கடவுள் கனவில் வந்தாரா?

கடவுள் கனவில் வந்தாரா?, பட்டுக்கோட்டை பிரபாகர், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 192, விலை 170ரூ. வெகுஜன எழுத்துலகத்துக்கு நன்கு பிரபலமானவர் பட்டுக்கோட்டை பிரபாகர். துப்பறியும் நாவல்கள் எழுதுவது அவருக்கு கைவந்த கலையாக இருந்தாலும், சிறுகதையிலும் அதே தரத்தையும், தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறார். அந்த வகையில் ‘கடவுள் கனவில் வந்தாரா?’ சிறுகதை தொகுப்பிலும் வாசகனை கதைக்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறார். ஒவ்வொன்றும் குடும்ப உறவுகள், காதல், சமூகம் பற்றிய கதையாக இருப்பினும், இன்றைய நடைமுறை மற்றும் இளைய தலைமுறையினரின் உலகத்தை அப்படியே படம் பிடித்து யதார்த்தத்தின் […]

Read more

கடவுள் கனவில் வந்தாரா?

கடவுள் கனவில் வந்தாரா?, பட்டுக்கோட்டை பிரபாகர், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 192, விலை 170ரூ. வெகுஜன எழுத்துலகத்துக்கு நன்கு பிரபலமானவர் பட்டுக்கோட்டை பிரபாகர். துப்பறியும் நாவல்கள் எழுதுவது அவருக்கு கைவந்த கலையாக இருந்தாலும், சிறுகதையிலும் அதே தரத்தையும், தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறார். அந்த வகையில் ‘கடவுள் கனவில் வந்தாரா?’ சிறுகதை தொகுப்பிலும் வாசகனை கதைக்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறார். ஒவ்வொன்றும் குடும்ப உறவுகள், காதல், சமூகம் பற்றிய கதையாக இருப்பினும், இன்றைய நடைமுறை மற்றும் இளைய தலைமுறையினரின் உலகத்தை அப்படியே படம் பிடித்து யதார்த்தத்தின் […]

Read more

சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமாரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 200ரூ. கவி அனுபவம் ‘மின்மினிப் பூச்சிகளற்ற இரவை ஈடு செய்ய முடிவதில்லை நட்சத்திரங்களால்’ என்கிறது இத்தொகுப்பின் ஒரு கவிதை. அன்றாட வாழ்வின் சிறு சிறு சந்தோஷங்கள், துக்கங்கள், துக்க வீட்டில் அழும் காதலியைக் கண்டு கொள்ளும் காதல், எப்போதாவது பெய்யும் மழை மீதான கவிக்கோபம், குருட்டு பிச்சைக்காரியின் உடலைக் கொத்தும் கண்கள், குழந்தைகளின் குழந்தைத் தன்மை மீதான வாஞ்சை, சொற்களை செலவழித்துவிட்டனின் குரவளையை நெரிக்கும் மௌனம், தன்னிலை மீறும் வாழ்வின் யதார்த்தம் என […]

Read more

சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள்

சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள், தொகுப்பு சுப்ரபாரதி மணியன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 350, விலை 330ரூ. அமரர் ஆகிவிட்ட சுகந்தி சுப்ரமணியன் சுப்ரபாரதி மணியனின் இல்லத்தரசி. மனஉளைச்சல்களுக்கு ஆளாகி மரித்துப் போன இவர் ஒரு குறிப்பிடத்தகுந்த கவிதாயினி. இந்தப் புத்தகம் மூன்று பகுதிகளைக் கொண்டது. 1.சுகந்தியின் கவிதைகள். 2.சுகந்தியின் சிறுகதைகள். 3.சுகந்தியின் டயரிக் குறிப்புகள்… ஆனால், புத்தகத்தின் ஏராளமான பக்கங்களைச் சுகந்தியின் கவிதைகளே ஆக்கிரமித்து இருக்கின்றன… ‘காதல்’ என்றொரு கவிதை! சாக்கடை அரசியலும் பெண்ணை உடலோடு தோலுரிக்கவே பிறந்த சினிமாவும்  – அதன் […]

Read more

சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமாரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 200ரூ. புதுக்கவிதைகளின் தொகுப்பு. ஐஸ் பெட்டிக்குள் ஒருநாள் பிணமாக உறங்கப் போகிறோம் என்பதற்கான ஒத்திகைதான் இப்போது நாம் அனுபவிக்கும் ஏ.சி. சுகம் என்பதை “குளிரூட்டப்பட்ட அறையில் உறங்கி வாழ்வின் கடைசி நிமிடங்களுக்காக ஒத்திகை பார்ப்பது அனிச்சையாகி விட்டது” என்று கோ.வசந்தகுமாரன் அழகுற எடுத்துரைக்கிறார். “துக்க வீட்டில் நீ அழும் அழகைக் கண்கொட்டாமல் பார்த்து ரசிக்கிறது ஈவிரக்கமற்ற என் காதல்”, “கடல் பிரிய மனமில்லை. கைக்குட்டையில் நனைத்துக் கொண்டேன்” என்பன போன்ற சுவையான கவிதைகளை […]

Read more

அங்குசம் காணா யானை

அங்குசம் காணா யானை,பிச்சினிக்காடு இளங்கோ, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 180ரூ. நேயத்தைத் தேடி அலைகின்ற வாழ்வில், மாயத்தைப் பார்த்தே மயங்கியிருக்கிறது மானுடம். இயற்கையோ எங்கும் நேசத்தை நெசவுசெய்து வைத்திருக்கிறது. அது நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது என்பதை கவிமணத்துடன் சொல்லியிருக்கிறார். நெடுங்கவிதையும் உண்டு. குறுங்கவிதையான ஹைக்கூவும் இருக்கிறது. நன்றி: குமுதம், 26/7/2017

Read more

தமிழ் பண்பாட்டு அடையாளங்கள்

தமிழ் பண்பாட்டு அடையாளங்கள், ந. முருகேச பாண்டியன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 95, விலை 80ரூ. பண்பாட்டுத் தடயங்களே மொழியின், அது பேசும் இனத்தின் முன்னேற்றப் பதிவுகள். சம கால தமிழ் மண்ணின் அடையாளங்களை எட்டு தலைப்புகளில் ஆசிரியர் எடுத்து எழுதியுள்ளார். தன் வாழ்வியல் அனுபவங்களை சமூக சிந்தனைகள் கலந்து, கருத்தரங்க நோக்கிலும் இதழ்களிலும், எழுதியதன் தொகுப்பு இது. ஆசிரியரின் அனுபவ முதிர்ச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவாக இனிக்கிறது. வெகுசனப் பண்பாட்டில் மருந்து கடை விளம்பரங்கள், புத்தகமோ புத்தகம், பதிப்பக அரசியல் பின்புலம், தமிழ்ப் […]

Read more

சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமார், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 200ரூ. மனிதனால் படைக்கப்பட்டது மொழி. ஆனால் மனிதனிலிருந்து கவிஞனைப் படைப்பது கவிதை. மொழி கருவி. கவிதையோ படைப்பாளி. அருமையான கவிதை தளத்தின் மேலிருந்து தகித்து ஒளிர்கிறார் வசந்தகுமாரன். தனித்தனி அனுபவங்களின் வெளியீடு அல்ல இக்கவிதைகள். ஒரே நீண்ட அனுபவச் சங்கிலியின் வெவ்வேறு கண்ணிகள். கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டு, கருத்துகளாகவே மீந்துவிடும் மேஜைக் கவிதைகளிலிருந்து வேறுபடுபவை. வசந்தகுமாரனின் மொழி ஆரவாரமற்று வெளிப்பாட்டுக்குத் தேவையான அளவு மட்டுமே கைக்கொள்ளப்படுகிறது. வெளிப்பாடு, அனுபவம் இரண்டும் தீவிரம் பெறும்போது […]

Read more

சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமாரன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 232, விலை 200ரூ. “பிரமிக்காதே பூமியில் தானிருக்கிறது மலையின் உச்சி” மலைமேல் ஏற, மலை உச்சியிலிருந்து பயணத்தைத் தொடங்கச் சொல்லும், அனுபூதி உத்தி இக்கவிதைத் தொகுப்பில் அதிகம். படிமத்தின் ஆட்சியில் சொல்ல வரும் கருத்துக்களை காட்சிப்படுத்திவிடுகிறார் கவிஞர். சமூகம், காதல், நடப்பியல் ஆன்மிகம், எள்ளல், பிரபஞ்சத் தேடல்கள் என்று அடர்த்திமிக்க கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 31/5/2017.

Read more

சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள்

சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 330ரூ. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் மனைவி சுகந்தி. சிற்நத கவிஞரான அவர், கவிதைகளுடன் சிறுகதைகளும் எழுதினார். அற்புதக் கவிஞராக புகழ் பெற்ற சுகந்தி திடீரென மனநிலை பாதிக்கப்பட்டார். அதன் பிறகும் கவிதைகள் எழுதினார். 11/2/2009ல் காலமானார். அவர் முன்பு எழுதிய ஆழமான கவிதைகளும், பிற்காலத்தில் எழுதிய கவிதைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சுகந்தியின் கணவர் சுப்ரபாரதிமணியன் இந்நூலை தொகுத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 23/3/2017

Read more
1 2 3 4 5 6 7