வாழ்வே ஒரு மந்திரம்

வாழ்வே ஒரு மந்திரம், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், பக்.280, விலை ரூ.260. ஒரு நூறு சமயக் கிரந்தங்களையும், அவற்றிற்கான ஓராயிரம் வியாக்கியானங்களையும் வாசிக்கவும் யோசிக்கவும் எங்களுக்கு நேரமில்லை; ஆனால் அவற்றிலிருந்து வடித்தெடுத்த சாரத்தை யாராவது கொடுத்தால் பருகத் தயார் என்ற நிலையில்தான் இன்று பெரும்பாலானவர்கள் உள்ளனர். அத்தகையோரின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளிவந்துள்ள தகவல் திரட்டுதான், இந்த நூல். திருமந்திர கருத்துகளை மையமாகக் கொண்டு இன்றைய இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை நெறிகள் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.  எட்டு தலைப்புகளில் ஏராளமான […]

Read more

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், பக்.312, விலை ரூ.250. தமிழருவி மணியனின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் தன்வரலாற்று நூல் இது. எத்தனையோ அரசியல் தலைவர்கள் சுயசரிதை நூலை இயற்றி இருக்கிறார்கள்; ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு நூலாக இது விளங்குகிறது. தமிழறிவு மணியனைப் போலவே அவரது எழுத்துக்களும் எளிமையின் அடையாளமாக இருப்பது நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது. அரசியலில் தடம் மாறாமல், கொண்ட கொள்கையிலிருந்து மனம் மாறாமல், 70 ஆண்டு காலம், தான் வாழ்ந்த வாழ்க்கையை வாசகனுடன் பகிர்ந்துள்ளார் […]

Read more

விடை தேடும் வினாக்கள்

விடை தேடும் வினாக்கள், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், விலை 160ரூ. அன்றாட வாழ்வுக்குத் தேவையான அறிவுரைகள், ஆன்மிகக் கருத்துகள், சிந்தனையைத் தூண்டும் செய்திகள் போன்றவற்றை ஏராளமான கேள்விகளுக்குப் பதிலாக மிக நேர்த்தியாகச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர். அனைத்து கருத்துகளையும், ஆன்மிகப் பெரியோர்கள், பல அறிஞர்கள் ஆகியோரின் மேற்கோள்களுடன் தந்து இருப்பதால், அந்தக் கருத்துக்கள் அனைவரையும் கவரும் வண்ணம் திகழ்கின்றன. வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள் மற்றும் திருமூலரின் திருமந்திரம் உள்பட பல நூல்களின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டியும், ஆங்காங்கே ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான சிறுகதைகள் மூலமும் […]

Read more

விடைதேடும் வினாக்கள்

விடைதேடும் வினாக்கள், வாழ்வியல் – ஆன்மிகம் – தத்துவம் குறித்த தேடல்களுக்கான விடைகள், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம்,  பக்.216, விலை ரூ.160. விடைதெரியாத கேள்வி களுக்கு இடையில்தான் வாழ்க்கை நதி ஓடிக் கொண்டிருக்கிறது என இந்நூல் உருவாகியதற்கான காரணத்தை ஒரு வரியில் சொல்கிறார் நூலாசிரியர். எந்தக் கேள்வியாக இருந்தாலும் அதற்கு அறிஞர் பெருமக்கள், ஆன்மிகப் பெரியோர்கள், தத்துவ ஞானிகள், கவிஞர்கள் ஆகியோர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதையே பெரும்பாலும் தனது பதிலாகத் தந்திருக்கிறார். என்னைச் சுற்றியிருப்பவர்கள் தீமையின் வடிவங்களாக வலம் வரும்போது, அவர்களிடமிருந்து எப்படி என்னை […]

Read more

திரையுலகின் தவப்புதல்வன்

திரையுலகின் தவப்புதல்வன்,  தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம்,  பக்: 248. விலை ரூ.175. சினிமாவை எப்படி ரசிக்க வேண்டும் என அறிவுறுத்தும் திரையியல் ஆய்வு நூல் என்றே இந்நூலைக் கூறலாம். காரணம், சிவாஜியின் நடிப்பைப் பற்றி மட்டுமின்றி, சினிமாவின் தரம், இசை, பாடல்கள், தற்கால சினிமாவின் தரக்கேடு உள்ளிட்ட பல அம்சங்களும் இந்நூலில் அலசப்பட்டிருக்கின்றன. தெய்வப்பிறவி, முதல் தேதி, ரங்கூன் ராதா ஆகிய படங்களில் சிவாஜியின் நடிப்புத் திறனை நூலாசிரியர் வர்ணித்திருக்கும் விதம், அப்படங்களைத் தேடிப்பிடித்து மீண்டும் நம்மை பார்க்கத் தூண்டுகிறது. பழநி ஒரு தோல்விப்படம்தான்; […]

Read more

இராமாயண ரகசியம்

இராமாயண ரகசியம், தமிழருவி மணியன்,கற்பகம் புத்தகாலயம், பக்.208, விலை ரூ.140. வால்மீகி இயற்றிய ராமாயண காவியத்தை தமிழில் வழங்கிய கம்பன் அதை தமிழ்ப் பண்புகளுக்கு ஏற்ப எவ்வாறு சீராக்கி வழங்கியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும். தமிழருவி மணியனின் இந்த நூல், வால்மீகி மற்றும் கம்பனின் விவரிப்புகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை மிக நன்றாகவே எடுத்துக் கூறுகிறது. அது மட்டுமின்றி, நூலாசிரியரின் ஆழ்ந்த தமிழ்ப் புலமையும், மொழி ஆளுமையும் வாசகர்களை ஈர்க்கும் வகையில் நன்கு வெளிப்பட்டுள்ளன. பொதுவாக இலக்கியங்களில் எதிர்நாயகனின் நற்பண்புகளைப் […]

Read more

தமிழருவி

தமிழருவி, தமிழருவி மணியன், விகடன் பிரசுரம், 757, அட்ணணாசாலை, சென்னை 2, பக். 320, விலை 115ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-6.html தமிழருவி மணியனின் துணிச்சலான அரசியல் விமர்சனங்கள், இந்த நூலில் காணப்படுகின்றன. ஒரு குடும்பத்தில் தனி மனிதர் ஒருவர் தவறு செய்தால், பாதிக்கப்படுவது அந்த குடும்பத்தினர் மட்டுமே. ஆனால் அரசியலில் நுழைந்து பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் தவறு செய்தால், அதனால் பாதிக்கப்படுவது, நாடும், நாட்டு மக்களும்தான் என அரசியலில் உள்ள அழுக்கை கட்டுரைகளில் இவர் […]

Read more

மாற்றங்களின் நாயகன் ராகுல்காந்தி

மாற்றங்களின் நாயகன் ராகுல்காந்தி, சேவியர், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ், 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர், சென்னை 16, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-493-9.html பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராகுல் காந்திதான் பிரதமர் என்று பொதுவாக பேச்சு அடிபடுகிறது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அருமையாக விறுவிறுப்பான நாவல்போல் எழுதியுள்ளார் சேவியர். இந்திய மக்களுக்கு சேவை செய்வதே எனது லட்சியம் என்று அவர் சபதம் செய்த நிகழ்ச்சி வெளிநாட்டுப் […]

Read more

கனவு மெய்ப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும், தமிழருவி மணியன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 600002, பக்கங்கள் 192, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-834-1.html தேசிய, இலக்கிய படைப்பாளி தமிழருவி மணியன். எழுத்திலும், பேச்சிலும் வெற்றிக் கொடி நாட்டிய இவர் மகாகவி பாரதியாரின் கவிதைகளிலும், கட்டுரைகளிலும், வாழ்விலும் புதைந்து கிடக்கும் புதுமைகளை, இந்த நூலில் வெளிப்படுத்துகிறார். தன்னைப் பற்றியே நினைத்து வாழ்ந்த சராசரி மனிதர்களுக்கு நடுவே மண்ணைப் பற்றியே சிந்தித்து செயற்பட்ட மகாகவியைக் காட்டுகிறார் மணியன். பாரதியைப் புதிய […]

Read more

சமர்ப்பணம்

சமர்ப்பணம், யோகி ராம்சுரத்குமார் வாழ்க்கை வரலாறும் போதனைகளும், ஆர்,கே. ஆழ்வார், யோகிராம் சுரத்குமார் டிரஸ்ட், திருவண்ணாமலை, பக்கங்கள் 236, விலை 80ரூ. திருவண்ணாமலைக்கு பல சிறப்புகள் உண்டு. சேஷாத்ரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷி போன்ற மகான்கள் வாழ்ந்த பூமி. இந்த நகரின் ஆன்மிக சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் விசிறி சாமியார் என அன்பர்களால் நேசிக்கப்பட்ட யோகிராம் சுரத்குமாரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தன்னை ஒரு பிச்சைக்காரன் என்று சொல்லிக் கொள்வது இவர் வழக்கம். இவருடைய ஒரு பார்வைக்கும், நல்லாசிக்கும் பலர் […]

Read more