நல்லன எல்லாம் தரும்

நல்லன எல்லாம் தரும், டாக்டர் சுதா சேஷையன், வானதி பதிப்பகம், விலை 120ரூ. ஏராளமான ஆன்மீக கட்டுரைகளை எழுதி, தனக்கென தனி இடத்தைத் தக்கவைத்து இருக்கும் மருத்துவர் சுதா சேஷையன் இந்த நூலில் 23 கட்டுரைகளைத் தந்து இருக்கிறார். அனைத்து கட்டுரைகளும் கடவுள் என்ற ஒன்றை மையமாக வைத்து சிந்தனை கருவூலமாக அமைக்கப்பட்டு இருக்கின்றன. பல சமஸ்கிருத நூல்களில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டு இருப்பது, அவரது சமஸ்கிருத புலமையையும், அந்தக் கருத்துகளை எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் கொடுத்து இருப்பது அவரது தமிழ்ப் […]

Read more

நலம் தரும் நாராயணா

நலம் தரும் நாராயணா, டாக்டர் ச.தமிழரசன், குறிஞ்சி பதிப்பகம், விலை 80ரூ. ஆழ்வார்கள் பலரது வரலாறு, தமிழகத்தில் ஆழ்வார்களால் சாசனம் செய்யப்பட்ட கிருஷ்ணரின் 5 கோயில்கள், தாமிரபரணி நதி அருகே அமைந்து இருக்கும் நவ திருப்பதிகள் ஆகியவற்றை நேரில் பார்த்தும், அவை தொடர்பாகக் கேட்டவை, அறிந்தவை, உணர்ந்தவை ஆகியவற்றையும் இக்கால சூழலுக்கு ஏற்ப ரசித்துப் படிக்கும் வகையில் தந்து இருக்கிறார் ஆசிரியர். அரியும் அரனும் ஒன்று என்பதற்கு அவர் அறிவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் தரும் விளக்கம் வியப்பை அளிக்கிறது. நன்றி: தினத்தந்தி, 21/2/21 […]

Read more

காடர்

காடர், வே. பிரசாந்த், எதிர் வெளியீடு. காட்டையும் காட்டில் வாழும் பழங்குடிகளையும் மையமாகக்கொண்டு ஒரு தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு வெளியாவது அபூர்வம். அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது காடர் சிறுகதைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள எல்லா கதைகளும் வெவ்வேறு கதைக்களங்களின் வாயிலாகக் காட்டைச் சார்ந்த வாழ்க்கையின் நாம் பார்க்காத பக்கங்களைத் திறந்து காட்டுகின்றன. நன்றி: இந்து தமிழ், 09/1/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030943_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

உயிரைக் குடிக்கும் புட்டிநீர்

உயிரைக் குடிக்கும் புட்டிநீர், நக்கீரன், காடோடி பதிப்பகம், புட்டிகளில் தண்ணீரை அடைத்து விற்கும் நிறுவனங்கள் தண்ணீரை விற்பதில்லை, ஞெகிழிப் புட்டிகளையே விற்கின்றன’ என்கிற விமர்சனம் தீவிரமடைந்துவருகிறது. இன்று காணும் இடமெல்லாம் ஞெகிழித் தண்ணீர்புட்டி குப்பை மலைகள் சர்வசாதாரணமாகிவிட்டன. உண்மையில் இந்த புட்டிநீர் எப்படிப்பட்டது, சுற்றுச்சூழல்-பொருளாதாரம்-உடல்நலத்துக்கு அது இழைக்கும் தீங்குகள் என்னென்ன என்பது குறித்து விவாதிக்கும் இந்தக் குறுநூல் அதிர்வுகளை ஏற்படுத்திய ஒன்று. அதன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. நன்றி: இந்து தமிழ், 09/1/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030301_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

வாழும் மூதாதையர்கள்

வாழும் மூதாதையர்கள், அ. பகத்சிங், உயிர். தமிழகத்தில் உள்ள பதிமூன்று பழங்குடி இனங்களின் இனவரைவியல் கூறுகள், பண்பாட்டுத் தனித்தன்மைகள், வாழ்வியல் நெருக்கடிகள் ஆகியவற்றைப் பற்றி ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இருளர்கள், காடர்கள், காணிகள், காட்டுநாயக்கர், கோத்தர், குறும்பர், குறுமன், மலையாளிகள், முதுவர், பளியர், பணியர், சோளகர், தோடர் ஆகிய பழங்குடிகளை இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது. நன்றி: இந்து தமிழ், 09/1/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030959_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

பாம்பு மனிதன் ரோமுலஸ் விட்டேகர்

பாம்பு மனிதன் ரோமுலஸ் விட்டேகர், ஸாய் விட்டேகர், தமிழில்: கமலாலயன், வானதி. தமிழகத்தை மையமாகக்கொண்டு பணியாற்றிய உலகறிந்த ஊர்வன அறிஞர் ரோமுலஸ் விட்டேகர். அமெரிக்காவில் பிறந்திருந்தாலும் இந்தியப் பாம்புகள், ஊர்வனவற்றைப் பாதுகாப்பதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். சென்னை கிண்டியில் உள்ள சென்னை பாம்புப் பண்ணை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள சென்னை முதலைப் பண்ணை ஆகியவற்றை நிறுவியவர். விரிவான ஆராய்ச்சிப் பணிகள் மூலம் இந்தியாவில் பாம்புகள், முதலைகள் பாதுகாப்புக்குப் பெரும் பங்காற்றியவர். அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் தமிழில் சிறப்புற வெளியாகியிருக்கிறது. நன்றி: இந்து […]

Read more

சூழலியல் அரசியல் பொருளியல்

சூழலியல் அரசியல் பொருளியல், கி. வெங்கட்ராமன், பன்மை வெளி. நுகர்வே இன்றைய சமூகத்தின் மையமாக இருக்கிறது. நுகர்வு உலகத்தையும் சந்தையையும் பாதுகாக்கும் வேலையை மட்டுமே அரசு செய்துவருகிறது. மனித வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட எதுவும் முக்கியத்துவம் பெறுவதில்லை. மாறாக நுகர்வு, சந்தை வளர்ச்சி வாதமே மையமாக இருக்கிறது. அதன் பல்வேறு பரிமாண ஆபத்துகளை இந்த நூல் எடுத்துரைக்கிறது. நன்றி: இந்து தமிழ், 09/1/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030957_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

மகரந்தம் தூவும் மலர்கள்

மகரந்தம் தூவும் மலர்கள், அன்புச்செல்வி சுப்புராஜு, நிவேதிதா பதிப்பகம், விலை 130ரூ. தம்மை முழுமையாக ஈடுபடுத்தி எழுதுவதை முதன்மையாகக் கொண்டவை தன்முனைக் கவிதைகள் எனப்படுகின்றன. கவிதை உலகில் விருதுகள் பெற்ற பிரபல பெண் கவிஞர்கள் 26பேர்களின் தன்முனைக் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த நூலில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. வாழ்வியல் யதார்த்தம், தத்துவம், காதல் போன்ற பண்புகளை இந்தக் கவிதைகளில் காணமுடிகிறது. நன்றி: தினதந்தி, 17/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

அன்னை தெரசா

அன்னை தெரசா, கள்ளிப்பட்டி சு.குப்புசாமி, ஏகம் பதிப்பகம், விலை 55ரூ. வாழ்க்கை வரலாறு என்ற வரிசையில், அன்னை தெரசா, ராமானுஜர், போதிதர்மர், நெல்சன் மண்டேலா, காந்தியடிகள், அடால்ப் ஹிட்லர், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, பாரதியார், அம்பேத்கர், காமராஜர், கக்கன், எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, சிவாஜிகணேசன் ஆகியோரின் வாழ்க்கை குறிப்பு சுருக்கமாகவும் சிறப்பாகவும் தனித்தனி நூல்களில் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினதந்தி, 17/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை, சித்ரா லட்சுமணன், எழுத்து பிரசுரம், விலை 340ரூ. தமிழ் சினிமா உலகில், திரைக்குப் பின்னால் நடைபெற்ற காதல், மோதல், துரோகம் போன்ற பலதரப்பட்ட சம்பவங்கள் இந்த நூல் மூலம் வெளிச்சத்துக்கு வந்து இருக்கின்றன. நடிகர், நடிகைகள் மட்டும் அல்லாது, திரைப்படத்துறை சார்ந்த அத்தனை பிரிவினர் வாழ்வில் நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வுகள், இதுவரை அறியப்படாத ஆச்சரியமான செய்திகள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய கடிதம், பல பிரபலங்கள் போராட்ட வாழ்வுக்குப் பின் திரைப்படத்துறையில் நுழைந்த கதை, சிவாஜி […]

Read more
1 10 11 12 13 14 223