தென் இந்திய வரலாறு

தென் இந்திய வரலாறு, கே.ஏ.நீலகண்டசாஸ்திரி, ஜீவா பதிப்பகம், விலைரூ.500. கல்வெட்டு, செப்பேடு, நாணயங்கள், இலக்கியம், செவிவழிச் செய்திகளை ஆய்ந்து வரலாறு எழுதப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், கேரளா பற்றிய தென் இந்திய வரலாறு சரியாக பதிவு செய்யப்படவில்லை என்ற குறை இருந்தது. அதை போக்கும் வகையில், இலங்கை நாட்டையும் இணைத்து, விரிவாக எழுதப்பட்ட வரலாற்று நுால். கி.மு., 300 முதல், கி.பி., 1600 விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி வரை எழுதியுள்ளார். மன்னர்களின் வீரம், கொடை, காதல், மக்களின் பொருளாதார நிலை, பண்பாட்டு வளம், இலக்கிய […]

Read more

தொல்காப்பியம்

தொல்காப்பியம், புலியூர்க்கேசிகன், ஜீவா பதிப்பகம், விலை 400ரூ. உலக மொழிகளின் இலக்கண வரம்பினை உறுதிப்படுத்தும் நூல்கள் அனைத்துக்கும் முற்பட்டது என்று போற்றப்படும் தொல்காப்பியத்திற்கு எளிய விளக்க உரையாக இந்த நூல் தயாராகி இருக்கிறது. நச்சினார்க்கினியர், இளம்பூரணனார் ஆகியோரின் உரைகளைத் தழுவி இந்த விளக்க உரை எழுதப்பட்டு இருக்கின்றது என்ற போதிலும், தொல்காப்பியம் முழுவதையும் புரிந்து கொள்ளத் தக்க வகையில் சுருக்கமான வரிகளைக் கொடுத்து இருப்பதன் மூலம் இந்த நூல் தனித்துவம் பெறுகிறது. தொல்காப்பியத்தின் ஒவ்வொரு கருத்துக்கும் விளக்க உரையுடன் எடுத்துக்காட்டுகள் கொடுத்து இருப்பதால் படிக்க […]

Read more

பிற்காலச் சோழர் சரித்திரம்

பிற்காலச் சோழர் சரித்திரம், டி.வி.சதாசிவ பண்டாரத்தார், ஜீவா பதிப்பகம், பக். 592, விலை 570ரூ. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவை என்று அறிஞர்கள் கருதுவனவற்றுள் அந்நாட்டின் சரித்திர நுால் சிறந்ததொன்றாம். முன்னோர் ஒழுகிக் காட்டிய உயர்ந்த நெறிகளையும் அன்னார் கொண்டிருந்த சிறந்த பண்பினையும், பின்னோர்க்கு நினைப்பூட்டி அவர்களை நல்வழிப்படுத்துவன நாட்டின் பழைய சரிதங்களே என்லாம் என்று தன் முன்னுரையில் கூறுகிறார் சதாசிவ பண்டாரத்தார். சோழன் விசயாலயன், முதல் ஆதித்த சோழன், முதல் பராந்தக சோழன், கண்டராதித்த சோழன், அரிஞ்சய சோழன், சுந்தர சோழன், உத்தம […]

Read more

தினம் ஒரு சிந்தனை

தினம் ஒரு சிந்தனை, அரிமழம் ப.செல்லப்பா, ஜீவா பதிப்பகம், விலை 200ரூ. பல்வேறு தலைப்புகளில் சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களின் துணுக்குத் தோரணமாக இந்த நூல் விளங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள 365 கருத்துக்களில் ஆன்மிக செய்திகள், வாழ்வில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய நற்பண்புகள், பிரபலமானவர்களின் வாக்கு, உண்ணும் உணவில் உள்ள சிறப்பு, நவபாஷாணம் என்றால் என்ன என்பவை போன்ற ஏராளமான பயன் உள்ள தகவல்கள் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 4/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை […]

Read more

சிலம்பொலியார் பார்வையில்

சிலம்பொலியார் பார்வையில், கே.ஜீவபாரதி,  ஜீவா பதிப்பகம், பக்.96, விலை ரூ.80. நூலாசிரியர் தொகுத்த”பட்டுக்கோட்டையார் பாடல்கள்' என்ற நூலுக்கும், நூலாசிரியர் எழுதிய புதுயுகக் கவிஞனும் புதியவன் குரல்களும் மற்றும் அப்துற்-றஹீம் வாழ்வியல் இலக்கியம் ஓர் ஆய்வு ஆகிய நூல்களுக்கும் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பனார் எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பே இந்நூல். சிலம்பொலி செல்லப்பனாரின் 85 -ஆவது பிறந்த நாள் சிறப்பு மலருக்கு நூலாசிரியர் எழுதிய கட்டுரை பின் இணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களின் சிறப்புகளை சிலம்பொலி செல்லப்பனார் எடுத்துக் கூறுகிறார். “மக்களின் இன்றைய தேவைக்கேற்ற புதுமையான […]

Read more

தென் இந்திய வரலாறு

தென் இந்திய வரலாறு, கே ஏ நீலகண்ட சாஸ்திரி, ஜீவா பதிப்பகம், விலை ரூ. 500. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி வரை தமிழகத்தில் நடைபெற்ற அத்தனை வரலாற்று நிகழ்வுகளும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன, தமிழகத்தின் புவியியல் அமைப்பு, பூர்வகுடி மக்களின் கலாச்சாரம், மௌரியப் பேரரசு, சாதவாகனர்களின் ஆட்சி,  பல்லவர், பாண்டியர் ஆகிய மூன்று அரசுக்கு இடையே நடைபெற்ற மோதல், பாமணி அரசர்கள், விஜயநகரப் பேரரசின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி ஆகியவை மிக விரிவாக இந்நூலில் தரப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட […]

Read more

பல்லவர் வரலாறு

பல்லவர் வரலாறு, டாக்டர் மா.இராசமாணிக்கனார், ஜீவா பதிப்பகம், பக். 312, விலை 260ரூ. பல்லவ மன்னர்களின் முன்னோர் யார், அவர்கள் தமிழர்களா என்ற கேள்விகளுக்கு, இன்னும் தீர்க்கமான விடை அறிவிக்கப்படவில்லை. பல்லவர்கள் கிரந்தம் எழுத்துகளை அறிமுகப்படுத்தினர்; பின், அவர்களே தமிழில் கல்வெட்டுகளை அமைத்தனர். வடமொழியை ஆதரித்த அவர்கள் தான், தமிழ் சிறக்கவும் உதவினர். தமிழகத்தில் கல்லாலும், மலையைக் குடைந்தும் கோவில்கள் கட்டி, கட்டடக் கலையை வளர்த்தனர். இந்நுால், பல்லவ மன்னர்களைப் பற்றி அறிந்து கொள்ள, வாசகர் இடையே ஆர்வத்தை துாண்டும். – சி.கலாதம்பி நன்றி: […]

Read more

சேர மன்னர் வரலாறு

சேர மன்னர் வரலாறு, அவ்வை சு.துரைசாமி, ஜீவா பதிப்பகம், விலை 220ரூ. இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, நாணயம், அகழ்வு ஆய்வுகள் கொண்டு ஒரு நாட்டின் வரலாறு எழுதப்படுகிறது. சேரர் வரலாறு பற்றி கே.ஜி.சேஷைய்யர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். தமிழில், பேராசிரியர் அவ்வை சு.துரைசாமி பிள்ளை, சேர நாடு முழுமையும் சுற்றி தொண்டி, வஞ்சி முதலிய வரலாற்று புகழ்மிக்க இடங்களை நேரில் கண்டு ஆய்வு செய்தார். மலைகள், ஆறுகள் முதலியவற்றின் முந்தைய பெயர்களையும், தற்போது வழக்கில் உள்ள பெயர்களையும் ஆய்ந்து இந்த நுாலில் வெளிப்படுத்தியுள்ளார். சேர நாட்டின் […]

Read more

பல்லவர் வரலாறு

பல்லவர் வரலாறு, மா.ராசமாணிக்கனார், ஜீவா பதிப்பகம், விலை 260ரூ. தமிழகத்தை 7 நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த பல்லவ மன்னர்களின் பூர்வீகம் எது என்பதுஇன்னும் உறுதிப்படாத நிலையிலும், கி.பி.250ல் தொடங்கி, கி.பி.882 வரை நீடித்த பல்லவ மன்னர்களின் ஆட்சி பற்றிய அரிய செய்திகளின் தொகுப்பாக இந்த நூல் ஆக்கப்பட்டு இருக்கிறது. பல்லவ மன்னர்கள் ஒவ்வொருவர் பற்றிய விவரம், அவர்களின் ஆட்சித் திறமை, அவர்கள் காலத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் என்று அனைத்து விவரங்களையும் அடக்கியுள்ள இந்த நூல், பல்லவ மன்னர்களின் வரலாற்றின் முழுமையான ஆவணமாகத் திகழ்கிறது. […]

Read more

கொங்கு தமிழக வரலாறு

கொங்கு தமிழக வரலாறு, கா.அப்பாதுரையார், ஜீவா பதிப்பகம், விலை 180ரூ. கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட பல பகுதிகளைக் கொண்ட கொங்கு மண்டலம் என்பது, பழங்காலந்தொட்டு மிகச் சிறப்புடன் விளங்கியது என்பதை, ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட இந்த நூல் தெளிவாக விளக்குகிறது. ஆதிகாலம் முதல் சங்க காலத்தின் இறுதியான கி.பி. 240 முடிய கொங்கு மண்டலம் எவ்வாறு சிறப்புடன் இருந்தது? அங்கு நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள், பல நாடுகளுடன் நடைபெற்ற வாணிபம், படையெடுப்புகள், மன்னர்களின் ஆட்சி முறை என்று பலதரப்பட்ட விஷயங்களை பன்மொழிப் […]

Read more
1 2 3 4