உயிர்ச்சுழி

உயிர்ச்சுழி, பாரதிபாலன், டிஸ்கவரி புக் பேலஸ், பக்.192, விலை 180ரூ. எந்த வீட்டில் இருக்கிறது இப்போது திண்ணை. புழுதி அடங்க எந்த வாசலும் தெளிக்கப் படுவதில்லை. புள்ளியிட்ட கோலமின்றி புழுதி அடித்துப் பூத்துக் கிடக்கிறது. ‘செம்மண் கோலமோ, மாக்கோலமோ, நெளி கோலமோ நெஞ்சில் மட்டும் தான். ஸ்டிக்கரிலே எல்லாம் வந்தாச்சு கிழித்து எறிவதற்குச் சவுகரியம்’ என்று பண்பாட்டுச் சிதைவை ஆதங்கத்தோடு சுட்டி, ‘நம்முடைய அடையாளங்களை நம் தாய் மண்ணில் இன்னமும் தோண்டி எடுக்க முடியும்’ என்ற நுாலாசிரியர், பல்வேறு இதழ்களில் வெளியான, 16 சிறுகதைகள் […]

Read more

தமிழ் நாவல்கள்

தமிழ் நாவல்கள், பொன்னீலன், டிஸ்கவரி புக் பேலஸ், பக்.232, விலை ரூ.220. உலகில் ஏற்படும் மாற்றங்கள் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மக்களின் மனநிலை, பண்பாடு, ஆதிக்கத்தன்மை, அடிமைத்தளை, பொருளாதாரநிலை, உணர்ச்சிகள், ரசனைகள், பழக்க, வழக்கங்கள் எல்லாவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. தமிழ் நாவல்களின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், பன்முகத்தன்மைகளுக்கும் கூட இந்த மாற்றங்கள் காரணமாக அமைந்துவிடுகின்றன. இந்த அடிப்படையில் தமிழில் தோன்றிய முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் தொடங்கி, சமகாலத் தமிழ் நாவல்கள் வரை இந்நூல் அறிமுகம் செய்வதுடன், நாவல்களின் உள்ளடக்கம், அவை […]

Read more

ஒளி வித்தகர்கள்

ஒளி வித்தகர்கள் – பாகம் 1, தமிழில்: ஜா.தீபா, டிஸ்கவரி புக் பேலஸ், பக்.160, விலை ரூ.150. உலக அளவில் பிரபலமான திரைப்பட ஒளிப்பதிவாளர்களில் ஏழுபேரின் பேட்டிகள் அடங்கிய நூல். MASTERS OF LIGHT என்ற ஆங்கிலநூலின் ஒரு பகுதி தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. காந்தி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பில்லி வில்லியம்ஸ்,  எக்ஸார்சிஸ்ட் ஒளிப்பதிவாளர் ஓவன் ராய்ஸ்மன்,  தி புளு லாகூன் ஒளிப்பதிவாளர் நெஸ்டர் ஆல்மன்ட்ராஸ் உள்ளிட்ட ஏழு ஒளிப்பதிவாளர்களின் திரைமொழி குறித்த உரையாடல்கள் கருத்தைக் கவர்கின்றன. இயக்குநர்தான் படத்தின் ஆணிவேர். இயக்குநரின் கற்பனையையும், […]

Read more

விநோத சந்திப்பு

விநோத சந்திப்பு (சீனத்துச் சிறுகதைகள்),  இராம.குருநாதன், டிஸ்கவரி புக் பேலஸ், பக்.112, விலை ரூ.100. 13 சீனத்துச் சிறுகதைகள் ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.1937 -1945 கால கட்டத்தில் ஜப்பான் சீனாவை ஆக்ரமித்தது அந்த ஆக்கமிப்பை எதிர்த்து சீன மக்கள் போராடினார்கள். அந்தப் போராட்டம் சீன மக்களிடையே ஏற்படுத்திய மாற்றங்களை காற்று, நெருப்பு விதை ஆகிய சிறுகதைகள் அற்புதமாகச் சித்தரிக்கின்றன. கற்பனையும் கனவும் மட்டும் ஒரு பெண்ணுக்கு இருந்தால் போதாது, எந்தப் பொறுப்பையும் சிறப்பாக ஏற்றுச் செயல்பட வேண்டும் என்பதைச் […]

Read more

கற்றுக்கொடுக்கிறது மரம்

கற்றுக்கொடுக்கிறது மரம், ஜெயபாஸ்கரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை ரூ: 150 ஹைக்கூ விளக்கம் தமிழில் குறிப்பிடத்தக்க ஹைக்கூ கவிஞராக அறியப்படுகிற லிங்குசாமியின் 15 ஹைக்கூ கவிதைகளை எடுத்துக்கொண்டு, அக்கவிதைகளின் அகவெளிப் பரிமாணங்களைப் பதிவுசெய்திருக்கிறார் ஜெயபாஸ்கரன். வாசகருக்குள் ஒரு கவிதை ஏற்படுத்துகிற அதிர்வுகள் அந்தந்த வாசகருக்குரிய உள்வாங்கும் சக்தியையும் ரசனையையும் உள்ளடக்கியதாக அமையும். இந்த நுட்பத்தைக் கைக்கொண்டு விஸ்தரித்துச் சொல்லப்படுகிற விளக்கம்தான் இந்நூல். ‘கூழாங்கல்லில் தெரிகிறது/ நீரின் கூர்மை’ என்கிற லிங்குசாமியின் கவிதையைப் பற்றி கூறும்போது ‘காண்பதற்குக் கண்கள் இல்லாமல், வடிமைக்க உளியும் சுத்தியலும் இல்லாமல், அவற்றைப் பற்றிப் […]

Read more

நடுகல்

நடுகல், தீபச்செல்வன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 180ரூ. இலங்கை ராணுவத்தின் அடக்குமுறைக்கும், அச்சுறுத்தலுக்கும் இடையேயான ஈழத்தமிழர்களின் ஈரமான வாழ்வு, இனம் காக்கப் போராடிய மாவீரர்களின் வலிமை, வலி என்று அத்தனையையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் கதைக்களம். கதையின் நாயகனாக தீபச்செல்வன் தானே பயணித்திருப்பதை வரிக்குவரி உணரமுடிகிறது. சிங்கள ராணுவத்தின் சித்ரவதைகள், தோட்டாவிலும் குண்டுகளிலும் சிக்குண்டு வாழ்விடம் சின்னாபின்னமான நிலையிலும் உறவுகளின் ஒற்றைப் புகைப்படமாவது கிட்டாதா என்று தேடும் முள்ளிவாய்க்கால் மக்களின் ஏக்கம், இன்றாவது நிஜமாக விடியாதா என்ற எதிர்பார்ப்பு. போரற்ற மாற்றுப் போராட்டத்தின் […]

Read more

ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்

ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள், ஜெயகாந்தன், தொகுப்பு: ஜெ.ஜெயசிம்மன், கா.எழில்முத்து, டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.300. தமிழ் சினிமா மாறியதும் மாறாததும் எழுத்து, சினிமா, பொது வாழ்க்கை எனக் கால்வைத்த அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்த அரிதான ஆளுமை ஜெயகாந்தன். அவரது சிறுகதைகள், நாவல்கள் அளவுக்கு சுவாரசியம் கொண்டவை அவரது கட்டுரைகள். அரசியல் அனுபவங்கள், பத்திரிகையுலக அனுபவங்கள் வரிசையில் எழுதிய ‘ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ இதுவரை வெளிவராத கட்டுரைகளுடன் தொகுக்கப்பட்டிருக்கிறது. வெறும் அனுபவங்கள் மட்டுமல்ல; தமிழ் சினிமாவின் சரித்திரம், அதன் கலாச்சாரம், […]

Read more

நாரணோ ஜெயராமன் கவிதைகள்

நாரணோ ஜெயராமன் கவிதைகள், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 150ரூ. வேலி மீறிய கிளை’ கவிதைத் தொகுதி வழியாகச் சிறந்த கவிஞராக அடையாளம் காணப்பட்டவர். அன்றாட வாழ்வின் செக்குமாட்டுத் தன்மை, பழக்கங்களின் சுமைகளிலிருந்து விடுபட்டுப் பறக்க எண்ணிய வலுவான நவீனத்துவக் குரல்களில் ஒன்று இவருடையது. ஜே.கிருஷ்ணமூர்த்தியில் உந்துதல் பெற்ற புதுக்கவிஞர். ‘ஒதுங்கி நின்று, அலட்சியமும், நெளிவும், புலனுலகை அது உள்ளபடியே துணிந்து, பரிந்து கண்கொண்டு அனுபவிக்கும் விவேகமும், அந்த விவேகத்தைப் பேச்சமைதி சார்ந்த ஒரு சரஸமொழியில் வெளியிடும் விசேஷத்தன்மையும் நாரணோ ஜெயராமனுடையவை’ என்று பிரமிள் […]

Read more

நடுகல்

நடுகல், தீபச் செல்வன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 180ரூ. நினைவுகளை இழப்பதற்கில்லை தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து முள்ளிவாய்க்கால் ஊடாக, ஈழத்தில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் இக்காலத்தையும் உட்படுத்திய‌ முப்பது ஆண்டு காலவெளியில் பயணிக்கிறது தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவல். இதுவே ஈழ மக்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்திய காலம், ஈழ மக்களை ஏதிலிகளாய் அலையச் செய்த காலம், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏந்தச் செய்த காலம். இக்காலத்தினூடே புலிகள் இயக்கம், ஈழ இயற்கை வளம், பண்பாட்டுக் கலாச்சாரம் போன்றவற்றைப் பேசிச் செல்கிறது இந்நாவல். போர் வாழ்க்கையை, முள்வேலி முகாம்களின் […]

Read more

மீன்கள் உறங்கும் குளம்

மீன்கள் உறங்கும் குளம், பிருந்தா சாரதி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 100ரூ. கவிதை வடிவங்களிலேயே யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி ஹைக்கூவுக்கு இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அந்தச் சின்ன, சிறிய மூன்றடி வடிவம், அழகான படிமங்களால் நுட்பமான வெளியீட்டு முறை, அதன் எளிமை ஆகியவையே ஈர்ப்புக்குக் காரணம். அந்த வகையில் பிருந்தா சாரதி எழுதிய இந்த ஹைக்கூ கவிதைகள் நெஞ்சை அள்ளுகின்றன. மணல் வீடு கட்டி விளையாடுகிறது அகதியின் குழந்தை. ‘இரு நாட்டுக் கொடிகளையும் ஒரே மாதிரி அசைக்கிறது எல்லையில் வீசும் […]

Read more
1 2 3 4 7