பெத்திபொட்ல சுப்பராமய்யா கதைகள் பாகம்-1

பெத்திபொட்ல சுப்பராமய்யா கதைகள் பாகம்-1, தமிழில்: மதுமிதா,சாகித்திய அகாதெமி, பக்.496, விலை ரூ.365. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 34 தெலுங்கு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இச்சிறுகதைகளின் மாந்தர்களை நீங்கள் உங்கள் வீட்டருகே, தெருவில், கடைவீதியில், பொது இடங்களில் சந்திக்கலாம். ஆதரவற்றவர்கள், அனாதைக் குழந்தைகள், ஒருவேளை உணவு கிடைக்காமல் திண்டாடுபவர்கள், அவர்களின் உளவியல்ரீதியிலான சிக்கல்கள் எல்லாவற்றையும் மிகவும் அற்புதமாகச் சித்திரித்திருக்கிறார். எனினும் இக்கதைகளின் ஊடே மனிதநேயமும், பிறருக்காக வாழ்தலும் பிரதானப்படுத்தப்படுகிறது. கிணறு தோண்டியவன் எப்போதோ இறந்து போயிருக்கலாம். ஆனால் அவன் இன்னும் தாகம் கொண்ட வழிப்போக்கர்களுக்கு உயிரளித்துக் […]

Read more

கடித இலக்கியம்

கடித இலக்கியம், இரா.காமராசு, சாகித்திய அகாதெமி, பக்.320, விலை ரூ.200. செல்லிட பேசி அதிக அளவில் புழக்கத்தில் வந்த பிறகு உறவினர்களுக்கு, நண்பர்களுக்குக் கடிதம் எழுதுவது அடியோடு நின்றுபோய்விட்டது. கடிதம் எழுதுவதில் உள்ள சுகம், கடிதம் எப்போது வரும் என்ற காத்திருப்பு, கடிதம் வந்தபின் எழும் பல்வேறு உணர்வுகள் என இந்தத் தலைமுறையினரும், வருங்காலத் தலைமுறையினரும் இழந்த அனுபவங்கள், உணர்வுகள் அதிகம். அந்த அனுபவங்களை, உணர்வுகளை இந்நூல் தொட்டுக் காட்டுகிறது . பாரதியார் தன் மனைவிக்கு, பரலி சு.நெல்லையப்ப பிள்ளைக்கு, தம்பி சி.விசுவநாதனுக்கு எழுதிய […]

Read more

பிரபஞ்சன் படைப்புலகம்

பிரபஞ்சன் படைப்புலகம், மகரந்தன், சாகித்திய அகாதெமி, பக்.256, விலை ரூ.310, பிரபஞ்சனின் வாழ்க்கையை மட்டுமின்றி, புதுச்சேரியில் வாழ்ந்த இலக்கிய முன்னோடிகளைப் பற்றியும், அவர்களுடைய படைப்புகளைப் பற்றியும் பல்வேறு தகவல்களை இந்நூலின் முன்னுரையில் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். இந்நூலில் பிரபஞ்சனின் சிறந்த படைப்புகளில் சில தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பிரபஞ்சனின் படைப்புகளில் முதலில் வெளிவந்தவை கவிதைகள்தாம். பிரபஞ்சனின் சிறுகதைகள் பெரும்பாலும் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலமே நகர்த்திச் செல்லப்படுகின்றன. நேற்று மனிதர்கள், சங்கம், ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், பாதுகை, கமலா டீச்சர் போன்ற சிறுகதைகள் இந்நூலில் இடம் […]

Read more

பிரபஞ்சன் படைப்புலகம்

பிரபஞ்சன் படைப்புலகம், மகரந்தன்,சாகித்திய அகாதெமி, பக்.256, விலை ரூ.310. பிரபஞ்சனின் வாழ்க்கையை மட்டுமின்றி, புதுச்சேரியில் வாழ்ந்த இலக்கிய முன்னோடிகளைப் பற்றியும், அவர்களுடைய படைப்புகளைப் பற்றியும் பல்வேறு தகவல்களை இந்நூலின் முன்னுரையில் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். இந்நூலில் பிரபஞ்சனின் சிறந்த படைப்புகளில் சில தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பிரபஞ்சனின் படைப்புகளில் முதலில் வெளிவந்தவை கவிதைகள்தாம். பிரபஞ்சனின் சிறுகதைகள் பெரும்பாலும் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலமே நகர்த்திச் செல்லப்படுகின்றன. நேற்று மனிதர்கள், சங்கம், ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், பாதுகை, கமலா டீச்சர் போன்ற சிறுகதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. […]

Read more

சிங்காரவேலர்

சிங்காரவேலர், பா.வீரமணி, சாகித்திய அகாதெமி, விலை 50ரூ. விடுதலைப் போராட்ட வீரரும், பொதுவுடைமைச் சிந்தனையின் முன்னோடியுமான சிங்காரவேலரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 28/2/2018.

Read more

பெரியாழ்வார்

பெரியாழ்வார், ம.பெ.சீனிவாசன், சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ.50. தமிழ் மொழியில் தோன்றியது போல் வேறு எந்த மொழியிலும் இவ்வளவு அதிகமான பக்தி இலக்கியங்கள் படைக்கப்படவில்லை. பக்தி இலக்கியத்தின் தொடக்கம் சங்ககாலத்திலேயே அறியப்பட்டாலும் நாயன்மார், ஆழ்வார்களின் பக்திப் பாடல்கள் விளைத்த புரட்சி குறிப்பிடத்தகுந்ததாக இருக்கிறது. அதிலும் பன்னிரு ஆழ்வார்களின் படைப்புகள் திருமாலின் பெருமையைப் பாடிச் செல்வதால் ஆழ்வார்களை மால் உகந்த ஆசிரியர் என்று அழைப்பர். அவர்களுள் பெரியாழ்வாரின் படைப்புகளையும் அதன் தனிச் சிறப்புகளையும் பற்றிப் பேசுவதுதான் இந்நூல். அறிமுகம் , வாழ்க்கையும் படைப்பும், திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் […]

Read more

அ.ச.ஞானசம்பந்தன்

அ.ச.ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ. 50. தமிழறிஞர் என்று பொதுவாக அறியப்படும் அ.ச.ஞானசம்பந்தன் ஒரு தமிழறிஞராக மட்டுமல்லாது, எழுத்தாளர், சொற்பொழிவாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். அவரது அனைத்துத் தமிழ்ப் பணிகளையும் இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். தனது ஒன்பதாவது வயதில் துறையூர் சைவ சமய மாநாட்டில் முதன்முதலில் மேடையேறிப் பேசினார் அ.ச.ஞா. அதனைத் தொடர்ந்து பதினைந்தாவது வயதில், தூத்துக்குடியில் வ.உ.சி. ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரா.பி. சேதுப்பிள்ளை உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலருடன் அ.ச.ஞா.வும் உரையாற்றிப் […]

Read more

கவி கா.மு. ஷெரீப்பின் படைப்பாளுமை

கவி கா.மு. ஷெரீப்பின் படைப்பாளுமை, இரா. சம்பத், சாகித்திய அகாதெமி, பக். 224, விலை 110ரூ. 18 அறிஞர்களின் பயனுள்ள தொகுப்பு இன்றைக்கு அறுபதைக் கடந்து நிற்பவர்களை அந்தக் காலத்தில் கிறங்க அடித்த பல திரையிசைப் பாடல்களுள் ஒன்று ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ பாடல். இதுபோன்ற பல பாடல்களுக்கு இறவா வரம் தந்தவர் கவி.மு.ஷெரீப். மகாபாரத பீஷ்மரின் தியாகத்தைப் போற்றுகிற ‘மச்சகந்தி’, ‘பல்கீஸ் நாச்சியார் காவியம்’ ஆகிய காவியங்கள், சிறுகதைகள், நாடகங்கள், அரசியல், மொழியியல் என்று கவிதைக்கு அப்பாலும் பல துறைகளில் தம்மை […]

Read more

மாஸ்தி சிறுகதைகள்

மாஸ்தி சிறுகதைகள், மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், தமிழில்: சேஷநாராயணா, சாகித்திய அகாதெமி, பக்.144, விலை ரூ. 120. சாகித்திய அகாதெமி விருதுபெற்ற, தற்கால கன்னடச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்படும் மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் கன்னடச் சிறுகதைகளின் எளிமையான, சிறப்பான மொழி பெயர்ப்பு இந்நூல். இதில் இடம்பெற்றுள்ள 15 சிறுகதைகளும் சுவாரஸ்யமானவையே. ‘எறும்புகளின் உலகம்39‘ சிறுகதை எறும்புகளின் வாழ்க்கை குறித்த வியக்கத்தக்க செய்திகளைக் கொண்டுள்ளது. ‘மண வாழ்க்கையில் புதுமை39‘ சிறுகதையில் பெண் சுதந்திரத்தின் கசப்பான மறுபக்கம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. ‘இதற்கு முன் சில காலம் […]

Read more

ஆர். சூடாமணி

ஆர். சூடாமணி, கே. பாரதி,  சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ.50. கருத்து வேறுபாட்டால் தனித்தனியே பிரிந்து வாழ நினைக்கும் ஓர் இளம் தம்பதி, ஆதரவற்ற ஓர் இளைஞனின் உயிரைக் காப்பாற்றும் நற்செயலில் ஈடுபடும்போது தங்களின் பிரிவும் கோபமும் பொருளற்றவை என்பதை உணர்ந்து மனம் மாறுகின்றனர் (பூமியினும் பெரிது), தன் வயதே உடைய சின்னப்பொண்ணு கழிவறை சுத்தம் செய்வதைப் பார்த்து மனம் கசியும் விஜயா அவளின் உண்மையான பெயரைக் கேட்க அவள் விஜயா என்று கூறுகிறாள். விஜயாவின் மனதில் ஒரு நிம்மதி (விஜயா), காரில் தனியே […]

Read more
1 2 3 4 5 7