை சேரலாம் என்ற நம்பிக்கை கொள்ள வைக்கிறது. -இரா. மணிகண்டன், நன்றி: குமுதம் 1/2/2017.

Read more

சர்தார் வல்லபாய் படேல்

சர்தார் வல்லபாய் படேல், அ.செல்வமணி, ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக். 458, விலை 280ரூ. அசோகர், கனிஷ்கர், சந்திர குப்தர், சாணக்கியர், சத்ரபதி சிவாஜி, மேவார்ராணாக்கள், தாந்தியோதோபி, நானாசாகிப் போன்ற மாவீரர்கள் இந்த பாரத தேசத்தை வலிமைமிக்க நாடாக ஆக்க எடுத்த முயற்சிகள் தனித்தனியானவை. தனித்துவமானவை. ஆனால் பிரிந்து கடந்த இந்த பாரதத்தை செம்மைப்படுத்தி, ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த மாவீரர் சர்தார் வல்லப பாய்படேல் என்ற ஒரு தனி மனிதரே. அவரது வாழ்க்கை வரலாற்றை முழுமையாகத் தரும் நூல் இது. -இரா. […]

Read more

நீங்கள் எந்த மரம்?

நீங்கள் எந்த மரம்?, அ. அறிவுநம்பி, சித்திரம் வெளியீடு, பக். 158, விலை 120ரூ. மொழி, சமூகம், நாடு, மானிடர், தனி மாந்தர் ஆகிய தளங்களில் ஆசிரியர் எழுதிய கட்டுரைகள் தொகுப்பு இந்நூல். தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதில் உள்ள அக்கறை, பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டும் என்பதில் காட்டும் முனைப்பு, மதுரையின் கடம்பவன பழமை, வரதட்சணை என்ற வியாபாரம், காலதாமதத்தைப் போக்கும் மனக்கட்டுப்பாடு, மரபுகளின் மாற்றத்தால் நன்மையா? தீமையா? என்பதைப் புலப்படுத்தும் மரபுக் கட்டுரை, தமிழுக்கு ஒளி கூட்டிய வ.சு.ப. மாணிக்கனார், அறிவியல் கூத்து, […]

Read more

உபசாரம்

உபசாரம், சுகா, தடம் பதிப்பகம், பக். 151, விலை 130ரூ. மனிதர்களை கவனிக்கும் சுகாவின் ரசனைதான் ‘உபசாரம் தொகுப்பின் அடிநாதம். அது சினிமாவாகட்டும், படித்த நாவலாகட்டும், சாப்பிடப் போன விருகம்பாக்கம் ஹோட்டலாகட்டும், திருநெல்வேலி விருந்தாகட்டும், பெரிய எழுத்தாளர், ஆரம்ப எழுத்தாளராகட்டும் அவர்களின் மனதை அறிந்து, அதை எழுத்தில் தந்து நம்மையும் அங்கே பயணிக்க வைத்துவிடுகிறார். முதலில் இவர் தன் மனதை திறந்து வைத்திருக்கிறார் என்பதையே இவ்வனுபவக் கட்டுரைகள் உணர்த்துகின்றன. எழுத்தில் நெருடல் இல்லாத நகைச்சுவை இயல்பாய் வந்துவிட்டாலே எழுத்துக்கு ரசிகர்கள் பெருக்கம் உருவாகிவிடும். சுகாவுக்கு […]

Read more

ஆயிரம் தெய்வங்கள்

ஆயிரம் தெய்வங்கள், ஆர்.எஸ்.நாராயணன், யூனிக் மீடியா இன்டகிரேட்டர்ஸ், பக். 136, விலை 100ரூ, ஒரே தெய்வக் கோட்பாட்டைக் கொண்ட மற்ற மதங்களில் மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளைவிட, ஆயிரம் தெய்வங்களைக் கும்பிடும் இந்தியாவில் – இந்து மதத்தில் வன்மை குறைவுதான். அதனால்தான் இந்தியாவில் ஜனநாயகம் நிலைத்து நிற்கிறது என்பதை ஒப்பீட்டு ஆய்வின் மூலம் விளக்கும் நூல். மதத்தையும் பக்தியையும் வித்தியாசமான கோணத்தில் அளவிட்டுள்ளார் இயற்கை விஞ்ஞானி ஆர்.எஸ். நாராயணன். நன்றி: குமுதம், 25/1/2017.

Read more

மகாபாரதத்தில் வரமும் சாபமும்

மகாபாரதத்தில் வரமும் சாபமும், இ.எஸ். லலிதாமதி, கலைஞன் பதிப்பகம், பக். 176, விலை 165ரூ. மகாபாரத பாத்திரங்களை நம் வாழ்வில் நடக்கும் நன்மை தீமை, நட்பு துரோகம் என அனைத்து செயல்களுக்கும் உதாரணம் காட்ட முடியும். அந்த வகையில் மகாபாரதத்தில் உள்ள சில பாத்திரங்கள் – யயாதி முதல் விஸ்வாமித்திரர் வரை – பெற்ற வரங்களையும் சாபங்களையும் எளிய நடையில் கதைபோல் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர். ஏன் சாபம்? எதற்காக சாபம்? என்பதன் விளக்கம் படிக்கும் மனிதர்களுக்கு ஒரு படிப்பினையைத் தந்து நீதியை போதிக்க் உதவும். […]

Read more

வெளிச்ச விதைகள்

வெளிச்ச விதைகள், கவிஞர் இரா. இரவி, வானதி பதிப்பகம், பக். 190, விலை 120ரூ. ‘உலகில் உறவுகள் ஆயிரம் இருந்தாலும் பெற்ற அம்மாவிற்கு, நிகர் ஏதுமில்லை’ என்று தாயையும் உலகை உணர்த்தும் ஆசான் என்று தந்தையையும் போற்றும் கவிஞர் இரவியின் கவிதைகள் போற்றுதலுக்குரியவை. பெண்மை, தமிழர், தமிழ்மொழி, இயற்கை, தன்னம்பிக்கை, சமூக அவலங்கள் என்று படிப்போர் மனதில் கவிதை கொண்டு உழவிட்டு வெளிச்ச விதைகளை கவிதைதோறும் விதைத்துப் போகிறார். -இரா. மணிகண்டன், நன்றி: குமுதம், 25/1/2017.

Read more

ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்

ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம், பிருந்தாசாரதி, டிஸ்கவரி புக் பேலஸ், பக். 200, விலை 180ரூ. கவிதையைப் பாராட்டாமல் அதை எழுதிய வரை ஆதி அந்தம் வரை பாராட்டுவது தமிழில் அதிகம். அந்த வகையில் கவிதைகளைப் பாராட்டத்தூண்டும் வகையில் உள்ளது, பிருந்தாசாரதியின் கவிதைகள். தலைப்புகளிலேயே கவிதைகளின் அடர்த்தி உணரப்பட்டுவிடுகிறது. “வெட்டப்பட்ட ஆட்டுத்தலை வெறித்துப் பார்க்கிறது தோலுரித்துத் தொங்கவிடப்பட்டிருக்கும் தன் உடலை” பக்கம் பக்கமாக சொல்ல வேண்டியதை ‘அந்நியமாதலை’இதைவிட நாலுவரியில் பொட்டிலடித்த மாதிரி சொல்ல முடியாது. கவிதைகளுடனேயே நம்மையும் பயணப்பட வைக்கும் ஈர்ப்பு இக்கவிதைகளில் உண்டு. -இரா. மணிகண்டன். […]

Read more
1 19 20 21 22 23 57