நிழற்பட நினைவலைகள்

நிழற்பட நினைவலைகள், நேஷனல் செல்லையா, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 130ரூ. திரைத் துறையில் தொழில்நுட்பப் பிரிவுகளில் பணியாற்றியவர்களின் அனுபவங்கள் தனிச்சிறப்பு மிக்கவை. நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் பக்கங்களை அறிந்த அந்தக் கலைஞர்கள் எழுதும் புத்தகங்களில் அதுபோன்ற அனுபவங்கள் அசலாக, இயல்பாகப் பதிவாகிவிடும். புகைப்படக் கலைஞராகப் பணியாற்றிய நேஷனல் செல்லையாவின் அனுபவக் குறிப்புகள் அடங்கிய இந்தப் புத்தகமும் அப்படித்தான். ஏவிஎம் ஸ்டுடியோவில் இளம் வயதிலேயே அலுவலக உதவியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் செல்லையா. ‘ஓர் இரவு’ படத்துக்காகக் கதை-வசனம் எழுதவந்த அண்ணாவுக்கு வெற்றிலை, சீவல், […]

Read more

கதை திரைக்கதை வசனம் இயக்கம்

கதை திரைக்கதை வசனம் இயக்கம், இரா. பார்த்திபன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 250ரூ. திரைக்கதை திரையான கதை எதையும் வித்தியாசமாகச் செய்யும் முனைப்பே ஒரு படைப்பாளியாக பார்த்திபனின் அடையாளம். அவர் எழுதி இயக்கி வெற்றி பெற்ற ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ சினிமா அப்படியான முயற்சிக்கு ஓர் புத்தகம் இப்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் திரைக்கதை, திரைக்கதை எழுதுபவர்களைப் பெரிதும் ஈர்த்திருந்தது. குறிப்பிட்ட கதாபாத்திரம் எந்த நிலையில் இருக்க வேண்டும், என்ன ஆடையை எப்படி அணிந்திருக்கவேண்டும் என்பது உட்பட அனைத்து விவரங்களும் நூலில் தரப்பட்டிருக்கின்றன. […]

Read more

அச்சப்படத் தேவையில்லை

அச்சப்படத் தேவையில்லை, சீனிவாசன் நடராஜன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 100ரூ. அப்பாவை புதுப்பிப்பது? இலங்கையில் பிறந்த ஆனந்தகுமாரசாமி, அந்தையை இழந்த நிலையில் இரண்டு வயதுக் குழந்தையாக அவருடைய தாயாரால் லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கல்வி பெற்றார். ஆனாலும், இந்தியக் கலை, பண்பாடுகளின் தாக்கம் அவரிடம் நிரம்பவே குடிகொண்டது. தம்முடைய குழந்தைகளுக்கு ராமா, நாரதா, ரோகிணி என்றெல்லாம் பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறார் டாக்டர் ஆனந்தகுமாரசாமி. தம்முடைய வாழ்நாள் முழுவதும், உலகெங்கும் பயணம் செய்து அவர் சேர்த்து வைத்த அரிய கலைப் பொக்கிஷங்கள் அனைத்தும் தற்போது பாஸ்டன் […]

Read more

உலோகம் உரைக்கும் கதைகள்

உலோகம் உரைக்கும் கதைகள், ஜெ.ஜெயசிம்மன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 150ரூ. உலோகம் உரைக்கும் கதைகள் என்ற இந்நுால், பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் புதல்வர் மொழிபெயர்த்த நுாலாகும். ‘TILES ABOUT METAL’ என்ற நுாலின் தமிழ் வடிவம். படிப்பதற்கு ஏற்றதாய் தெளிவான எளிய நடையில் இந்நுால் உருவாகியிருக்கிறது. உலோகங்களின் பெயரைத் தமிழ்ப் படுத்தியுள்ள சிறப்பு பாராட்டக் கூடியது. என்றாலும் அதை புரிந்து கொள்வதற்கு சற்றே சிரமப்பட வேண்டியிருக்கிறது. சான்றாக, இலிதியம், மகனிச்சயம், ஏலமினியம், கோபாலது, துங்கஸ்டன், பீலாதினம் என்பன. 16 உலோகங்களைப் பற்றிய தகவல் […]

Read more

உலோகம் உரைக்கும் கதைகள்

உலோகம் உரைக்கும் கதைகள்,  ஜெ.ஜெயசிம்மன்,டிஸ்கவரி புக் பேலஸ், பக்.160, விலை ரூ.150. சோவியத் ரஷியாவைச் சேர்ந்த வெனெட்ஸ்கி என்பவர் எழுதிய டேல்ஸ் எபவுட் மெட்டல் என்கிற நூலின் தமிழாக்கம் இது. நமது அன்றாட வாழ்வில் பயன்பாட்டில் இருக்கக் கூடிய பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் போன்ற உலோகங்கள் பற்றியும், நாம் அதிகம் அறிந்திராத இலிதியம், பெரிலியம், நையோபியம், ஜிர்க்கானியம் போன்ற உலோகங்கள் பற்றியும் விரிவாகவும், சுவையாகவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. பொன்னைப் பற்றிக் கூறும்போது, பொன்னாசையால் பெரும் துன்பத்துக்கு ஆளான மைதாஸ் (மிடாஸ்) கதையைக் […]

Read more

சிறுகதையும் திரைக்கதையும்

சிறுகதையும் திரைக்கதையும், ஜெயகாந்தன், தொகுப்பு ஜெ.ஜெயசிம்மன், டிஸ்கவரி புக் பேலஸ். விலை 160ரூ. ஒரு காட்சியை படமாக்குவது எப்படி? திரைக்கதையை வடிவமைப்பது எப்படி? என்பது நுணுக்கத்துடன் விளக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் சாதிக்க துடிக்கும் இளைய தலைமுறையினருக்கு இந்நூல் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினத்தந்தி,11/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சிறுகதையும் திரைக்கதையும்

சிறுகதையும் திரைக்கதையும்,  ஜெயகாந்தன்,  டிஸ்கவரி புக் பேலஸ், பக்.172, விலை ரூ.160. ஜெயகாந்தன் அறுபதுகளில் எழுதிய சிறுகதைகள் ஒவ்வொன்றும் மறக்க இயலாதவை. மனித வாழ்வின் சாராம்சத்தை உயிர்ப்பு மிக்க அனுபவங்களினூடே பிழிந்து தருபவை. அந்த வரிசையில் இந்நூலில் இடம் பெற்றுள்ள ‘நான் இருக்கிறேன்‘ சிறுகதையையும் சொல்லலாம். தொழுநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பிச்சைக்காரர், வாழ்க்கையில் ஆழ்ந்த பிடிப்புடன் இருக்கிறார். கால்களில்லாத மாற்றுத்திறனாளி ஒருவர், ரயிலில் விழுந்து தற்கொலை செய்ய முயலும்போது அவரைத் தடுத்து மீட்கிற பிச்சைக்காரர், வாழ்க்கையின் மீது நம்பிக்கையை மாற்றுத்திறனாளிக்கு உருவாக்குகிறார். ஆனால் […]

Read more

சிறுகதையும் திரைக்கதையும்

சிறுகதையும் திரைக்கதையும், ஜெயகாந்தன், டிஸ்கவரி புக் பேலஸ், பக்.172, விலை ரூ.160.  ஜெயகாந்தன் அறுபதுகளில் எழுதிய சிறுகதைகள் ஒவ்வொன்றும் மறக்க இயலாதவை. மனித வாழ்வின் சாராம்சத்தை உயிர்ப்பு மிக்க அனுபவங்களினூடே பிழிந்து தருபவை. அந்த வரிசையில் இந்நூலில் இடம் பெற்றுள்ள ‘நான் இருக்கிறேன்’ சிறுகதையையும் சொல்லலாம். தொழுநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பிச்சைக்காரர், வாழ்க்கையில் ஆழ்ந்த பிடிப்புடன் இருக்கிறார். கால்களில்லாத மாற்றுத்திறனாளி ஒருவர், ரயிலில் விழுந்து தற்கொலை செய்ய முயலும்போது அவரைத் தடுத்து மீட்கிற பிச்சைக்காரர், வாழ்க்கையின் மீது நம்பிக்கையை மாற்றுத்திறனாளிக்கு உருவாக்குகிறார். ஆனால் […]

Read more

100 சிறந்த சிறுகதைகள்

100 சிறந்த சிறுகதைகள், தொகுப்பு எஸ்.ராமகிருஷ்ணன், டிஸ்கவரி புக் பேலஸ், இரண்டு பாகங்கள் 800ரூ. தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணன் தனது வாசகர்களுக்குப் பரிந்துரைத்த 100 முக்கியமான சிறுகதைகளின் தொகுப்பு இது. நூறாண்டுகளைக் கடந்த தமிழ்ச் சிறுகதையின் உச்சங்களைப் பட்டியலுக்குள் அடக்கிவிடமுடியாதுதான். ஆனாலும், புதுமைப்பித்தன் தொடங்கி சந்திரா வரைக்கும் தமிழ்ச் சிறுகதை கடந்து வந்திருக்கும் பாதையைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். சிறுகதையின் காதலர்களுக்கு இது ஒரு பொக்கிஷம் சிறுகதை எழுத விரும்பும் இளம் எழுத்தாளர்களுக்கு அருமையான வழிகாட்டி. நன்றி: தி இந்து, […]

Read more

கொம்மை

கொம்மை, பூமணி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 555ரூ. கரிசல் வட்டார இலக்கிய ஆளுமைகளுள் மிக முக்கியமானவர், எழுத்தாளர் பூமணி. பிறகு, வெக்கை ஆகிய நாவல்களுக்குப் பின், அவர் எழுதிய, அஞ்ஞாடி நாவல், சாகித்ய அகாடமி விருது பெற்று, இலக்கிய உலகில் பெரும் கவனம் பெற்றது. இந்த ஆண்டு, அவருடைய, கொம்மை என்ற புதிய நாவல் வெளிவந்திருக்கிறது. படத்திற்கான அட்டை ஓவியமே, வாசகர்கள் இடையே நாவலுக்கான எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. நன்றி: தினமலர், 20/1/2018

Read more
1 2 3 4 5 7