காற்றடைத்த பையடா

காற்றடைத்த பையடா, ஜி.எஸ்.குமாரதேவி, வனிதா பதிப்பகம், பக். 328, விலை 250ரூ. தாம் விரும்பும் கல்வியையே தன் மகனோ மகளோ பயில வேண்டும் என்ற திணிப்பு. தாங்கள் விரும்பும்படியே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வற்புறுத்தல் இப்படியான குழப்பமான கலாச்சார யுகத்தில் பெற்றோர்களும் பிள்ளைகளுக்குமான போராட்டக்களமாக வெடித்துள்ளது இந்நாவல். நட்பும் காதலும் அதன் ஊடுபயிராய் இருந்து சிறப்பிக்கின்றன. நன்றி: குமுதம், 19/4/2017.

Read more

படித்தாலே இனிக்கும்

படித்தாலே இனிக்கும், பேராசிரியர் நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 118, விலை 80ரூ. கருத்தரங்குகளில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகள், நூல்களுக்கு வழங்கப்பட்ட அணிந்துரைகள், கலை. இலக்கியம், இசை, நாடகம் என்று பன்முக நோக்கில் எழுதப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு. பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், அருட்செல்வர், நா. மகாலிங்கம், பேராசிரியர் க. வெள்ளைவாரனார், ஏர்வாடியார் என்று பலரின் ஆளுமையைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் நூல்களை தேடிப்பிடித்து படிக்க வைக்க உதவும் கட்டுரைகள் இவை. நன்றி: குமுதம், 19/4/2017.

Read more

சுமையா

சுமையா, கனவுப் பிரியன், நூல்வனம் வெளியீடு, பக். 216, விலை 160ரூ. சர்வதேச அளவிலான மனிதர்களை தமிழ்க் கதைப் பரப்பிற்குள் கொண்டு வந்திருக்கிறார் நூலாசிரியர். சிறுகதைகள் வாயிலாக புதிய கதைக்களன்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் பணியைச் செய்துள்ளார். வாழ்வின் விசித்திரங்கள் கதைகளின் வழி காட்சிப்படுத்தும் விதம் சுவாரஸ்யம். சமூகம், அறிவியல் புனைவுகளும் கலந்து உற்சாகப்படுத்துகிறது. நன்றி: குமுதம், 29/3/2017.

Read more

வர்க்கப் புரட்சி

வர்க்கப் புரட்சி, புலவர் தி. குலோத்துங்கன், பிரசாந்த் நூலகம், பக். 120, விலை 80ரூ. பாமர மக்களின் அடிமை நிலை நீங்க, புரட்சியை ஆழப்படுத்தி, மக்களுக்கு அறிவு புகட்டி, போராடினால்தான் நாட்டில் சமத்துவத்தை உருவாக்க முடியும். பாட்டாளி வர்க்கம் ஆட்சியை அமைக்க முடியும். இத்தகைய கருத்துக்களை முன் வைக்கும் நூல் இது. நன்றி: குமுதம், 29/3/2017.

Read more

கோமணம்

கோமணம், சுப்ரபாரதிமணியன், முன்னேற்றப் பதிப்பகம், பக். 112, விலை 80ரூ. முருகனை தரிசிக்கச் செல்லும் பாத யாத்திரையில், பக்தர்கள் அனுபவித்த அனுபவங்களை சமகால நிகழ்வுகளுடன் பேசும் நாவல் இது. கடவுள் நம்பிக்கை, சடங்குகள், பழங்கதைகள், நாத்திகம் என்று எல்லாமே அலசப்பட்டுள்ளன. பொதுமக்களின் மனதைப் புரிந்துகொண்டு அவர்களின் பிரச்னைகளை அலசி, சமூகம் சார்ந்த அக்கறையை வெளிப்படுத்துகிறார் நாவலாசிரியர். நன்றி: குமுதம், 5/4/2017.

Read more

காலத்தால் அழியாத சுதந்திரம்

காலத்தால் அழியாத சுதந்திரம், எல்லை. சிவக்குமார், மேன்மை வெளியீடு, பக். 128, விலை 100ரூ. புதுச்சேரி வரலாற்றில் வ. சப்பையாவுக்கும் அவர் தொடங்கிய ‘சுதந்திரம்’ இதழுக்கம் ஒரு சிறப்பான இடமுண்டு. அத்தகைய சிறப்பான ‘சுதந்திரம்’ பத்திரிகையின் ஆரம்பகால இதழ்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்கள், அரசியல், போராட்டம், தொழிலாளர்கள், இலக்கியம், சமூகம் என்று அனைத்தையும் இவ்விதழ் வழி ஆராயப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 5/4/017.

Read more

மாணவனே உன்னை உலகம் கவனிக்க

மாணவனே உன்னை உலகம் கவனிக்க, சுவிர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக். 124, விலை 45ரூ. மாணவர்களின் படிப்பு, திறன், ஆர்வம் முயற்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் கேள்விகளுக்குப் பதில்க எழுதப்பட்ட நூல். எல்லா நிலையில் உள்ள மாணவர்களுக்கும் படிப்பதற்கு தேவையான பல்வேறு டிப்ஸ்கள் இந்நூலில் உள்ளன. மாணவர்களுக்கு உள்ள பிரச்னைகளை அலசி ஆராய்ந்து அதற்குத் தீர்வு காணவும் உதவும் நூல். நன்றி: குமுதம், 5/4/017.

Read more

மறுதாம்பு

மறுதாம்பு, தோழன் மபா., மேய்ச்சல் நிலம் பதிப்பகம், பக். 104, விலை 90ரூ. வெட்டப்பட்ட பின்னரும் துளிர்விடும் எந்த ஒன்றும் ‘மறுதாம்பு’தான். ‘சாமிதானே நானு என்னை ஏன்டா சமுத்திரத்தில் கரைக்கிற?’ என்று கேட்டும் சாமிக்கும் ஒரு ‘மறுதாம்பு’ உண்டு என்பதை உணர்த்தும் சமூகப்பதிவுகள் மபாவின் ஆக்கங்கள். விளிம்பு நிலை மாந்தர் மட்டுமன்று, பெரும் வலியை தினந்தோறும சுமந்து நகரும் நாட்களும் கால்களும்கூட தனக்கான செய்தியை கவிதைகளாகப் பதிந்துவிட்டுச் செல்லும் நிகழ்வு இதில் உண்டு. நன்றி: குமுதம், 5/4/017.

Read more

தர்ம அதர்ம சரித்திரம்

தர்ம அதர்ம சரித்திரம், ச. காடப்பன், யாழினி பதிப்பகம், பக். 96, விலை 90ரூ. மகாபாரதம் ஒரு வாழ்வியல் நூல். மனிதன் தர்மத்தின் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிகாட்டும் நூல். இதில் அப்பழுக்கற்றவர் என்று எவரும் இல்லை. முழுக்க முழுக்க அதர்மிகள் என்றும் அவருமில்லை. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் தத்துவத்தைச் சுட்டிக் காட்டும்படி படைக்கப்பட்டுள்ளன. இதில் 21 கதாபாத்திரங்களை பல்வேறு கோணங்களில் அலசி ஆராயும் நூல் இது. நன்றி: குமுதம், 5/4/2017.

Read more

தமிழ் திரைப்பட நூற்றாண்டு – 2018

தமிழ் திரைப்பட நூற்றாண்டு – 2018, பெ. வேல்முருகன், ஒளிக்கற்றை வெளியீடு, பக். 104, விலை 100ரூ. தமிழ்த் திரைப்படங்களின் வரலாற்றை முறையாக ஆவணப்படுத்தாமல் விட்டுவிட்டதன் விளைவாக, தமிழ்த் திரைப்படங்களின் நூற்றாண்டு எந்த ஆண்டாக இருக்க முடியும் என்ற விவாதங்கள் உருவாகியுள்ளன. அந்தக் குறையை இந்நூல் தீர்த்து வைக்கிறது. 2018 ஆம் நூற்றாண்டுதான் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு என்பதை உறுதி செய்கிறது இந்நூல். தமிழ்த் திரைப்படங்கள் குறித்த ஆய்விற்கு வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம், 29/3/2017.

Read more
1 17 18 19 20 21 57