கவிஞர் அறை சுஜா – கோபி

கவிஞர் அறை சுஜா – கோபி, கோபி கண்ணதாசன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 112, விலை 90ரூ. கண்ணதாசனின் மட்டுப்பட்ட மதுப்பழக்கம் பிரபலமான மனிதர்களின் சாதாரண விஷயங்கள் கூட பதிவாகி விடுகின்றன. சாதாரணமான மனிதர்களின் அபூர்வமான விஷயங்கள் கூடப் பதிவாவதில்லை. இது ஒரு சமூக முரண். இந்தச் சூழலில், கவிஞர் கண்ணதாசனின் மகன் கோபி கண்ணதாசன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகத்தை எந்த வகையில் சேர்ப்பது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. கவிஞரின் உணவுப் பழக்கம், மட்டுப்பட்ட மதுப் பழக்கம் எனப் பல சுவாரசியமான […]

Read more

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும், பிரேம், ரமேஷ், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 120, விலை 100ரூ. இசைக்கும் சமூகத்துக்குமான உறவு, இசைக்கும் கலாசாரத்துக்குமான உறவு, காலந்தோறும் இசை மாறி வந்த விதம் ஆகியவற்றை இந்நூல் விளக்குகிறது. இளையராஜாவின் இசைப் பங்களிப்பு, அவர் உருவாக்கியவை, சாதித்தவை, நாட்டுப்புற இசையை பிற இசையமைப்பாளர்கள் பயன்படுத்தியதற்கும் இளையராஜா பயன்படுத்தியதற்குமான வேறுபாடு, அவரின் தனித்துவம் பற்றியெல்லாம் இன்னொரு கட்டுரை சொல்கிறது. இளையராஜா பற்றி 2002 ஆம் ஆண்டு அ. மார்க்கஸ், முன் வைத்த பார்வைகளை விமர்சனம் செய்யும் கட்டுரையும் […]

Read more

அங்காடித் தெரு

அங்காடித் தெரு, வசந்தபாலன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 250ரூ. அங்காடித் தெரு திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, மக்களின் பிரச்சினைகளைப் பேசிய படம் ஆகும். தமிழ் சினிமாவில் சாதாரண மக்களின் பிரச்சினையைப் பொத்தம் பொதுவாக பேசாமல் வெளிப்படையாகப் பேசிய திரைப்படங்களில் முதலிடம் மட்டுமல்ல, முக்கியமான இடத்தையும் பெற்றது. அதனால்தான் அது மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்த சினிமா வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு அதன் திரைக் கதை இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. இயக்குநர் ஜி. வசந்தபாலன் எழுதிய இந்தத் திரைக்கதை மெருகு குறையாமல் […]

Read more

லாக்கப்

லாக்கப், சந்திரகுமார் (ஆட்டோ சந்திரன்), டிஸ்கவரி புக் பேலஸ். அன்றாட பிரச்னைக்கு கிடைத்த வரவேற்பு! ஆட்டோ சந்திரன் என்ற சந்திரகுமார் எழுதிய லாக்கப் என்ற நாவலை படித்தேன். டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டு உள்ளது. கோவையை சேர்ந்த ஒரு இளைஞன் வேலைக்காக, பல்வேறு இடங்களுக்குச் செல்கிறார். 20வது வயதில், ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள, நெடுஞ்சாலை உணவகத்தில் வேலைக்கு சேர்கிறார். ஒரு நாள், அவர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்கின்றனர். கைதுக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. காவல் நிலையத்தில், திருட்டுக் குற்றம் […]

Read more

புத்தகங்கள் பார்வைகள்

புத்தகங்கள் பார்வைகள், வெளி ரங்கராஜன், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 128, விலை 100ரூ. வாசிப்பின் வழியே விரியும் உலகம் நாடகம், சினிமா, சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை என கலை, இலக்கியம் சார்ந்த புத்தகங்களைப் பற்றிய வெளி ரங்கராஜனின் கருத்தோட்டங்களை உள்ளடக்கியது இந்தப் புத்தகம். வெளி ரங்கராஜன், கலை இலக்கிய தளத்தில், பல ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருபவர். தான் வாசித்த புத்தகங்கள் பற்றிய தனது விமர்சனத் தன்மையற்ற எளிய மதிப்பீடுகளை நம் முன் வைக்கிறார். புத்தகங்களைப் பற்றிய அறிமுகமாகவும், வாசிப்பவர்களுக்குத் […]

Read more

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள், பொன். வாசுதேவன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 488, விலை 400ரூ. புலன் விசாரணையில் தெரியாத புதிர்கள் ‘இரண்டாம் வகுப்பிலேயே பாட்டியிடம் இலக்கணம் படித்தேன்’ என்ற பிரகாஷின் முகப்பு வரிகளுக்குப் பின், தொகுப்பின் கதைகள் துவங்குகின்றன. முப்பத்தியொரு கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பைப் படிக்கும்போது, அதை நம்பித்தான் ஆகவேண்டும். கதையின் இரண்டாம் வாக்கியத்துக்குப் போகும்போதே, வாசகர்கள் எங்கே நின்று, கதை மாந்தர்களைத் தொடரவேண்டும் என, கடிவாளம் கட்டி விடுகிறார் பிரகாஷ். வாசகர்களுக்குத் தான் கடிவாளமே தவிர, கதை மாந்தர்களுக்கு இல்லை. […]

Read more

மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு

மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு, யமுனாராஜேந்திரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 300ரூ. பல்வேறு காலகட்டங்களில் எழுத்தாளர் யமுனா ராஜேதிரன் எழுதிய 18 கட்டுரைகளின் தொகுப்பு. உலகம், இந்தியா மற்றும் தமிழக அளவில் நடைபெற்ற சம்பவங்களைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகளை ஓர் ஆய்வுரை என்றே சொல்லலாம். ஜெயகாந்தனின் கருத்துலகம், எம்.ஜி.ஆர். எனும் மாபெரும் விருட்சம் போன்றவை யதார்த்த நிலையைப் பிரதிபலிக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 6/1/2016.   —- நபி நேசம் நம் சுவாசம், மல்லவி பி.எம்.கலீல் ரஹ்மான், எஸ்.கே.எஸ். பப்ளிகேஷன்ஸ், விலை […]

Read more

வானம்பாடி

வானம்பாடி, த. கோவேந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 420, விலை 350ரூ. கோவையிலிருந்து வானம்பாடி புதுக்கவிதை இதழ் வெளிவருவதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்னரே வேலூரிலிருந்து புலவர் த.கோவேந்தன் வானம்பாடி என்ற பெயரில் கவிதை இதழை வெளியிட்டு, ஒரு பெரும் மரபுக்கவிதை பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளார். அந்த கவிதை இதழில் வந்த கவிதைகளின் தொகுப்பே இந்நூல். தமிழறிஞர்கள் மு.வ., அ.அப்பாதுரை, அண்ணா, வேங்கடபதி, அ.இ.பரந்தாமனார், புலவர் குழந்தை, டாக்டர் பூவண்ணன், பெருஞ்சித்திரனார், ம.இலெ. தங்கப்பா, சுப்பு ஆறுமுகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதைக்கானத்தை இதில் பதிவு […]

Read more

கனவு சினிமா

கனவு சினிமா, க. மணிகண்டன், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 128, விலை 100ரூ. ஒரு உதவி இயக்குநரின் அனுபவங்களின் பதிவாக மட்டும் நில்லாமல், சினிமா இயக்குநராக வேண்டும என்ற கனவோடு வரும் இளைஞர்களுக்கு சொல்லித்தரும் அனுபவப்பாடமாகவும் இந்நூலைத் தந்துள்ளார் நூலாசிரியர். வாய்ப்புக்காக பல இயக்குநர்களைத் தேடிப் போனதை, கேட்டறிந்த உண்மைகளை, கண்டுணர்ந்த அனுபவங்களை கனவு சினிமாவாக பதிவு செய்துள்ளார். வாசிப்பவர்களுக்கு சுவாரசியத்தைத் தர கற்பனை கலந்திருக்கிறார். அதுதானே சினிமா. சினிமாவை சுவாசிப்பவர்கள் வாசிக்க வேண்டிய நூல். நன்றி: குமுதம், 3/8/2015.   […]

Read more

திருவாசகம்

திருவாசகம், இந்துமதி பதிப்பகம், சிதம்பரம், விலை 300ரூ. திருமுறைகளில் எட்டாம் திருமுறை திருவாசகம் ஆகும். திருவாசகத்திற்கு உருகார் வேறு ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது முன்னோர் கூற்று. திருவாசகத்திற்கு இதற்கு முன்னர் பலரும் உரை எழுதியுள்ளனர். இருந்த போதிலும் பேராசிரியர் அ. ஜம்புலிங்கம் சீர்களைப் பிரித்து அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் உரை எழுதியுள்ளார். மேலும் மாணிக்கவாசகர் வரலாறு, திருவாசகத் தனிச் சிறப்பு போன்ற பல பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்த உரை நூலில், மாணிக்கவாசகரின் பாடல் நயங்கள், சைவ சித்தாந்தக் கருத்துகள், […]

Read more
1 4 5 6 7